கடல்நீர் இயல்புகள் 207
கடல் நீரில் கரைந்துள்ள சில முக்கிய தனிமங்கள் குளோரின். இத்தனிமம் குளோரைடு என்னும் மின்தூளாகக் காணப்படுவதோடு, நீரின் மொத்தக் கரைபொருள் எடையில் 55% உள்ளது. சோடியம். கடல் நீரில் கரைந்துள்ள நேர் மின் னாற்றல் உள்ள மின்துகள்களில் இது மிக அதிக மான அளவைக் கொண்டுள்ளது. க கந்தகம். இது சல்ஃபேட் என்னும் எதிர் மின் துகளாகக் காணப்படுகிறது. ஆக்சிஜன் மிகவும் குறைவான பகுதிகளில் சல்ஃபேட்டின் ஒரு பகுதி சல்ஃபைடு என்னும் நச்சுவளியாக மாறுகிறது. கால்சியம். சுண்ணாம்புப் பொருள் கடலில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஓடுகளைப் பெற்றுள்ள கடலுயிரிகள் அவ்வோடுகளை உண் டாக்க இப்பொருளைச் சுற்றுப்புறச் சூழலிலிருந்து மிகுந்த அளவில் பெறுகின்றன. நதியிலிருந்து போதிய அளவில் சுண்ணாம்புச்சத்து எப்போதும் கடலில் சேர்வதே இதற்குக் காரணமாகும். நீரில் உள்ள கால்சியத்தின் அளவைப் பொறுத்துக் கால்சியம் கார்பனேட் என்னும் உப்பு கார்பன்டை, -ஆக்சைடு டன் சேர்ந்து தோன்றுவதாலும் நீரில் இதன் அளவை நிர்ணயிப்பதாலும் இதன் சிறப்பு நன்கு விளங்கும். பொட்டாசியம். இது நேர் மின்னாற்றலைப் பெற்ற நான்காம் முக்கிய தனிமமாகும். ஒரு சில பாசி இனங்கள் சுற்றுப்புறச் சூழலிலிருந்து பொட் டாசியத்தை ஈர்த்துத் தம்முள் தேக்கி வைப்பதால் கடல் நீரில் இவற்றின் அளவு பெரும்பாலும் உயிரி னங்களைப் பொறுத்து மாறுபடும். கடல் நீரில் மட்டுமன்றிக் கடலின் அடிமட்டத்தில் காணப்படு கின்ற ஒரு சில கனிவள ஆற்றலிலும் இது காணப் படும். கார்பன். இத்தனிமம் கார்பன்டை ஆக்சைடு, கார்பானிக் அமிலம், பைகார்பனேட், கார்பனேட் மற்றும் உயிருள்ள, உயிரற்ற கரிமப் பொருள்களில் முக்கிய பகுதியாக விளங்குகின்றது. சுண் ஸ்ட்ரான்சியம். ஒரு சில உயிரினங்களின் ணாம்பு நீற்றலான ஓடுகளில் இத்தனிமம் பெரும் பங்கு வகிக்கிறது. போரிக் போரான். இது சிதைக்க முடியாத அமிலத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது ஒரு சில உயிரினங்களிலும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சிலிகான். மிதக்கும் ஓர் அணுத் தாவரமான டையாடம்களிலும் மற்றும் சில உயிரினங்களின் ஓடுகளில் மூக்கியமானதாகலும் விளங்குகின்றது. மேற்கூறிய உயிரினங்கள் கடலின் மேற்பரப்பில் மிகுந்த அளவில் உள்ளமையால் இத்தனிமம் இங்கு குறைவான அளவிலும் ஆழப் பகுதிகளில் மிகுந்தும் கடல் நீர் இயல்புகள் 207 காணப்படுகிறது (படம்-10). கடல் நீரைவிட நதி போன்ற நன்னீர் நிலைகளில் இத்தனிமம் மிகவும் அதிகமான அளவில் உள்ளதென்பது குறிப்பிடத் தக்கது. பல்வேறு பெருங்கடல்பகுதிகளில் பரளியுள்ள சிலிகேட் அளவுகளைப் படம்10 இல் காணலாம். ஃபுளூரின். இது பெரும்பாலும் பெருங்கடல் பகுதிகளிலும் குறிப்பாக 1.மி.கி./லிட்டர் என்னும் அளவிலேயே காணப்படுகின்றது. குளோரின், புரோமின் போன்ற தனிமங்கள் குளோரைடு, புரோ மைடு என்னும் நிலையில் உள்ளது போல் இதுவும் ஃபுளோரைடு என்னும் தனிமமாகவே காணப்படு கிறது. இத்தனிமத்தின் இன்றியமையாமை இதுவரை அறியப்படவில்லை. அலுமினியம். கடல் நீரில் மிகவும் குறைந்த அளவில் (0.16-0.18 மி.கி/லிட்டர்) காணப்படும் இத்தனிமம் நதியிலிருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடில் மிகவும் அதிகமான அளவில் இருப்ப தால், பெரும்பாலும் அண்மைக்கடல் பகுதிகளில் காணப்படுகிறது. பாஸ்ஃபரஸ். உயிரினங்களுக்குக் குறிப்பாக மிதக் கும் ஓர் அணுத் தாவரங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் தேவைப்படுவதால் கடலில் இத்தனிமத்தின் அளவு பெரும்பாலும் இதைப் பயன்படுத்துகின்ற உயிரினங்களின் அடர்த்தியைப் பொறுத்தே அழை கின்றது. கனிம பாஸ்ஃபரஸ் கடலின் மேற்பரப்பில் 0.009.மி.கி/லிட்டர் என்னும் அளவில் காணப்படு கிறது. பாஸ்ஃபரஸ் கடலுக்குப் பெரும்பாலும் நதிகள் மூலமே எடுத்துச் செல்லப்படுகிறது. பல் வேறு பெருங்கடல் பகுதிகளில் பரவியுள்ள பாஸ்ஃ பேட் அளவுகளைப் படம் 10 இல் காணலாம். பேரியம். இது பெரும்பாலும், கடலின் தரைப் பகுதிகளிலும் உயிரினங்களிலும் காணப்படுகிறது. தன் அளவு மிகக் குறைவாக (0.05 மி.கி./லிட்டர்) இருந்த போதும் ஒருசில கடல் பகுதிகளில் பேட் என்னும் தனிமத்தோடு சேர்ந்து பேரியம் சல்ஃ பேட் என்னும் முண்டுகளாகக் காணப்படுகிறது. சல்ஃ அயோடின். மனிதனுக்குத் தேவையான முக்கியத் தனிமங்களில் ஒன்றான இது பெரும்பாலும் கடல் உணவுகளிலிருந்தே கிடைக்கின்றது. து ஆக்சிஜ னோடு இணைந்து அயோடைடு. அயோடேட் போன்றவையாக மாறுகிறது. கடலுயிரினங்களில் குறிப்பாகக் கடல் பாசிகள் அயோடினைப் பெரிதும் ஈர்த்துத் தேக்குவதால் இவை அயோடினைப் பெறு வதற்கேற்ற முக்கிய மூலப் பொருள்களாகக் கருதப் படுகின்றன. ஆர்செனிக், உயிரினங்கள் பாஸ்ஃபசிற்கு மாற் றாக இதை உண்டு வளர்வது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான உயிரினங்களின் திசுக்களில் இது பெரும் பங்கு பெறுகிறது.