பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ககனைட்‌

2 ககனைட் நோய் அறிதல். தொடக்கத்தில். வெறும் சளிக் காய்ச்சலாக உள்ளபோது இந்நோயை உறுதிப் படுத்துவது இயலாது. பள்ளி, பக்கத்து வீடு ஆகிய இடங்களில் பிற குழந்தைகளுக்குக் கக்குவான் இரு மல் இருந்தால் ஐயம் தோன்றலாம். அந்நிலையில், குழந்தை இருமும்போது நுண்ணுயிர்ப் பிரிவில் இதற் கெனத் தயாரித்த ஒரு தட்டை முகத்தின் எதிரில் பிடித்து, அதில் படியும் சளித் துளிகளில் இக்கிருமிகள் உள்ளனவா என்று கண்ட, உறியலாம். பார்டெட் - சுங்கு (Bordet - cengu) வளர்களம் உதவுகிறது. தொடர் இருமல் தொடங்கி, கேவுதல் எழும் நிலையில் ஐயம் தீரும். பிறகு விடா இருமல் உண்டாகும். மார்பில் நிணநீர் முண்டுகள் பெருத்துப் போவதும் மூச்சுக் கிளைக்குழல் விரிவடைவதும் குரல் வளை டிப்தீரியா நிலை அடைவதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிற நிலைகளாகும். மருத்துவம். எரித்ரோமைசின், குளோரம்ஃபெனி கால், சல்ஃபா வகை மருந்துகள் சிறந்தவை. தொடக் கத்திலேயே கொடுத்தால் விரைவில் நலமளிக்கும். ஸ்டீராய்டு வகை மருந்தைத் தொடங்கி மெல்லச் குறைத்துக் கொள்வதால் பயன் கிடைக்கிறது என்றும் அறியப்பட்டுள்ளது. கேவுதல் தொடங்கிய பின் மருந்துகள் மிகுதி யாகப் பயனளிப்பதில்லை. அப்போது இருமல், வாந்தி ஆகியவற்றைத் தடுக்கவும் தூக்கம் ஏற்படுத் தவும் அவ்வவற்றிற்கு ஏற்ற மருந்துகளைத் தரலாம். T இருமல் இல்லாதபோது நல்ல ஊட்டம் தரக் கூடிய குழந்தைக்குப் பிடித்த உணவாக, அவ்வப் போது தருவது குழந்தையின் உடல் தளராதவாறு பார்த்துக் கொள்ள உதவும். தடுப்புமுறை. நோய் வந்த குழந்தையை ஆரம்பம் முதலே பிற குழந்தைகளோடு பழகாமல் பார்த்துக் காள்ள வேண்டும். பிறந்த பிறந்த குழந்தை வளரும் நிலையில் டி.பி.டி. எனப்படும் முத்தடுப்பு ஊசி மாதம் ஒரு முறை என மூன்று மாதங்களுக்குக் கொடுத்தால், கக்குவானை மட்டுமன்றி, தொண்டை அடைப்பான். இசிவு நோய் ஆகியவற்றையும் தடை செய்யலாம். கா. நடராசன் ககனைட் தொகுதியைச் கனிமமாகும். இது செஞ்சமச் சதுரப்படிகத் (isometric system) சேர்ந்த ஒரு ஸ்வீடன் நாட்டு வேதியியல் வல்லுநர் சுகன் நினை வாக இப்பெயர் இக்கனிமத்துக்கு இடப்பட்டுள்ளது, இதன் படிகங்கள் எண்முகப்பட்டைக் கூம்பு வடிவி லும், பன்னிரண்டு பட்டைக் கூம்பு வடிவிலும் (dodecahedron) இயற்கையில் காணப்படுகின்றன. இப்பக்கங்களில் நெடுக்கு வரிகளும், வேதியியல் சிதைவுக் குழிகளும் காணப்படுகின்றன. இதன் வேதியியல் உட்கூறு, ZAI,O,, Z.OAl,0, ஆகும். இதில் துத்தநாக ஆக்சைடு 44.3%. அலுமினிய ஆச்சைடு 55.7% என்ற அளவிலும் உள்ளன. சில நேரங்களில் துத்தநாகத்திற்குப் பதி லாக மாங்கனிஸ் அல்லது இரும்பு மூலக்கூறுகள். உட்கூறில் இடம் பெயர்ந்து காணப்படுகின்றன. அலுமினியத்திற்குப் பதிலாக மூவிணைவய இரும்பு (Fe) உட்கூறில் இடம் பெயர்ந்து காணப்படும். இதனுடைய பிளவு, பட்டைக்கூம்பு வடிவப் பக்கத் தில் (111) சிறிது தெளிவற்றுக் காணப்படும். இப் பக்கத்தை இது இரட்டுறல் தளமாகக் (twining plane) கொண்டுள்ளது. து சுகனைட், சங்கு முறிவைக் கொண்டுள்ளது. எளிதில் நொறுங்கும் தன்மை உடையது. இதன் மிளிர்வு பளிங்கு போன்றது. சில நேரங் களில் மெழுகு போன்ற மிளிர்வில் காணப் படும். இதன் கடினத்தன்மை 7.5-8; அடர்த்தி 4-4.6. சாதாரண முறையில் இதை நோக்கும் கருநீலப் போது கரும்பச்சை, சாம்பல் பச்சை. பச்சையாகவும், கருநீலநிறமாகவும், மஞ்சள் செம் பழுப்பு நிறமாகவும் இருக்கும். இதன் உராய்வுத் தூள் சாம்பல் நிறமாக உள்ளது. குறையொளி - ஊடுருவு தன்மையில் இருந்து ஒளிகசியாத் தன்மை உடையது. ஸ்பீனல் கனிமத்தில் து அதிகத் துத்த நாக ஊடுருவலால் தோன்றியதாகும். எனவே பெரும்பாலும் இதன் ஒளிப்பண்புகள் ஸ்பீனலின் ஒளிப்பண்புகளை ஒத்திருக்கும். இதன் ஒளிவிலகல் எண் 1.719 2.12 வரை மாறுபடுகிறது. இதன் வேதியியல் உட்கூறைப் பொறுத்து இவ்வெண் மாறு படும். மெருகூட்டப்பட்ட இதன் கனிமச்சீவல் பழுப்பு நிற வெள்ளையாகவும். பழுப்புநிறத் துகள் உருவம் (brownish tint) கொண்டும் காணப்படும். இதன் ஒளி எதிர் பலிப்பின் வீதம் சிவப்பு-ஆரஞ்சு நிறங்களுக்கு 12.5% ஆகவும். பச்சை நிறத்திற்கு 15% ஆகவும் காணப்படுகிறது. இக்ககனைட்டின் மாற்றுக் கனிமங்கள் அட்டு மலைட் அல்லது துத்தநாகக் ககனைட், டைசலைட் அல்லது துத்தநாக மாங்கனீஸ் இரும்பு ககனைட் (Zr. Fe, Mn)O (Al, Fe},Og, கிரிட்னோனைட் அல்லது துத்தநாக இரும்பு ககனைட் (Zn, Fc,M,0 (Al,Fe),0,) ஆகும். மணிகளாகவும் இவை படிகங்களாகவும் கிடைக்கின்றன. இதன் சிறப்பு அடர்த்தி 1.48-4.89 வரை காணப்படும். மேலும் இது ஒளி கசியாத் உடையது. தன்மை ஊதுகுழல் ஆய்வின்போது இக்குசுனைட்டுக் கரிக் குழியில் போராக்ஸ் மற்றும் சோடா முதலியவற்றைக் கலந்து ஊது குழலினால் வெப்பமூட்டும்போது துத்தநாக ஆக்சைடு, கரிக்குழி ஓரங்களில் ஒரு படிவு போலப் படியும். பரவல். துத்தநாகப் படிவுகளிலும் படிக உருவான தாள்படலப் பாறைகளிலும் வை காணப்படு