பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ பன்றி 227

தொடர் குன்றுகள். இமயமலை, ஆல்ப்ஸ் மலை போன்ற தொடர் குன்றுகள் கடலுக்குள்ளும் காணப் படும். மத்திய அட்லாண்டிக், மத்திய இந்தியக் கடல் போன்ற இடங்களில் தொடர் குன்றுகள் அமைந் துள்ளன. இவற்றின் அகலம் 1500 கி.மீ. இவற்றின் உயரம் 1000-3000 மீட்டர் இருக்கும். சில குன்றுகள் நீர்ப்பரப்பின் மேல் தீவுகளாகவும் காணப்படுகின்றன. ஆழ்கடல் சமவெளிகள். இவை மிகக்குறைவான சரிவு கொண்டு ஏறக்குறைய சமதளமாகவே தோன்றும். இவை கண்டச்சரிவை அடுத்த எழுச்சி களின் தொடராக அமைந்துள்ளன. அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல்களில் சமவெளிகள் நன்றாக அமைந்துள்ளன. பசிபிக் பெருங்கடலில் சமவெளிப் பகுதி குறைவாகக் காணப்படுகிறது. ஆழ்கடல் சம வெளிகளில் பலவகையான பிரிவுகளைக் காணலாம். பெரும் பள்ளங்கள். வை கடல் படுகையில் வட்ட வடிவிலோ முட்டை வடிவிலோ காணப்படு கின்றன. 4000 மீட்டர் ஆழம் கொண்ட இவற்றின் பக்கங்கள் குறைந்த சரிவைக் கொண்டவை. தொடர் குன்றுகளை எல்லைகளாகக் கொண்ட சில பெரும் பள்ளங்கள் LGIT ATT GOT. வட அமெரிக்கப் பெரும் பள்ளம், பிரேசில் பெரும் பள்ளம். கனடா பெரும் பள்ளம் எனப் பல டங்களில் காணப்படுகின்றன. நீண்ட பள்ளங்கள். இவை மிக நீளமாகவும், அகலமாகவும் சரிவு குறைந்தும் காணப்படும், பெரும்பள்ளங்கள், நீண்ட பள்ளங்கள் இவற்றின் அமைப்பைத் திட்டவட்டமாக வரையறுக்க முடிய வில்லை. மேலும் இவை அகழிகளின் சார்புடைய அமைப்புகளாகவும் கருதப்படுகின்றன. அகழிகள். சரிவு மிகுந்த பக்கங்களுடன் மிக நீளமாகவும், அகலமாகவும் அமைந்துள்ள இந்தப் பள்ளங்கள், கடலின் பல பகுதிகளிலும் காணப்படும். அகழிகள் 6000 மீட்டர் ஆழத்திற்கு மேல் பசிபிக் பெருங்கடலில் பதினைந்து அகழிகளும், அட்லாண்டிக் பெருங்கடலில் இரண்டு அகழிகளும், இந்தியப் பெருங்கடலில் ஓர் அகழியும் உள்ளன. மடுக்கள். அகழிகளில் மிகு ஆழம் உள்ள இடங்களை மடுக்கள் எனலாம். பசிபிக் கடலிலுள்ள மரியானா அகழியில் காணப்படும் சாலஞ்சர் மடு உலகிலேயே மிகவும் ஆழமானது. இதன் ஆழம் 10915 மீட்டராகும். டிரிஸ்டி என்னும் ஆழ்கடல் ஆய்வுக் கலத்தில் (bathy scaph) ஜேக்ஸ் பிக்கார்டு (Jacques Piccard), Tr வால்ஷ் (Don Walsh) ஆகியோர் 1960இல் சாலஞ்சர் மடுவின் அடிவரை சென்று ஆய்வுகள் நடத்திச் சாதனை புரிந்தனர். கடல் படுகையில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளில்லை. கடல் படுகை இருண்டு கிடப்பதால் தாவரங்கள் வளரா. எனவே இங்குள்ள 7 - 15 ஆ கடல் பன்றி 227- விலங்கினங்களைப் பிடித்து உண்ணும். இங்கு வாழும் மீன்கள் நீண்ட கோரைப் பற்களையும், அகன்ற வாயையும், விரியும் வயிற்றையும், செயற்கை ஒளி வீசும் உறுப்புகளையும் பெற்றுள்ளன. வேறு சில விலங்கினங்கள் கடல் படுகையில் பரவிக் கிடக்கும் மட்கிய உயிர்ச்சத்துகளை (organic detritus) உண்டு வாழ்பவை. கடல் படுகையில் வெப்பம் I-5°C வரை இருக்கும். ஆறாயிரம் மீட்டர் ஆழத்தில் 6.5 சதுர செண்டி மீட்டர் பரப்பில் அழுத்தம் மூன்று டன்னாக உள்ளது. இங்கு வேகமாகச் செல்லக்கூடிய நீரோட்டங் கள் இல்லை. நாலாயிரம் மீட்டர் ஆழத்திற்கு மேல் கடல் படுகையில் சிவப்புக் களிமண்ணும், சிலிகா சேறும் (siliceous ooze) காணப்படுகின்றன. குறைவான உணவு அகப்படுவதால் இங்கு வாழும் உயிரினங்களின் வகையும் எண்ணிக்கையும் குறை வாகவே இருக்கும். சில விலங்கினங்களின் மேல் கூடுகள் சுண்ணாம்புச் சத்துக் குறைந்து மெலிந்து இருக்கும். கடல் படுகை யில் சிவப்புக் களிமண்ணும், சிலிகா சேறும் பரவி யிருப்பதால் இங்கு வாழும் வாழும் பல விலங்கினங்கள், சே சேற்றுக்கு மேல் வாழவும், புதைந்து போகாமல் இருக்கவும் மிக நீண்ட கால்களையும் வேர்களுடன் கூடிய நீளமான தண்டையும் கொண்டிருக்கும். விலங் கினங்கள் வெண்மை, பழுப்பு, கறுப்பு, சிவப்பு நிற முடையவை. பச்சை, நீல நிறங்களில் விலங்கினங்கள் இங்கு இரா. சில விலங்குகள் தொடக்ககாலத்தில் வாழ்ந்த விலங்கினங்களைப் போன்ற உடலமைப் புடையவை. நியோபிலைனா (neopilina) என்னும் மெல்லுடலி (mollusca) தொல் ஊழியில் (plaeozoicera வாழ்ந்தவை போன்ற அமைப்பைப் பெற்றுள்ளது. கடல் புழு, கடல் நட்சத்திரம், கடல் வெள்ளரி, கடல் அல்லி எனப் பல விலங்கினங்கள் கடல் படுகையில் காணப்படுகின்றன. அவை யாவும் அங்கு கிடை க்கும் மட்கிய உயிர்ச்சத்துக்களை உண்டு வாழும் வியத்தகு விலங்கினங்களாகும். கடல் பன்றி கூ பாலசுப்ரமணியன் மூக்குப் பகுதி, அலகு போன்று தலையினின்று வெளிப் படாமல் உள்ளடங்கிய தலையையும் ஒரே ஒரு மைய மூக்குத்துளையையும், ஒத்த அமைப்புக் கொண்ட ஏறத்தாழ எனாமலற்ற (enamel) சிறிய கூம்பு வடிவப் பற்களையும் கொண்டனை திமிங்கில வகைப்பாலூட்டிகளான கடல் பன்றிகளா கும். இவை கடல்நீரில் வாழ்கின்றன. கடல்பன்றிகள் அனைத்து வகைக் கடல்களிலும் ஆழம் குறைவான கடலோரப்பகுதியிலும் வாழ்கின்றன. கழிமுகங் களுக்கும் ஆற்றின் உட்பகுதிகளுக்கும் அவ்வப்போது