226 கடல் படுகை
226 கடல் படுகை அடக்கியுள்ள 70 அடி நீளமுள்ள உள்ளகப் பகுதி களைப் பெற முடிகிறது. கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மாரிஸ்யூயிங் என்பாராலும் உட்ஸ் ஹோல் கடல் நிறுவனத்தாராலும் திறமையான புதிய முறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறைப்படி, கடல் ஆழத்தில் வெடிகுண்டு வீசுவதால் தோன்றும் எதி ரொலியை வைத்துப் படிவு அடுக்கின் கனத்தைக் கணக்கிடமுடியும். முதல் எதிரொலி படிவு அடுக்கின் மேல் பகுதியிலிருந்தும் அடுத்தது பாறைப்பகுதியான தரைப்பரப்பிலிருந்தும் மேல்நோக்கி எழும். அடுக்கின் கனத்தை இப்புதிய முறையில் கணக்கிடலாம். பசிபிக் பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் படிவு அடுக்குகள் 1000 அடிக்கு மேற்பட்டவையாக இருக்கவில்லை என்று அண்மைக் காலத்தில் கடலியல் வல்லுநர்கள் கண்டுள்ளனர். பொதுவாகப் களில் கடல் தாவரங்கள், உயிர்கள் இவற்றின் புதை வடிவங்களே உள்ளன. அடுக்குகளின் வயதை இவற்றின் மூலம் மூலம் அறியலாம். கடந்து சென்ற கால நிலைகளைக் குறித்தும் அறிய இப் படிவுகள் உதவுகின்றன. பரவலாக படிவு முடியும். பிக்கட் என்பார் அட்லாண்டிக் கடலின் ஆழத் திலிருந்து எடுக்கப்பட்ட உள்ளகப் படிவுகளைப் பகுத்தறிந்ததில் ஏறக்குறைய 10,000 ஆண்டுக் காலத்தைப் பின்னோக்கிப் பார்க்க முடிந்தது. உள்ளகப் படிவுகளில் குளிர்நீர் உயிர்களான கிளோபி ஜெரினா அடுக்குகளும், வெப்பத்தை விரும்பும் உயிர் களின் அடுக்குகளும் மாறி மாறி இருப்பதால் பனியாறு உருகிய காலம் மிதமான வெப்பநிலைக் காலம் இவற்றை ஒருவாறு உய்த்துணர முடியும். கடல் குளிர்ந்த காலப் பகுதிகளையும் காண அப்போது மேகங்கள் திரண்டன. பெய்பனி விழுந்தது. வட அமெரிக்கக் கண்டப் பகுதியில் பனித்தகடு வளர்ந் அகன்ற தது. பனி மலைகள் கரையை நோக்கி ஓர் முனைப் பகுதியாகக் கடலை அடைந்தன. அங்கு பனியாறுகள் ஆயிரக்கணக்கில் பனிக்கட்டி மலைகளை உண்டாக்கின. மெதுவாக நகரும் பனிக்கட்டி மலை களின் வரிசை கடலுக்குச் சென்றது. நிலப் பகுதியும் மிகக் குளிர்ந்து இருந்தது. எனவே, தனியே பிரிந்து திரியும் பனிக்கட்டி மலைகள் அக்காலத்தில் தெற்கே மிதந்து வந்தன. இறுதியில் அவை உருகின. போது அவை நிலத்தைத் தேய்த்து வரும்போது தம் அடிப்பகுதியில் உறைந்து ஒன்றிய தூறு, மணல், பரல், பாறைத்துகள்கள் போன்ற சுமைகளை உதறி விட்டன. ஆதலால், கிளோபிஜெரினா கசிவின் மேல் பனியாற்றுப் படிவின் ஓர் அடுக்கு அமைந்தது. மித வெப்பநிலை பற்றிய பனியுகத்தின் குறிப்பு படிவுகளில் எழுதப்பட்டது. அப் பிறகு கடல் மீண்டும் வெப்பம் அடைந்தது. பனியாறுகள் உருகிப் பின்னடைந்தன. மீன்டும் வெப்ப வகைக் கிளோபிஜெரினா கடலில் வாழத் தொடங் கியது; வாழ்ந்து, அழிந்து மற்றோர் அடுக்குக் கசிவைக் களி, பனி, ஆற்றுப்பரல்கள் ஆகியவற்றின் மேலே அமைத்தது. கடல் படுகை . க.சி.விஜயலஷ்மி கடலில் காணப்படும் நிலப்பகுதியைக் கண்டத்திட்டு. கண்டச் சரிவு, கடல் தரை அல்லது கடல் படுகை (ocean floor) என மூன்று வகையாகப் பிரிக்கலாம். கடலுக்குள் ஏறத்தாழ நூற்றிருபது மீட்டர் ஆழம் சென்று சரிவு குறைவாகக் காணப்படும் நிலப் பரப்பைக் கண்டத்திட்டு எனவும், கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து 1370-3200 மீட்டர் வரையிலும் மிகச் சரிவாக உள்ள சாய்நிலப்பகுதியைக் கண்டச் சரிவு எனவும், அதற்கும் அப்பால் கடலுக்கடியில் பரவிக்கிடக்கும் நிலப்பரப்பைக் கடல் படுகை எனவும் கூறலாம். நாலாயிரம் மீட்டர் ஆழத்திற்குமேல் பரவிக்கிடக்கும் கடல் படுகை கடலின் மொத்த நிலப்பரப்பில் 57.5% உள்ளது. எனவே கடல் படுகை மிகுதியான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. கடலில் எழுச்சி (rise), கடல் குன்றுகள் (sea mounts), தட்டைக் குன்றுகள் (guyots), தொடர் குன்றுகள் (ridges), ஆழ்கடல் சமவெளிகள் (abyssai plains), பெரும் பள்ளங்கள் (basins), நீண்ட பள்ளங் கள் (troughs), அகழிகள் (trenches), மடுக்கள் (deeps) எனப் பல்வேறு அமைப்புகள் உண்டு. படுகையிலிருந்து எழுச்சி. கடல் குறைந்த சரிவுடன் உயர்ந்து எழுந்த நிலப்பரப்பே எழுச்சி ஆகும். து ஏறத்தாழ ஆயிரம் மீட்டர் உயரம் உள்ளது. வட அட்லாண்டிக்கில் பெர்முடா தீவை அடுத்துள்ள பெர்முடா எழுச்சியை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். கடல் குன்றுகள் அல்லது கடல் மேடுகள். உலகின் அனைத்துக் கடல்களிலும் காணப்படும் இவை கடல் படுகையிலிருந்து மேலெழும் குன்றைப் போன்ற குவிந்த உச்சியைக் கொண்ட அமைப்புகளாகும். வை 1200-1000 மீட்டர் உயரமுடையவை. தட்டைக் குன்றுகள். இவை கடல் குன்றுகளைப் போன்றவை. ஆனால் இவற்றின் மேற்பரப்பு கடல் அரிப்பால் தட்டையாகவோ சமதளமாகவோ காணப் படும். கடல் படுகையிலிருந்து நீரின் மேற்பரப்பில் 1000 மீட்டர் ஆழம் உயரம் கொண்டலை. வடக்கு மத்திய பசிபிக் பெருங்கடலில் 500க்கும் மேற்பட்ட கடற்குன்றுகளும், தட்டைக் குன்றுகளும் உள்ளன. ஆனால் இவை அட்லாண்டிக் பெருங்கடலில் மிகக் குறைவாகவே காணப்படும்.