224 கடல் படிவுகள்
224 கடல் படிவுகள் போன்றே ட்ரோமியா, இனாக்கஸ், ஹயாஸ் ஆகிய நண்டுகளும் தம் தலைமார்புத்தகட்டின் (carapace) மேற்புறம் கடல்பஞ்சுகளை வைத்து வளர்ப்பதால் அவை வளர்ந்து மூடியவாறு நண்டுகளைப் பாதுகாக் கின்றன. இவ்விலங்கு இணைவுகள் அறிவியல் சிறப்புப் பெற்றுள்ளமையால் ஆராயப்படுகின்றன. சில தீங்கு விளைவிக்கும் கடல்பஞ்சுகளும் உண்டு. கிளையோனா போன்ற துளைக்கும் கடல் பஞ்சுகள் மனிதனால் வளர்க்கப்படும் முத்துச்சிப்பி, உண்ணும் சிப்பி (edible oyster) ஆகியவற்றின் ஓடு களைத் துளைத்துச் சிதைத்து விடுவதால் சிப்பிகள் அழியும். இதனால் மனிதனுக்கு முத்தும், சிப்பி உணவும் கிடைக்காமற் போய்விடுகிறது. சில இனக் கடல்பஞ்சுகளின் உடலில் நச்சுச் சுரப்புகள் டாவதால் அவற்றைத் தொடுவது தீங்கு விளை விக்கும். உண் கடல்பஞ்சுத் தொழில் (sponge industry ). இயற் கைச் செல்வங்களாகக் கடல்பஞ்சுகள் ஆண்டுதோறும் பல மில்லியன் டாலர் வருமானம் அளிக்கின்றன. சிறந்த வணிகக் கடல்பஞ்சுகள் மத்திய தரைக்கடல், மேற்கிந்தியத் தீவுகள், மெக்சிகோ, ஃப்ளோரிடா. ஆஸ்திரேலியாக் கடற் கரைகளில் கிடைக்கின்றன. பெரும்பாலான வணிகக் கடல்பஞ்சுகள் ஸ்பாஞ்ஜியா, யூஸ்பாஞ்ஜியா, ஹிப்போஸ்பாஞ்ஜியா ஆகிய பேரினங் களைச் சேர்ந்தவை. 1947க்கு முன்பு ஆண்டுதோறும் 9,00,000 கி.கிராமுக்கும் மேலாகக் கடல்பஞ்சுகள் கிடைத்தன. ஆனால் 1947இல் ஒருவகைக் காளான் களின் தாக்குதலால் உற்பத்தி குறைந்து 3,87,000 கி. கிராம் மட்டுமே கிடைத்தன. சுடல்பஞ்சு வளர்ப்பு. ஃப்ளோரிடா. த்தாலி ஆகிய கடற்கரைகளில் கடல்பஞ்சை வளர்த்து உற்பத்தியைப் பெருக்கி வருகின்றனர். அவற்றின் சிறப்பான இழப்பு மீட்கும் திறனைப் பயன்படுத்தி. அவற்றை 8 கன அங்குலத் துண்டுகளாக்கி, சிமெண்ட் அல்லது கான்கிரீட் பலகைகளின் மேல் ஒட்டிவைத்து. கடலில் ஆழம் குறைந்த பகுதிகளின் அடித்தளத்தில் அப்பலகைகளை வைத்து ஆக்சிஜனும் உணவும் கிடைக்கும் நீர்ச்சுழல்களைக் (water currents} கொண்ட இடத்தில் வளர்க்கின்றனர். வணிகத்திற்கு ஏற்ற உருவ அளவுக்கு வளரப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால் ஒருமுறை இதுபோல் வளர்க்கத் தொடங்கி னால் இவற்றை 50 ஆண்டுகள் வரை அப்படியே வளர்த்துக் கொண்டிருக்கலாம். இதில் ஆழம் குறை வான பரப்பில் ஒரே இடத்தில் பலவகைக் கடல் பஞ்சுகளை வளர்ப்பதால், அவை களவாடப்படாமல் கண்காணிக்கத் திறமையான காவலர்கள் தேவைப் படுவர். இவ்வாறு கண்காணித்து வளர்த்தால் உற்பத்திப் பெருக்கம் மிகுதியாகும். பா. சீத்தாராமன் கடல் படிவுகள் கட ஆழ்கடல் தரையின் சிறப்பியல்புகளுள் ஒன்று- அங்கு காணப்படும் படிவுகள் (sediments) ஆகும். இப்படிவுகள் பல கோடி ஆண்டுகளாக வெறும் பாறைகளின் மீது தொடர்ந்து பெய்த பனி மழையின் விளைவாகச் சிதறிய நுண் துகள்கள் திரட்டப்பட்டு அடுக்கடுக்காகக் கடலுக்கடியே படிந்தவையாகும். தொடர்ந்து பெய்த பனி மழையின் காரணமாகக் ல்நீர்ப் பரப்பில் சிறிது சிறிதாக உயிரினங்கள் தோன்றி மிகு விரைவில் வளரத் தொடங்கின. இவ் வுயிரினங்கள் அழியும்போது இவற்றின் சுண்ணாம்பு, சிலிக்கா இவற்றாலான மேல் ஓடுகள் கடலின் ஆழ் பகுதியை வந்தடையவே இப்படிவுகள் முடிவிலா அடுக்குகளாகப் படிவுற்றன. பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இச்செயல் இன்றும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வேறு பல பொருள் களும் கடல் படிவுகளுக்குக் காரணமாகின்றன. தூசு, நிலத்திலிருந்து வண்டல், மணல், சேறு ஆகிய வற்றை ஆறுகள் கடலில் தள்ளுகின்றன. இவை கடலின் அடித்தளத்தில் படிகின்றன. எரிமலைகளும் படிவுகளைத் தோற்றுவிக்கின்றன. எரிமலைகள் சீறி உமிழும் சாம்பலைக் காற்று கடலுக்குள் ஊதித் தள்ளும். நிலச் சிதைவுப் பொருள்களும் (terrigenous detritus) கடலையே அடைகின்றன. இச்சிதைவுப் பொருள்கள் மெல்லக் கடல்நீரில் இறங்கி முன்னரே காற்றால் ஒதுக்கப்பட்ட எரிமலைச் சாம்பல், எரிமலைத்தூள் இவற்றோடு கலந்து கடலடியில் அமிழ்ந்து படிவுகளாக நிரம்புகின்றன. மேலும் நிலக் காற்று நுண்மணலை வாரிப் பொழிகிறது. காற்றால் தள்ளப்பட்ட மணல் கடல்நீரை ஊடுருவிச் சென்று கடலின் அடிமட்டத்தில் தகடு போன்ற மெல்லடுக்காகப் படியும். கூழாங்கற்கள், சிறு கற்கள், சிப்பிகள் போன்ற பொருள்கள் பனிக் கட்டி மலைகளாலும், நகரும் பனிக்கட்டியாலும் கடலில் வீழ்த்தப்படுகின்றன. விண்ணெரி கற்களால் இரும்பு.நிக்கல் இவற்றின் துகள்கள் கடல் பரப்பில் சிதறி விழுகின்றன, கடல் படிவங்களின் வகைப்பாடு கடல் படிவுகளை நீர்ப்பரப்புக் கசிவு (pelagic sediments) நிலக்கசிவு (terrigenous sediments) என இருவகையாகப் பிரிக்கலாம். வெளிறிய நிறத்திலோ, செஞ்சிவப்பு நிறத்திலோ அமைந்துள்ள கடல் மேற் பரப்புக் கசிவு, முன்னரே குறிப்பிட்ட சுடல் மேல் மட்டத்தில் காணப்படும். நுண்ணுயிர்களால் ஒதுக் கப்பட்ட நுண் துகள்கள் சுடல் மேற்பரப்பிலிருந்து குவியும். மேற்பரப்புக் கசிவை கனிமப் படிவுகள் கரிமப்படிவுகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கனிமப் படிவுகள். 30%க்கு உட்பட்ட எஞ்சிய கரிம அல்லது கனிமப் பொருள்களைக் கொண்ட