198 கடல் நச்சுயிரிகள்
198 கடல் நச்சுயிரிகள் ஒரு முள்தோலிகளைச் சார்ந்த காய்களின் (sea cucumbers) கடல் வெள்ளரிக் சில இனங்களில் ஹாலோது சின் என்னும் நஞ்சுண்டு. அவற்றை உண்பவர்களின் உடல் நலம் பாதிக்கக்கூடும். கொகெய்ன் என்னும் நச்சை ஒத்துள்ள இந்த நச்சு நரம்புப்பாதையைத் தடை செய்துவிடும். மெல்லுடலிகள் (molluscs) . கோனஸ் (படம் 5) என்னும் இனத்தைச் சார்ந்த மெல்லுடலிகள் கேடு தரத்தக்கவை. இவை அரைவைப் பற்களால் (படம் 6) மனிதனின் உடலில் நஞ்சைச் செலுத்திப் பாதிப்பை ஏற்படுத்தும். காயம்பட்ட இடம் உணர்வற்றுத் தீப்புண் போன்று எரிச்சலை உண்டாக்கும். குளவி கொட்டுவது போன்ற வலி பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருக்கும் என அறியப்பட்டுள்ளது. கொப்புளங்களும், வாத நோய்களும், மங்கலான பார்வையும். குமட்டலும் ஏற்படக்கூடும். மியூரெக்ஸ் என்னும் மெல்லுடலிகளில், மனிதர்களைப் பாதிக் நின் மியூராக்சின் என்னும் நச்சு உள்ளது. தலைக் நாலுடலிகளைச் (cephalopods) சார்ந்த ஒரு சில நச்சுள்ள ஆக்டோபஸ் இனங்களை ஜப்பானியர் உண்டு இறந்துள்ளனர். தாடைகளால் கூரிய காயங்களை குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல், தலைவலி, வாதம் போன்ற நோய்களும் இவ்விலங்கினங்களை உண்பதால் ஏற்படு கின்றன. சில தலைக்காலுடலிகள் செஃபாலோடாக் சின் என்னும் நச்சை உமிழ்நீரில் கொண்டுள்ளன. வை தம் உண்டாக்கும். இவை கடித்த இடம் தேனீ கொட்டி யதுபோல் கடுப்பதோடு, காயத்திலிருந்து வெளிப் படும் இரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளிப் படும். காயம் சிவந்து, எரிச்சலைத் தோற்றுவிக்கும். வாயும், நாக்கும் உணர்வற்றுப்போகும். மங்கலான பார்வை, வாதம் இவற்றையும் தோற்றுவிப்பதோடு இறப்பையும் ஏற்படுத்தக்கூடும். மீன்கள். தாடையற்ற சில மீன்களின் தசைப் பகுதியை உண்பதால், குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்குப் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சில திருக்கை இனங்கள் (படம் 7) கூரிய முள்களையும் (படம் 8) நச்சுப் பைகளையும் வால் பகுதியில் கொண்டு மனிதனைத் தாக்கும்போது, நச்சு உடலில் கலக்கிறது. இதன் நச்சு, புரதத்தால் ஆனதால் இரத்த ஓட்ட மண்டலம், சுவாச மண்டலம், மைழ நரம்பு மண்டலம் போன்றவற்றைத் தாக்கி மனிதனுக்கு மரணத்தைத் தரும். பஃபர் மீன் (படம் 9) மனிதனின் சுவாச உறுப்பு களைப் பாதிக்கக்கூடிய டெட்ரோடோட்டாக்சின் என்னும் நச்சைக் கொண்டுள்ளது. இம்மீனை உண்ட 10-45 நிமிடங்களில் தலைச்சுற்றலும், வெளிறிய தோற்றமும். நாக்கு, கை, உதடு. விரல்கள் போன்றவை உணர்வற்றுப்போதலும் ஏற்படுகின்றன. படம் 7. திருக்கைமீன் படம் 8. திருக்கைமீனின் வால்முள் . பாதிக்கப்பட்டோர் உமிழ்நீரையும், வேர்வையையும் மிகுதியாக வெளியிடுவர். தலைவலி, குறைந்த இரத்த அழுத்தம், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற துடுப்பி நோய்கள் தோன்றக்கூடும். தேள் மீனின் லுள்ள முள்கள் மனிதன் உடலில் காயப்படுத்து கின்றன. ஆமைகளில் கேரட்டா எரிட்மோகேலிஸ் டெர்மோகேவிஸ் போன்றவற்றைச் சார்ந்த சில இனங்களின் இறைச்சியை உண்பதால் குமட்டல் வாந்தி, வயிற்றுப்போக்கு, வெளிறிய உடல், தலை வலி, வீக்கம் போன்ற நோய்க்குறிகள் ஏற்படுகின்றன. . படம் 9. பஃபர்மீன்