பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கடல்‌ பசு

214 கடல் பசு க தூய கரைப்பகுதிகளில், கரைகளை வந்தடையும் அலை கள், விரைவாக ஆழம் குறைந்த மணல் பகுதியையோ பாறைகளையோ அடையும்போது, அவற்றின் சிகரங் கள் உடைவதால் நுரை உண்டாகிறது. கடற்கரை யைத் தொடர்ச்சியாக வந்தடையும் நுரைகள் வெள்ளைக் குதிரைகள் எனப்படும். கடல்நீரில் உண்டாகும் நுரை, சோப்புநீர், எண்ணெய் போன்ற பொருள்களால் ஏற்படும் நுரைகளைப் போன்று நீண்டநேரம் நிலைத்திருப்பதில்லை. அபி, மயாகே என்னும் ஆய்வாளர்கள் நன்கு வடிகட்டிய, கடல்நீரைக் குப்பியில் அடைத்துக் குலுக்கி, நுரை யுண்டாக்கி ஆய்வு நடத்தியபோது, இவற்றின் நிலைப் போன்ற புத்திறன் வெப்பநிலை, உப்புத்தன்மை வற்றைப் பொறுத்து மாறுபடுவதாகக் கண்டறிந் தனர். இவ்வாறான நீரைக் குலுக்கும்போது. முதலில் தோன்றும் சிறு குமிழ்கள் 0.2 மி.மீ. குறுக்கு விட்டமாகவும், 6 நொடிக்குப்பிறகு சற்றுப் பெரிய 0. 4 மி.மீ. குமிழ்களாகவும் 30 நொடிக்குப் பிறகு இவை 0.5 மி.மீ ஆகவும் மாறுவ தைக் கண்டறிந்தனர். காற்றின் வேகம் 4-5 நொடிகளில் தோன்றுகின்ற நுரை 3-10 நொடி நிலைத்து நிற்பதாக அறியப் பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் தோன்றும் நுரைத்திட்டுகள் காற்று, சூரிய ஒளி போன்றவற்றால் அவற்றினுள்ள குமிழ்கள் நீக்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் கடற்கரை மணல்மேல் பழுப்புநிறத் திட்டாகப் படிவதைக் காணலாம். எனினும், காற் றின் வேசும் குறைவான நேரத்தில் தோன்றும் நுரைத் திட்டுகள், பல நிமிடம் வரை நிலைக்கக்கூடும். நுரைத் திட்டுகளின் நிலைப்புத்திறன் அவற்றின் உள்ளடங்கிய உப்புச்சத்து (nuirient) கரிமப்பொருள் மணல் துகள் கள் மிதக்கும் நுண்ணுயிர்களின் (plankton) அடர்த்தி போன்றவற்றின் அளவுகளாலும் மாறுபடலாம். சான்றாக, காற்றின் வேகம் 4 ஆக இருக்கும்போது, ஆழ்கடல்நீர் மேல்மட்டத்திற்கு எழும் பகுதிகளில் (upwelling) தோன்றும் நுரைகள் 20 நொடியும் ஏனைய பகுதிகளில் 10 நிமிடமும் நிலைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நுரையின் குமிழிகளில் மிதக்கும் நுண்ணுயிர்கள், கரிமப் பொருள்கள் போன்றவை இணைந்து இக்குமிழிகளை நிலைக்கச் செய்வதே இதற்குக்காரணம் ஆகும். . சல்ல கடற்கரையில் தொகுக்கப்பட்ட நுரையை ஆய்வுக்கு உட்படுத்த, முதலில் ஒரு மெல்லிய டைத்துணியின் மூலம் வடிகட்டி, பெரும்பாசி முதலிய வற்றை நீக்க வேண்டும். பின் இரண்டுமணி நேரம் சென்றபின் இந்துரையை மீண்டும் மெல்லிய சல்ல டைத்துணியில் வடிகட்டும்போது நுரை நீர்ம நுரை யாக மாறுவதுடன் அதில் உள்ள குமிழ்களும் நீக்கப் படும். 1 லிட்டர் நுரை நீர்மத்தைப் பெற 50 லிட்டர் நுரை தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நீர்ம நுரையின் அளவையும் எடையையும் கண்ட பின், இது 70 இல் ஒரு மின்னடுப்பில் உலர்த்தப் படும். மீண்டும் எடை கண்டு, ஓர் ஆய்வு உரலில் இட்டு இது துாளாக்கப்படுகின்றது. இத்தூளில் 65-75% சாம்பலும், பல்வேறு பொருள்களும் உள்ளமை ஆய்வின்வழி அறியப்பட்டுள்ளது. ஒரு கிராம் உலர்ந்த நுரைத்தூளில் இரும்பு 20-40 மி.கி. தாமிரம் 4-14 மி. கி. மாங்கனீஸ் 0.4 மி.கி. பாஸ் ஃபேட் 0.6- 0.7 மி. கி. சிலிகேட் 0.1.0.3 மி.கி. நைட்ரேட் 0.1-0.15 மி.கி. போன்றவை இருப்ப தாக அறியப்பட்டுள்ளது. நுரையிலுள்ள இப்பொருள் கள் கடல் நீரிலுள்ளதைவிடப் பலமடங்கு மிகுதி என்பது குறிப்பிடத்தக்கது. காட்டாக, நுரையின் இரும்புச்சத்து கடல்நீரிலுள்ளதைவிட 75,000 மடங்கு மிகுதியாகும். -இரா.சந்தானம் கடல் பசு . இது பாலூட்டி என்னும் பெரும் வகுப்பில், செப்பன் குலேட்டா என்னும் யானை, ஹைராக்ஸ் குழுவின் சிறு பிரிவான சைரீனியா வகையைச் சேர்ந்தது. ப்பிரிவில் டியூகார் ங் (dugong), மானட்டீ ஆகிய இரு இனங்கள் கடல் பசு என்று வகைப்படுத்தப்பட் டுள்ளன.