பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் பஞ்சு 223

வறட்சிக் காலத்தில் உட்புற மொட்டுகளைப் போன்று (endogenous budding) வளரும் ஜெம்மியூல் கள் என்னும் உடல்களை உண்டாக்குகின்றன. ஜெம்மியூலின் உட்புறம் கொத்தான அமீபோசைட்டு களும், வெளிப்புற ஓரங்களில் இரட்டைத்தட்டு நுண்முள்களும் (amphidisc spicules) அவற்றின் ஒரு முனையில் மைக்ரோபைல் (micropyle) என்னும் துளையும் உள்ளன. தமக்கு ஒத்த சூழ்நிலை அமையும்போது, மைக்ரோஃபைல் வழியே உட்புறச் செல்கள் வெளியேறிப் புதிய கடற்பஞ்சுகளாகின்றன. பாலினப் பெருக்கம். பெரும்பாலான கடல்பஞ்சு கள் இருபாலிகள்; சிலவே ஒரு பாலிகள். இருபாலி களிலும், இருபால் இனச்செல்கள் முதிரும் காலங்கள் வேறுபடுவதால் அயற்கலப்பே நடக்கிறது. கடல்பஞ்சு களில் இன உறுப்புகள் இல்லை. இனச்செல்கள், அவற்றின் கொயனோசைம் அடுக்கின் அடியில் உள்ள தொன்மைச் செல்களிலிருந்து (archaeocytes ) தோன்றுகின்றன.. பெண்ணில் முதிர்ந்த அண்டம் அதன் மீசன்கைமிலேயே இருக்கும். ஆனால் ஆணின் விந்து முதிர்ந்தால் நீரில் சுலந்து நீந்திச் சென்று பெண்ணின் உடலில் அண்டம் உள்ள டத்தை அடைந்து அதைக் கருவுறச் செய்யும். எனவே, கருவு றுதல் உட்கருவுறுதல் (internal fertilisation) மூலமே நிகழ்கிறதெனலாம். அதனால் உண்டான முட்டைகளிலிருந்து (zygotes) பெற்றோரிமிடருந்து வேறுபட்ட தோற்றமுடைய தனித்து நீந்தி வாழும் இளவுயிரி உண்டாகிறது. கிளாத்ரினோ, லியூகோ சொலினியா ஆகியவற்றின் இளவுயிரி பாரங்கை முலா என்றும், சைக்கான், கிரான்ஷியா ஆகியவற்றின் இளவுயிரி ஆம்பிபிளாஸ்டுலா என்றும் பெயர் பெறும். இந்த இளவுயிரிகள் படிப்படியாக வளர் உருமாற்றம் அடைந்து முதிர் கடல்பஞ்சுகளாக வளரும். கான் சில . கரு கடல் பஞ்சு 223 ஜில்லா என்பது நன்னீர் வாழ் பஞ்சு ஆகும். ஸ்பாஞ் ஜியா, குதிரை ஹிர்சீனியா, பெருந்தலைக் கடல் பஞ்சு (logger lcad sponge) ஆகியவை குறிப்பிடத் தக்கவை. பொருளாதாரச் சிறப்பு. பழங்காலத்தில் கரையோ ரப்பகுதிகளில் வாழ்ந்த ஆதிவாசிகள் இவற்றைப் பண்டமாற்றுக்குப் பயன்படுத்தினர். பண்டைய கிரேக் கர்கள் இவற்றைக் குளியலுக்கும், தரை மற்றும் மனைத்துணைப் பொருள்களைத் (furniture) தேய்த் துக் கழுவுவதற்கும் பயன்படுத்தினர். மேலும் போர்க் கருவிகளின் பிடிகளுக்கு மென்மையான புறப்பரப்பை அளிக்கப் பயன்படுத்தினர். ரோமானியர்கள் இவற் றைத் தூரிகைகளாகவும் (brushes) கம்பங்களின் முனை களில் கட்டும் குஞ்சமாகவும் (mops), நீர்மப் பொருள் களை உறிஞ்சி எடுக்கவும், பின்னர் அவற்றைப் பிழிந்து நீர் எடுக்கவும் பயன்படுத்தினர். தற்காலத்தில் சுார் கள், தரைகள்,சுவர்கள். கூரைகள், மனைத்துணைப் பொருள்கள் ஆகியவற்றைத் தேய்த்துக் கழுவவும், துடைத்து மெருகேற்றவும் காலணிகளின் மெருகுப் பசையைத் தேய்க்கவும் அறுவை மருத்துவத்தின் போது இரத்தம் போன்றவற்றைத் துடைத்தெடுக்க வும் பயன்படுத்துகின்றனர். கடல்பஞ்சுத் துண்டுகளை தரம் குறைந்த கடல்பஞ்சுசுளை வீட்டிற்குக் கூரை போடவும், கித்தான்கள் (linolium) தயாரிக்க வும், ஒலி வாங்கும் சுவர் அட்டைகளைத் தயாரிக்க வும், இருக்கை, படுக்கை ஆகியவற்றின் மெத்தை யைத் தயாரிக்கவும், உடைகளை மென்மையாக்கவும், பொருள்களை அடைத்துக் கட்டவும் பயன்படுத்து கின்றனர். கண்ணாடித் தொழிலில் சூடான கண் ணாடியைத் துடைத்துத் தூய்மையாக்கவும் கடல் பஞ்சு பயன்படுகிறது. தேவதையின் மலர்க்கூடை எனப்படும் யூப்ளக் டெல்லாவின் சாதாரணமான கடல்பஞ்சுகள். எளிய ஆஸ் கண்ணாடிக் கயிற்றுவலை போன்ற வகையைச் சேர்ந்த சட்டகம், லியூகோசொலினியா அதன் உட்புறம் சார்பு உயிர்க களான (common sals) இரண்டு கூனிறால்களைப் (shrimps) பெற்றுள்ள நிலையில், மிகவும் விலை மதிப்புடையது. இதைத் திருமணத் தம்பதியருக்கு அவர்கள் என்றும் என்பது அனைத்துக் கடல்பஞ்சுகளையும்விட மிகச் சிறியதாக 11 அங்குலத்தில் இருக்கும். சைஃபா, சைக்கான், க்ரான்ஷியா என்பவை கூட்டுவாழ் உயிரிகளாம். யூப்ளக்டெல்லா அல்லது தேவதையின் மலர்க்கூடை (venus flower basket), ஹயலோ னீமா அல்லது கண்ணாடிக்கயிற்றுக் கடல்பஞ்சு (glass rope sponge), ஃபெரோநீமா, ஸிடாரோகா லிப்டஸ் ஆ ஆகியவை ஆழ்கடல் கடல்பஞ்சுகள். போட்டரியான அல்லது நெப்டியூனின் கோப்பை (neptunes goblet) என்பது மிக உயரமான (4அடி) கடல்பஞ்சு. பானைக் காது கடல்பஞ்சு என்பது மிக அகன்றது. ஹாலிக் கொன்டிரியா (அ) ரொட்டிக் கடல்பஞ்சு ஆகியவை சிறந்த இழப்பு மீட்டும் திறன் (regenerating power) உடையவை. சாலினா என்பதன் மிகுதியான களும் அவற்றின் தோற்றமும் இறந்தவனின் விரல் கள் அல்லது கடற்கன்னியின் கையுறை (mermaids glove) என்று பெயர் வரக் காரணமாயின. ஸ்பாஞ் கிளை ணைபிரியாமல் வாழவேண்டும் என்பதற்கு அடை யாள அன்பளிப்பாகத் தருகின்றனர். ஹயலோனிமா எனப்படும் கண்ணாடிக் கயிற்றுக் கடல்பஞ்சும், யூப்ளக்டெல்லாவும் அழகுள்ள கலைப்பொருள் களாகப் பயன்படுகின்றன. மேலும் இவை விலங்கு இணைவுகளை animal associations) விளக்கவும் ஆய்வகங்களில் பயன்படுகின்றன. ஏ.எஸ். பியர்ஸ் என்பார் ஒரு குளியல் தொட்டியின் அளவுடைய பெருந்தலைக் கடல்பஞ்சில் 19 இனங்களைச் சேர்ந்த 17,128 சார்பு உயிர்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அதை ஓர் உயிருள்ள விடுதி என்று குறிப்பிட்டுள்ளார். சுபரிடஸ் என்னும் கடல்பஞ்சு துறவி நண்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மெல்லுடலி ஓட்டின்மேல் வளர்ந்து மூடியவாறு துகாப்பளிக்கிறது. து LIIT