பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கடல் பாசியும்‌ அதன்‌ இன்றியமையாமையும்‌

230 கடல்பாசியும் அதன் இன்றியமையாமையும் கடல்பாசிகளிலிருந்து பெறப்படும் முக்கியப்பொருள் களும் பயன்களும். ஜெலிடியல்லா,ஜெலிடியம், கிராசி லேரியா போன்ற கடல்பாசிகளிலிருந்து அகார் அகார் எனும் பொருள் பெறப்படுகின்றது. இது சிவப்புக் கடல்பாசிகளின் செல்சுவர்களில் இருந்து பெறப்படு கிறது. வகைக் சர்காஸம், டர்பினேரியா, சிஸ்டோபில்லம், ஹார்மோஃபைஸா போன்ற பழுப்பு நிறப் பாசிகளில் என்னும் இருந்து ஆல்ஜின் மற்றொரு கொலாய்டு பெறப்படுகின்றது. ஆல்ஜின் நிலை பால்மமாக்கியாகவும் நிறுத்தியாகவும் (stabiliser) (emulsifier), பருமன் உண்டாக்கியாகவும் (thickner) பயன்படுகின்றது. ஐப்பானில் போர்ஃபைரா (porphyra) போன்ற பாசிகளில் இருந்து உணவு தயாரிக்கும் தொழிற் சாலைகள் பெருமளவில் காணப்படுகின்றன. அல்வா, எண்டிரோமார்பா, கீடோமார்பா, காலர்பா, கோடியம், டிக்டியோட்டா, பெடைனா, கொல்போமீனியா, சர்காஸம், டர்பினேரியா, போர் பைரா, கிராஸிலேரியா, ஹிப்னியா ஹைட்ரோ கிளாத்ரஸ், ரோசன், வின்ஜியா, கிரேட்டிலூப்பியா. கோனேஸ்போரா ஆகியவற்றில் சிலவகைக் கடல் பாசிச் சிற்றினங்கள் உண்ணத் தகுந்தனவாக உள்ளன. தமிழகத்துக் சுடற்கரையோரப் பகுதிகளில் கிரேஸிலேரியா லைக்கனாய்டஸ் என்னும் பாசிச் சிற்றினத்திலிருந்து போரிட்ஜ் (porridge) எனப்படும் ஒருவகைக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. சிலவகைக் கடல்பாசிகளில் தாது உப்புகளும் நுண் ஊட்டச் சத்துகளும் அடங்கி உள்ளமையால் இவற்றைக் கால் நடை, கோழிப்பண்ணை, விலங்கு ஆகியவற்றுக்கு நாள்தோறும் உணவுப் பொருளுடன் சேர்த்து அளிக் கின்றனர். வெண்டை உருளைக்கிழங்கு, குச்சிக் கிழங்கு. கத்தரி போன்ற தாவரங்களுக்குக் கடல் பாசிகள் கம்போஸ்ட் உரங்களாகப் பயன்படுகின்றன. தமிழகத்துக் கரையோரங்களின் வளரும் தென்னை மரங்களில் அலைகளால் அடித்து ஒதுக்கப்படும் கடல் பாசிகள் உரப்பொருள்களாகப் பயன்படுகின் ன்றன. ஆஸ்பராகாப்ஸிஸ், டேக்ஸிபார்மிஸ் போன்ற கடல் பாசிகள் பெருமளவில் அயோடின் கொண்டுள்ள மையால் கழலைக்கட்டிகளைப் போக்கும் மருந்துப் பொருள்களாகவும் பயன்படுகின்றன. லெ. கண்ணன் கடல்பாசியும் அதன் இன்றியமையாமையும் உயிரிகளின் அடிப்படைத் தேவையான நுண்ணளவுத் (trace elements) Guiga தனிமங்களைப் கடல்டாசி பயன்படுகிறது. கடல்பாசி நுண்ணளவுத் தனிமங் களின் பிறப்பிடம் என்று அறியப்பட்டாலும், உணவு களின் மூலமாகத் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பற்றாக்குறையை எவ்வாறு தீர்ப்பது என்பதே சிக்க லாகும். ஏனெனில் நுண்ணளவுத் தனிமங்களின் மிகு அளவும் குறை அளவும் பொதுவாகப் பெரும் விளைவை உண்டாக்குகின்றன. வெனேடியம், கோபால்ட், அயோடின், மாலிப் டினம், தாமிரம், போரான், இரும்புத்தாது, துத்த போன்ற பல நாகம், மாங்கனீஸ் தனிமங்கள் தாவரங்களுக்கும், நுண்ணளவுத் விலங்குகளுக்கும் இன்றியமையாதவை. இவற்றின் பற்றாக்குறையை நேரடி உப்புகளாக உட்கொண்டால், 95% கழிவுப் பொருள்களாக வெளியேறக் கூடிய வாய்ப்புண்டு. இந்த நுண்ணளவுத் தனிமங்கள் தாவரங்கள் வளரும் மண்ணில் மிகுதியாகக் காணப்பட்டாலும், தாவரங் கள் எளிதில் அடையக்கூடிய வடிவில் இருப்பதில்லை. செயற்கை உரங்களில் நுண்ணளவுத் தனிமங்களைப் போதுமான அளவில் சேர்ப்பதும் இல்லை. B கடல்பாசியை உணவாக உட்கொள்வதால் விலங்குகளுக்கு ஏற்படும் நன்மைகளையும், எருவாகப் பயன்படுத்துவதால் தாவரங்களின் வளர்ச்சியில் ஏற்படும் மாறுதலையும் எளிதாக அறியலாம். தாமிரத்தின் பற்றாக்குறை காரணமாசச் செம்மறி ஆடுகளுக்கு முதுகுவலியும், கம்பளி மயிர் வளர்ச்சியும் தடைப்படுகின்றன. தாமிரப் பற்றாக்குறை கார ணமாக ஏற்படும் விலங்குகளின் அழிவுபற்றி உலகில் பரவலாகப் பேசப்பட்டது. உடனே அமெரிக்கா போன்ற நாடுகள் விலங்குகளின் உணவுத் தீவனங் களில் அக்கறை கொண்டு சட்டத்தின் வாயிலாக முயற்சிகள் மேற்கொண்டன. மிகு தாமிர அளவு விலங்குகளின் கல்லீரலில் சேர்வதால் பல்வேறு இடர்கள் ஏற்பட வாய்ப்புண்டு. குட்டி ஈனும் நிலை யிலுள்ள 150 செம்மறி ஆடுகள், பதனிடப்பட்ட புல்லில். உள்ள மிகு அளவு தாமிரத்தால் பாதிக்கப் கலவையிலுள்ள பட்டுள்ளன. தாதுப்பொருள்களின் தாமிரத் ை உட்கொண்ட தை செம்மறி ஆடுகள், அக்கலவையை உட்கொள்வதை நிறுத்திய ஆறு மாதங்களில் இறந்துபோனதும் உண்டு. தாமிரம் அதிக அளவு (25%-53%;1%) இரத்தத்தில் கலந் ததால் இறந்துபோன செம்மறி ஆடுகளும் உண்டு எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தாமிரம் அதிக அளவில் சேர்ப்பது தவறு எனும் நிலை ஏற்படு கிறது. டன்லப் என்னும் அறிவியலார் சுறவை மாட்டுத் தீவனத்தில் கடல்பாசியை மிகுதியாகவும், தாமிரத் தாது உப்பை நேரிடையாகவும் கலந்தார். ஆனால் சிறிதளவே பயன்படுத்திய கடல்பாசியின் மூலமாக வெண்ணெய்ச்சத்து நிறைந்த பாலை அதிகமாகக் கறந்தார். தாது உப்புகளை மிகுதியான அளவில் கலந்து ஒரு மாற்றமும் ஏற்படாத நிலையைக்