கடல் பசு 215
கடல் பசு 215 வகை தான்மையான படிவச் சான்றுகள், சைரீனியா உயிரினங்களை இயோசீன் காலத்தவையான 50,000,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கணித்துள்ளன. வற்றில் 20 இனங்கள் பிரிக்கப் பட்டன. வை உலகின் வெப்பக்கடல்கள் அனைத் திலும் பரவியிருந்தன. கடல் பசு என்ற உயிரினம் பெரிய, கடல் வாழ் பாலூட்டி எனலாம். வீட்டுப் பசுவிலிருந்து கடல் பசு மிகவும் வேறுபட்டதாகும். இதன் சதுர அகன்ற வடிவமுள்ள முகவாய்ப்பகுதி பசுமாட்டை ஒத்துள்ளது. உண்டு. னடஸ் டியூகாங் இனத்தில் டியூகாங் டியூகான் (Dugong- dugon) என்னும் ஒரே விதக் கடல்பசுவே ஆனால் மானடடீ இனத்தில் ஃபிளாரிடா முதல் கரீபியன் கடல் வகை டிரைசெச்சஸ் மானெட் (Trichechus manatus) அமேசான் பகுதியில் டிரை இனென்கியுஸ் (Triinunguis) ஆப்பிரிக்காவில் மேற்குக் கடற்கரையில் டிரை செனகேலன்சிஸ் (Tri senegalensis) ஆகிய மூன்று வகைக் கடற்பசுக்கள் உள்ளன. மற்றுமொரு கடல் பசு பெருங்கடலில் 1741 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஸ்டெவ் லார் பசு எனப்படும் ஹைடிரோடாமாலிஸ் ஜைகாஸ் (Hydrodamalis zigas) என்னும் பெரிய டியூகாங் போன்ற உயிரி 7.5 மீட்டர் நீளத்தை எட்டியது. ஆனால் அவற்றின் மொத்த எண்ணிக்கையான 500 உயிரிகளுமே சீல் என்னும் கடல் நாயையும், திமிங் கலங்களையும் வேட்டையாடி ரஷ்யர்களால் பிடிக்கப் பட்டு முப்பதே ஆண்டுகளுக்குள் அழிக்கப்பட்டன. டியூகாங் என்னும் கடல் பசு, மத்திய தரைக் கடல் பகுதியான செங்கடல், கிழக்கு ஆப்பிரிக்கா முதல் பிலிப்பைன் தீவுகள்வரை நியூகினியா, வட ஆஸ்திரேலியா ஆகிய இந்தியப்பெருங்கடல் பகுதி வரையுள்ள கரையோரக் கடல்களில் காணப்படு கிறது. கடல் பக குட்டையான கழுத்தும், துடுப்புப் போன்ற முன்கால்களும் வாலும் கொண்ட தாவர உண்ணியாகும். கடல் பசு 2.2-3.4 மீட்டர் நீளம் வளர்கிறது. மானட்டீ 1.8-2.4 மீட்டர் நீளம் உடையது. 800 கிலோ கிராமுக்கும் மேல் கொண்டது. எடை நீர்வாழ் இனமாயினும் கடல் மணலில் சூரிய ஒளி யில் இளைப்பாறும் பழக்கம் கொண்ட கடல் பசு, சிறு ஒலி கேட்பினும் நீருக்குள் புகுந்து கொள்ளும் தன்மை யுடையது. கரையில் விடப்படும் மானட்டீ வேசு மாக உடம்பை வளைத்து, நெளிந்து உருண்டு நீரை நாடிச்செல்கிறது. நீரில் மூழ்கி இரை உண்ணும் போது சில நிமிடங்களுக்கு ஒருமுறை மேலே வந்து மூச்சுவிடுகிறது. இரண்டு மூச்சுக்கிடையுள்ள பெரும நேரம் 16.5 நிமிடம் என அறியப்பட்டுள்ளது. அதாவது, 16,5 நிமிடத்துக்கு மேல் கடல் பசுவால் நீருக்குள் ஆழ்ந்து இருக்க முடியாது. அமைதி யாக முகவாயை மட்டும் நீர் மட்டத்துக்குமேல் தூக்கி மூக்குத்துளைகளில் தசையாலான வால்வு களை விரித்து ஓசையின்றி மூச்சுவாங்கும். கால்கள் இல்லாமை. பக்க இறகுகள் கொண்ட அகன்ற வாலின் அமைப்புப் போன்றவற்றில் கடல் பசு, திமிங்கலத்தை ஒத்துள்ளது. யானைகளுக் குள்ள பற்களமைப்பு. பால்மடிகள் இவற்றால் இனத்தின் மூதாதையும், கடல் பசுவின் மூதாதையும் ஒரே இனமாயிருக்கலாம் யானை கருதலாம். எனக் கடல் பசு, கடற்கரை அடுத்துள்ள ஆழமற்ற பகுதிகளிலேயே வாழ்கிறது, ஆனால் மானட்டீ வகை, கடல் நீர் உட்புகும் காயல் பகுதிகளிலும், கழிமுக ஆற்றுப் பகுதிகளிலும் சுற்றித் திரிகிறது. இது உருண்டையான, வால்பக்கமாகக் குறுகி இரட்டை யாகக் கூம்பிய, பக்கக்கிளைகளுடன் தட்டையாக வாயில் முடியக்கூடிய உடலமைப்பைக் கொண்டது. முன்கால்கள் உருளையான துடுப்புகளாகச் சீல் என்னும் கடல்நாயின் கால்களை ஒத்திருந்தாலும் விரல்பகுதிகள் நீளமாக உள்ளன. வை சிறியவை யாயிருந்தாலும் திரும்புவதற்கும் புழங்குவதற்கும் உதவுகின்றன : தட்டையாக அகன்று நீந்து வதற்கு உந்து கருவியாகப் பயன்படுகிறது. மேலும் இளைப்பாறும் நேரங்களில், கடல் பசுக்கள் தக்க ஆழத்தில் வாலையூன்றித் தலையை நீருக்கு வெளியே வைத்து நிற்கின்றன. இந்நிலையில் முன்கால் களால் குட்டியை அணைத்தவாறு பால் கொடுக்கும். கடற்கன்னி, கடல் தேவதை எனக் கடற்பயணிகள் குறிப்பிடும் விலங்கு இதுவாகத்தான் இருக்கும். வால் வ கடல் பசுவுக்கு மயிரற்ற தடிப்பான தோல் உண்டு. டியூகாங் உடலில் ஆங்காங்கு ஒற்றை முடி 6.மி.மீ. இடைவெளியில் இருக்கக்கூடும். மேலும் வாயைச் சுற்றித் தடிப்பான மயிர் உண்டு. இத் தகைய மயிரற்ற நிலையால் கடல் பசுவின் உடற் பரப்பு வழவழப்பாக இருக்கும். அத்துடன் தோலின் அடியில் கொழுப்பு மிகுதியாக உள்ளது. அவற்றின் கண்கள் இமையற்றனவாக வட்ட வடிவத்தில் மிசுச் சிறியனவாக உள்ளன. காதுகளும் மிகச் சிறிய துளை களாகவே இருக்கும். துணர கடல் பசுவின் தலை, கழுத்துப் பகுதிகள் பிரித் முடியாத அளவிற்கு உடலுடன் இணைந்து அகன்று, சதுரவடிவமாக, இருமூக்குத் துளைகளு டைய மோவாயுடன் அமைந்திருக்கும். இதன் மேலு தடு வலிவான தசையினாலானது. கடல்பசு இம் மேலுதட்டின் ஓரங்களால் தாவரங்களைப் பற்றித் தின்னும். இதற்கு இரண்டு முன்பற்கள் உள்ளன. அவற்றில் இரண்டாம் பல், பசுவின் வளர்ச்சியுடன் வளர்ந்து, சிறு தந்தம் போல் நீண்டு காணப்படும். பெண் பசுவுக்கு இது வெளியே தெரிவதில்லை.