பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கடல் பாசியும்‌ அதன்‌ இன்றியமையாமையும்‌

232 கடல்பாசியும் அதன் இன்றியமையாமையும் ஏற்படா. இதனால் இது நம்பகமான நுண்ணளவுத் தனிமங்களின் மூலப்பொருளாகக் கருதப்படுகிறது. போரான் மிகவும் குறைந்த அளவிலேயே மண்ணில் காணப்படுகிறது. மேலும் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் 2 பி.பி.எம். எனப்படும் அளவில் இது தேவைப்படுகிறது. போரானை நேரடித் தாது உப்புகளாக உரம் மூலம் கரும்புப் பயிர்களுக்குச் சேர்த்துப் பார்த்ததில் கேடுறு வேதிமாற்றங்கள் ஏற்பட்டுப் பயிர்கள் அழிந்து போயின. இத்தனிமம் ஓட்ஸ் எனப்படும் தானிய வனக்களுக்குப் பேரழி வைத் தரும். இத்தனிமம் 3 பி.பி.எம் கரைதிறனுள்ள அளவாக மண்ணில் இருப்பதே இப்பேரழிவுக்குக் காரணம் என அறிவியலார் கருதுகின்றனர். தற் போது இந்த அளவு (3 பி.பி.எம்)போரான் அனைத்து வகை வேளாண் பயிர்களுக்கும் கெடுதல் விளை விக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில குரூசிஃபெரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களும், புகையிலை, இலவங்கம் வகைகளும், 15 பி.பி.எம். போரானைத் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் கொண்டவை என அறிவுறுத்தியுள்ளனர். கடல்பாசியை வணிக நோக்கில் உரப்பொருளாகப் பயன்படுத்துவதை விடத் தீவனப்பொருளாகப் பயன்படுத்துவதே நன்மை பயக்கக்கூடியது எனக் கருதப்படுகிறது. தாவரங்களுக்கு இது போன்ற நுண்ணளவுத் தனிமங்கள் நேரடியாகக் கிடைப்பதில்லை. மேலும் செயற்கை இந்நுண்ணளவுத் உரப்பொருள்களில் தனிமங்களில் போரானைத் தவிர மற்றவை தாவரங் களுக்குக் கிடைப்பது இல்லை. மக்னீசியம், கோபால்ட், மாங்கனீஸ் ஆகியவை உரப்பொருள்களில் காணப்பட் டாலும் தாவரங்களைச் சென்றடைவது இல்லை. ஆதலால் உழவர்கள் இத்தனிமங்களை விலங்குகளின் சாண எரு மூலம் ஆண்டுக்கு மூன்று முறை மண்ணில் இடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இச்சாண எருக்களில் உள்ள நுண்ணளவுத் தனிமங்களின் அளவு அதைச் சார்ந்த விலங்குகளுக்குச் சேர்கிறது. மேலும் ஆய்வின்படி நல்ல சாண எருவில் உள்ள தனிமங்களின் அளவைப்போலவே கடல்பாசிமாவிலும் உள்ளது எனக் கண்டறிந்துள்ளனர். சாண எருப் பற்றாக் குறையும், அதில் உள்ள நுண்ணளவுத் தனிமங்களின் அளவுக் குறைவும் காணப்பட்டாலும் கடல்பாசியைப் பயன்படுத்தலாம். மண்ணின் ஹைட்ரஜன் அணுத்திறன் அதில் அமைந்துள்ள இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ் போன்ற தனிமங்களைச் சார்ந்துள்ளது. இக்கடல்பாசி நுண்ணளவுத் தனிமங்களின் சேர்க்கையைப் பிரித்து மண்ணின் ஹைட்ரஜன் அணுத்திறனைச் சீர்ப்படுத்தி, தனிமங்கள் கிடைப்பதற்கு வழிவகுக்கிறது. பாசிமாவைவிடக் கடல்பாசிச் சாரத்தின் அளவு மிகவும் பயனுடையதென்று மெய்ப்பிக்கப்பட் டுள்ளது. மேலும், இச்சாரத்தை நீர்ம உரப்பொருள் கடல் களுடன் சேர்த்துத் தெளிப்பதோ, காளான் கொல்லியுடன் சேர்த்துப் பயன்படுத்துவதோ சிக்கனமாகும். நேரடித் தாது உப்புகளின் சேர்க்கை யால் ஏற்படும் தீமைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து, இக்கடல்பாசி நீர்மங்களை நல்ல முறையில் வணிக நோக்கில் செயல்படுத்துவதும் இதன் பயனால் ஏற்படும் சிக்கனத்தில் விவசாயிகளுக்குப் பொருளாதார நோக்கில் ஏற்படும் நன்மையை வுறுத்துவதும் இன்றியமையாதவையாகின்றன. அறி பால் பண்ணையில் கடல்பாசி. சோன்ட்ரஸ் கிரிஸ் பஸிலிருந்து கெராஜுனேட்ஸ் எனும் பொருள் பிரித் தெடுக்கப்படுகிறது. இது பால் வடிகட்டவும் கோக்கோ விதைகளினின்று பால் தயாரிக்கும்போது கோகோ விதைகளைச் சமநிலைப்படுத்தவும் உதவு கிறது. அனைத்துவகைக் கெராஜுனேட்களையும் பயன்படுத்துவது இல்லை எனினும் இதன் வடிவமான கெராஜுனேட் உப்புகளும் அதைச் சார்ந்த உப்பு களும் பயன்படுத்தப்படுகின்றன. கோக்கோ விதை களினின்று அதன் சாரத்தை எடுக்கும்போது ஏற்படும் எதிர்ப்பு ஆற்றலைத் தடுக்க மேற்கு ஜெர்மனியில், கெராஜனேட்டுகளைப் பால்பண்ணையில் கோக்கோ பானம், பதப்படுத்தப்பட்ட பானம் ஆகிய தயாரிப்புகளில் முக்கியமாகப் பயன்படுத்து கின்றனர். புதிய கடல் கடல்பாசி உணவு. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவாக கடல் பாசியை மனிதன் உட்கொண்டு வந்துள்ளான். கி.பி. 961இல் ஐஸ்லாந்தில் சால் எனப் படும் ரோடிம்னியா பால்ம்மேட்டா சிவப்புக் பாசியைப் பலவிதமாகச் சமைத்துப் பயன்படுத்தினர். இதைப் பற்றிய குறிப்பு ஐஸ்லாந்தின் 12 ஆம் நூற்றாண்டுச் சட்டநூலில் காணப்படுகிறது. இக்கடல் பாசியைச் சேகரிப்பதற்கு அனுமதித்ததற்கான ஆணையை இன்றும் ஐஸ்லாந்து கிறித்துவக் கோயில் களில் காணலாம். இதைப் பண்ட மாற்று முறையில் வணிகர்கள் மாட்டிறைச்சி, கம்பளி இவற்றிற்கு விற்று வந்த குறிப்பும் தெரியவருகிறது. இதை இயல்பாக உலர்ந்த வெண்ணெய் மீனுடனோ ரொட்டி பாலுடனோ சேர்த்து உண்ணும் வழக்கம் இன்றும் உள்ளது. இதில் வைட்டமின். மிகுதியாக உள்ளன. இது வாய் குமட்டல், செரியாமை, கடல் நோய் (sea sickness) ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படு கிறது. எனினும் தற்போது இக்கடல்பாசியை மிகுதி யாகப் பயன்படுத்துவது இல்லை. , மேலும் அலேரியா எஸ்க்லெண்டா எனும் கடல் பாசி மனிதனின் உணவாகப் பயன்படுத்தப்பட்டது. இதைப் பெருமளவில் குளிர்ந்த நீரில் இரண்டு நாள் ஊறவைத்து, சிறு துண்டுகளாக வெட்டிப் பிறகு பாலில் வேகவைத்துத் தேவையான மாவுச் சத்துகளையும் சேர்த்துக் கலவையாக உண்டு வந்தனர். இதனுடன் சேர்ந்த அலேரியா பைலேய்யி எனும்