பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ நச்சுயிரிகள்‌ 197

ஒரு செல் உயிரினங்கள், கோனியேலாக்ஸ் பைரோடினியம் போன்ற ஒரு செல் டைனோபிளே ஜலட்டுகள் (படம் 1) நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நச்சைக் கொண்டுள்ளன. இவை மிகுந்துள்ள நீரை ஆளி (oyster) வடித்துண்ணும். அம்மெல்லுடலி களை உண்ணும் மளிதர்கள் வாதம் போன்ற நோய் களுக்கு உள்ளாகின்றனர். கடல் கடல் நச்சுயிரிகன் படம் 2,3 பைசாலியா, கொட்டும்செல் குழி உடலிகள் (coelenterates). லிரியோப், சார்சியா மில்லிபோரா, பைசாலியா (படம் 2) போன்றவற் றின் நீள்புலன் உறுப்புகளில் (tentacles) காணப்படும் நிமடோசிஸ்ட் (nematocyst) (படம் 3) என்னும் கொட்டும் செல்கள், மனிதனின் உடல் மேல் போது நஞ்சுடைய பூச்சிக்கடி போல் தோல் சிவந்து வீங்கும். வயிற்று வலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவையும் தோன்றும். ஒருவேளை இறக்கவும் நேரிடலாம். படும். ஆ ஆரிலியா, கேரிப்டியா கிரைசாரோ, சையானியா பெலாஜியா, ரைசாஷ்டேமோ (படம் 4) போன்ற ஜெல்லி மீன்கள் (சொரி) மனிதனைத் தாக்கும்போது சவுக்கடி ஏற்பட்டாற் போல் தோல் தடிப்புகளும், மூச்சுத் திணறலும், இறப்பும் ஏற்படக்கூடும். முள்தோலிகள் (echinoderms). ஆஸ்டிரியாஸ், ஆஸ்டிரினா. ஆஸ்ட்ரோபெக்டன் எக்கினாஸ்டர், சொலாஸ்டர் போன்றவற்றின் தசைப்பகுதியை உண்ணும் மனிதர்கள் இறந்து போயிருக்கின்றனர். இவ்வுயிரினங்களின் மேல்தோல் பகுதியில் காணப்படும் சுரப்பிச் செல்கள், நச்சைக் கொண்டுள்ளமையால் இவற்றைத் தொடும்போது தோல் சிவந்து தடிப்பாக மாறுகின்றது. சில இன முள்தோலிகளின் இனப் பெருக்க உறுப்புகளில் ஒருவித நச்சுத்தன்மையுள்ளது. இவற்றை உண்பதால் உயிருக்குக் கேடு ஏற்படலாம். படம் 4 ரைசாஷ்டோமா படம் 5. படம் 6. கோளஸ் கோனஸின் நச்சுப்பல் 197