கடல் பஞ்சு 217
கடல் பஞ்சு 217 வாகக் காணப்பட்டாலும் இவற்றில் பல ஒழுங்கற்ற வடிவம் கொண்டவையாகும். உருவ அளவில் இவை ஒரு குண்டூசித்தலை முதலாக, மிகப்பெரிய குளியல் தொட்டி வரை பலவிதமான அளவுகளில் உள்ளன. திசுக்கள் இல்லாமல், செல் அமைப்பு நிலையிலேயே உள்ள இவை பல செல் அமைப்புடன் வாழ்கின்றன. கடல்பஞ்சுகளில் திசுக்கள், உறுப்புகள், மண்டலங் கள் இல்லாமையால், உணவூட்டம், கழிவுநீக்கம். உடலினுள்ளே தேவையான பொருள்களைக் கடத்து தல், இனப்பெருக்கப் பொருள்களை வெளியேற்றுதல் ஆகிய செயல்களைச் செய்ய இவற்றில் கால்வாய் மண்டலம் (canal system) என்னும் அமைப்பு உண்டு. உடலின் உள்ளே பல் இடங்களில் உள்ள காலர் செல்கள் அல்லது கொயனோசைட்டுகள் தமது நீள் இழைகளால் இப்பணிகளைச் செய்கின்றன. மேலும் இவற்றில் வாய், செரிமான மண்டலம் ஆகியவை இல்லை. கொயனோசைட்டுகள் நுண்ணிய உயிர் களை உட்கொண்டு சீரணிப்பதால் இதைச் செல்உள் சீரணம் (intracellular diagestion) எனலாம். மீசைன்கைமிலிருந்து உண்டாக்கப்படும் நுண்முள்கள் (spicules), ஸ்பாஞ்சின் இழைகள் (ipongian fibres) ஆகியன பலவித வேற்றுப் பொருள்களோடு சேர்ந்து உடல் சட்டகமாகப் பயன்படுகின்றன. நரம்புச்செல் கள், உணர் செல்கள் ஆகிய தனித்தன்மையான செல்கள் இல்லை என்றாலும் உடலில் உள்ள அனைத் துச் செல்களும் தூண்டப்பட்டால் சுருங்கும் தன்மை உடையவையாம். மொட்டுவிடுதல், இழப்பு உறுப்பு ஆக்கம் (reduction body formation), ஜெம்மியூல் ஆக்கம் (gemmulation) ஆகிய பாலிலி இனப்பெருக்க (asexual reproduction) முறைகள் இவற்றில் உண்டு. சில இருபாலிகள் (hermaphrodite), சில ஒரு பாலிகள் (unisexual) ஆகும். தனிப்பட்ட இன உறுப்புகள் இவற்றில் இல்லை. உட்கருவுறுதலுக்குப் பின் வளர்ச்சி மறைமுகமானது. பெற்றோரிடம் இருந்து வேறுபடும் இளவுயிரிகள் வளர் உருமாற்றம் (metamorphosis) மூலம் படிப்படியாக முதிர் உயிரி ஆகும். இழக்கப்பட்ட அல்லது அழிவுற்ற உடற் பகுதிகளை மீண்டும் வளர்த்துக்கொள்ளும் இழப்பு மீட்டல் (regeneration ) இவ்வினத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. தம் உடலில் உள்ள துளைகள், பள்ளங்கள் ஆகியவற்றில் பல்வேறு கூட்டங்களைச் சேர்ந்த விலங்குகளைக் கடல்பஞ்சுகள் சார்புயிரி களாகப் பெற்றுள்ளன. கடல் பஞ்சுகள் மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆழம் வகுப்பு - 1. கால்கேரியா. இவை கடவின் குறைந்த பகுதிகளில் வசிக்கும் எளிய கடல்பஞ்சுகள். இவற்றின் சட்டகம் கால்சியம் கார்பனேட்டினாலான தனித்தனியான நுண்ணிய முள்களைக் கொண்டது. எடுத்துக்காட்டு: லியூகோசொலினியா, களாத்ரினா, கரான்ஷியா, சைபா, சைக்கான் என்பன. வகுப்பு - 2, ஹெக்ஸாக்டினெல்லிடா. இவை பெரும் பாலும் ஆழ்கடலில் வாழும் இனங்கள். இவற்றின் சட்டகம் தனித்தனியாகவோ இணைந்தோ உள்ள மணலாலான 6 கதிர்களையுடையது அல்லது மூவச்சு நுண்முள்களைக் (triaxon spicules) கொண்ட தாகும். எடுக்காட்டு: கண்ணாடிக் கடல்பஞ்சுகளான யூப்ளக்டெல்லா, ஹயலோனீமா கியவை. வகுப்பு - 3. டீமோஸ்பாஞ்சியா. இவை பெரும்பாலும் கடலிலும். ஒரு சில நன்னீரிலும் வாழ்லன. இவற்றின் சட்டகத்தில் மணலாலான நுண்முள்களும், ஸ்பாஞ்சின் இழைகளும் உள்ளன. எடுத்துக்காட்டு: களையோனா, ஸ்பாஞ்ஜில்லா ஆகியவை. கடல்பஞ்சுகளின் சட்டகம். சுடல் பஞ்சுகளின் சட்டகம் ஸ்பாஞ்ஜின் இழைகள், பல்வகை நுண்முள் கள் ஆகியவற்றால் ஆனாலும், அவற்றுடன் மணல் துகள்கள் கால்சியப்பொருள்கள் ஆகிய வேற்றுப் பொருள்கள் சேர்ந்து இறுகி உறுதியூட்டுகின்றன.
ஸ்பாஞ்சின். இது கரிமப் பொருளாலான, கடினத் தன்மையுள்ள, நீள் திறனுள்ள பட்டுப்போன்ற இழை ஆகும். இது ஒரு புரதச் சட்டகம் (scleroprotein) ஆகும். இது கொல்லாஜன் என்னும் புரதத்தைப் போன்ற வேதி அமைப்புடையது: நீரில் கரையாதது; கந்தகம் உடையது; இதில் 8 14% அயோடின் உள்ளது. இப்பொருளைச் சுரக்கும் செல்கள் குடுவை வடிவமான (flask shaped) ஸ்பாஞ்சியோ ஃபிளாஸ்கு கள் எனப்படும். நுண்முள்கள். சிறிய ஊசி போன்ற கூரிய முனை வுடைய படிகத்தன்மையுடைய உடல்கள் ஆகும். இவற்றை உண்டாக்கும் செல்கள் ஸ்கிளிரோ பிளாஸ் குகள் (scleroflasks) எனப்படும். பெரும்பாலான நுண்முள்களில் மிகுந்த அளவில் கால்சியம் கார்ப னேட்டும் சிறிதளவு சோடியம், மக்னீசியம் சல்ஃபேட் ஆகியவையும் உள்ளன. நுண்முள்ளைச் சூழ்ந்து ஒரு கரிம உறை உள்ளது. நுண் முள்களை, பெரியமுள் (mega scleres), சிறிய முள் (microscleres) என இரு பெரும் வகைகளாகப் பகுத்துள்ளனர். இவை மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய முள்கள். இவை கடற்பஞ்சின் முதன்மை யான சட்டகம் ஆகும், இவற்றில் 5 வகைகள் உள்ளன. i) ஓரச்சு நுண்முள்கள் (monaxous). இவை எளிய தண்டு போன்ற அல்லது ஊசி போன்ற நுண் முள்கள் ஆகும். இவை ஒரு மைய அச்சின் ஒரு புறமோ இரு புறமோ வளர்ந்து தோன்றும். இவற்றி லும் இரண்டு வகைகள் உண்டு. தண்டுகள். இவ்வகை ஓரச்சு நுண்முள்களில் வளர்ச்சி ஒருபுறமாகவே நடைபெறுவதால் இதன் இரு முனைகளும் சமமற்றவையாக இருக்கும். இவற்றின் அகன்ற முனை ஒரு குண்டூசியின் தலை