பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் பஞ்சு 221

குறுகிய கால்லாய்போல் நீண்டுள்ளது. இக்கால் வாய்க்கு ஏஃபோடஸ் என்று பெயர். எடுத்துக்காட்டு; ஸ்டெல்லேட்டா, ஜியோடியா என்பன. டிப்னோடல் வகை. இதில் ஏஃபோடல் என்னு ம் சிறு கால்வாயைத் தவிர, புரோசோபைலின் மாறு பாட்டால் புரோசோடஸ் என்னும் மற்றொரு கால் வாயும் உண்டாகிவிடுகிறது. எடுத்துக்காட்டு: கோன்ட் ரோசியா,சார்டிசியம், காண்டிலாப்ரம், ரெல்லா. ஸ்பாஞ்ஜில்லா ஆகியவை. இனப்பெருக்கமும் வளர்ச்சியும் ஆஸ்கா கடல்பஞ்சில் பாலிலி இனப்பெருக்கமும், பாலினப் பெருக்கமும் உண்டு. பாலிலி இனப்பெருக்கம் பின் வரும் மூன்று முறைகளில் நடைபெறுகிறது. மொட்டுவிடுதல். கடல்பஞ்சின் உடலின்மேல் வெளிப்பிதுக்கம் தோன்றும். அதற்கு மொட்டு கடற்பஞ்சு 22/ (bud) எனப்பெயர். அம்மொட்டு முற்றிலும் வளர்ந் ததும் தாய் விலங்கிலிருந்து பிரிந்து தனித்து வாழும். அது பிரியாவிட்டால் குழுவாகவே வாழும். எடுத்துக் காட்டு: லியுகோசொலினியா, டொனேஷியா, டெத்தியா, ஆஸ்காரெல்லா என்பன. குறை உடல் உண்டாதல் (reduction body forma- tion). தமக்கு ஒவ்வாத பருவங்களில், கடல்பஞ்சுகள் தைந்து (collapse) குறை உடல்கள் என்னும் சிறு பந்துகளைப் போன்று தோன்றும். அவற்றின் உட் புறம் அமீபாசைட்டுகள் என்னும் செல்களும், வெளிப்புறம் புறத்தோல் படலமும் இருக்கும். இவை பின்பு தமக்கு ஒத்த சூழ்நிலை அமையும்போது வளர்ந்து புதிய கடல்பஞ்சுகளாகும். ஜெம்மியூல் ஆக்கம் (gemmulation). அனைத்து நன்னீர்ப்பஞ்சுகளும், டெத்தியா,சுபெரிடஸ் போன்ற கடல்பஞ்சுகளும் தமக்கு ஒவ்வாச் சூழ்நிலையான மொட்டுகள் தாய்க்கடல்பஞ்சு அமீபோசைட்டுகள் Queenus நுண்முள்கள் மைக்ரோபைல் இரட்டைத் தட்டு நுணமுள்கள் அ) மொட்டு விடுதல் உட்புறச்சவ்வு தான்மைச்செல் ஆ) குறைவு உடல் உண்டாதல் உட்புறத் கூட்டம் இ) ஜெம்மியூல் ஆக்கம்: பாலிலி இனப்பெருக்கம் நீள் இழையுடையசெல்கள் ஈ) பாரங்கைமுலா நீள் இழைகள் அமீபாய்டு செல்கள் நீள் இழையற்ற துகள் செல்கள் ஈ, உ.பாலினப்பெருக்கம் படம் 3. கடல்பஞ்சுகளின் இணப்பெருக்கம் உ) ஆம்பிபிளாஸ்டுலா