216 கடல் பஞ்சு
216 கடல்பஞ்சு தாடையிலுள்ள எலும்புத் தகட்டுடன் (bony pads) இதுவும் உணவை அரைக்கப் பயன்படுகிறது. மானட் டீயின் தாடையில் 20-30 அரைக்கும் கடைவாய்ப் பற்கள் (molars) உள்ளன. வை வாழ்நாளில் முன் பக்கம் நோக்கி நகர்ந்து வளருகின்றன. கடல்பசுவின் எலும்புகள் நீர்வாழ் உயிரிகளில் ஓர் இயல்பு மீறிய அமைப்பாகும். கழுத்துப் பகுதியில் 6 கோவை எலும்புகளே உள்ளன. பாலூட்டிகளுக்கு. 7 பொதுவாக கழுத்தில் கோவை எலும்புகள் உண்டு. இவற்றைத் தவிர இவ்வுயிரினத்தின் உடல் கூறு இயல்பு பற்றி எதுவும் தெரியவில்லை. கடல் ணையாகவோ, ஆறு எண்ணிக்கையுள்ள சிறு மந்தையாகவோ கூடும். ஆனால் கடந்த நூற்றாண் டில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் கடற்கரையருகில் 5° கி.மீட்டருக்கு 2°கி. மீட்டர் என்னும் பரப்பளவில் ஒரு மாபெரும் கடல் பசு மந்தை காணப்பட்ட செய்தி உள்ளது, பசு கடல் பசுவின் இனப்பெருக்கம் பற்றியும் அறிய முடியவில்லை. டியூகாங் பற்றி மிகக் குறைவான தகவல்களே உள்ளன. இவை நீண்ட வாழ்நாள் உடையன என்று அறியப்பட்டாலும் அவற்றின் வயது, வளர்ச்சி, இனச்சேர்க்கை, குட்டிகளின் எண்ணிக்கை ஆகியவை அறியப்படவில்லை. மானட்டீ ஆழமற்ற கரைநீரில் பக்கவாட்டில் படுத்தபடி உறவு கொள்வதைக் கண்டதாகக் தகவல் உண்டு. இவற்றின் பேறுகாலம் 152 நாள் என்றும், சாதா ரணமாக ஒரு கன்றே ஈனுகிறது என்றும், குட்டி யைப் பேணும் பழக்கம் தாய்க்கும், தந்தைக்கும் பொது என்றும் அறியலாம். டியூகாங் அரி தாக இரு கன்று போடுவதுமுண்டு. ஆண், பெண் உயிரி களில் குறிப்பிடத்தக்க பால் வேறுபாடுகள் எதுவும் ல்லை. கடல் பசு டியூகாங் தாவரங்களையும், கடல் கோரைகளையும் சோஸ்டிரா என்னும் டியூகாங் புல்லையும் விரும்பி உண்கிறது. ஆனால் மானட்டீ கடற்பாசிகளையும், மிதக்கும் தாவர இனங்களையும், ஆற்றுப்படுகைகளில் வளரும் புல் பூண்டுகளையும் கூட உணவாக ஏற்கிறது. இதனால்தான் கூட வில் நீர்ப் பாசனப் போக்குவரத்துக் கால்வாய்களி லும், கரையோரக் கரும்புக் கொல்லைகளிலும் புல் பூண்டுகளை அழிக்க மானட்டீ வகைக் கடல் பசு பயன்படுத்தப்படுகிறது. கயானா கடல் பசு இறைச்சிக்காகவும், விலையுயர்ந்த தோலுக்காகவும், எண்ணெய்க்காகவும் மனிதரால் மிகுதியாக வேட்டையாடப்படுகிறது. இதனால் இந்த இனம் அரிதாகி வருகிறது. தற்போது வணிக முறையில் இவற்றைப் பிடிப்பது இல்லை என்றாலும் வலைகளாலும் எறிவேல் ஆங்காங்கே உணவுக்காக களாலும் இவை மலேசியர்களால் வேட்டையாடப் படுகின்றன. மிகுந்துள்ள கடல் பசுக்களைப் பாதுகாத்தால் அவற்றின் இனம் பெருகி, பொருளாதாரச் சிறப்புப் பெற வாய்ப்புண்டு. ஏனெனில் கடல் பசுதான் உலகின் ஒரே ஒரு நீர்வாழ் தாவர உண்ணியாகும். கடலில் மனிதனால் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் மிகுதி யான நீர்த் தாவரங்களை அழிக்கவும், அவற்றீன் வழியாக மீன் உற்பத்திக்கு உதவவும் அதனால் ஆமைகளைப் போல் உணவுக்காகவும் கடல் பசு பயன்படுகிறது. வட ஆஸ்திரேலியக் கடல்களில் இன்றும் போது மான எண்ணிக்கையில் டியூகாங் எனும் கடல் பசுக் கள் வாழ்கின்றன. கடல்பஞ்சுகள் ஜ.ஞா.மேகலா தேவதாஸ் இவை ஒரு தாழ்நிலை முதுகெலும்பற்ற விலங்குவகை யாகும். இவற்றில் பெரும்பாலானவை கடலிலும். சில நன்னீரிலும் வாழ்வன; பெரும்பாலும் ஒட்டி வாழும் விலங்குகளாக இருத்தலால், இவற்றின் உயிர்ச்செயல்கள் அனைத்தும் இவற்றின் உடலில் நடைபெறும் நீர்ச்சுழற்சியைப் பொறுத்து அமை கின்றன. பண்டைய இயற்கை அறிவியலாளர்கள் இவற்றைத் தாவரங்கள் எனக் கருதினர். கிரேக்கத் தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் இவற்றை விலங்கு கள் என்றே குறிப்பிட்டார். ஜான் எல்லிஸ் முதன் முதலில் இவற்றில் நீர், சுழற்சியடைவதைக் கண்டறிந் தார். ராபர்ட் கிராண்ட் என்பார் இவற்றை விலங்கு களே என்று நிறுவியதோடு இவற்றைப் புரையுடலிகள் அல்லது துளையுடலிகள் (porifera) என்றும் வகைப் படுத்தினார். ஸ்கூல்ட்ஸ், ஹேக்கல், மாஸ் ஆகியோ ரின் கருவியல் ஆய்வுகளும்,இவை பல செல் உயிரி கள் (metazoa) என்று காட்டின. ஹக்ஸ்லி, புட்ஸ்ச்லி, ஸோல்லாஸ் ஆகியோரின் ஆய்வுகளால் இவை பாராசுவா (parazoa) என்னும் ஒரு தனித் தொகுதி யாகக் கருதப்பட்டன. இவை மனிதனுக்குப் வழியிலும் பயன்படும் பொருளாதாரச் சிறப்புடை யலை. பல பொதுப்பண்புகள். பெரும்பாலானவை ஒட்டி வாழ்பவையாக இருந்தாலும் ஸ்பாஞ்ஜில்லிடே என்னும் தொகுதி நன்னீரிலும், ஏனையவை கடலிலும் வாழ்வன. இவை தனித்தோ கூட்டமாகவோ வாழும் இயல்புடையன. பல கடல்பஞ்சுகள் வெண்மை, சாம் பல், பளபளப்பான மஞ்சள் செம்மஞ்சள், சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களைக் பஞ்சுகள் உட்குழிவுடைய தட்டு, குழல், தண்டு, கொண்டுள்ளன். கடல் கிண்ணம், கோப்பை, ஊது கொம்பு, விசிறி, காளான் போன்ற பல வடிவங்களைக் கொண்டன்