233 கடல் பாம்பு
கடல்பாசியும் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பிற வேளாண்பயிர்கள் விளையாதபோது சோன்ட் ரஸ் கிரிஸ்பஸ் மற்றும் ஜிகார்ட்டினா மேம்மில்லோசா எனும் சிவப்புக் கடல்பாசியையும். அலேரியாவைப் போலவே சமைத்து உண்டு வந்தனர். கடல்பாசி - கால்நடைத் தீவனம். பழுப்பு மற்றும் சிவப்புக் கடல்பாசியையே பெரும்பாலும் கால்நடை களுக்கும், சிலவேளைகளில் குதிரைகளுக்கும் உணவா கப் பயன்படுத்தி வருகின்றனர். ஐஸ்லாந்தில் குளிர் காலத்தில் ஆடு, மாடுகள் பனி படர்ந்த பசும்புல் மைதானத்தில் தீவனம் கிடைக்காமல் நேரடியாகக் கடற்கரைக்கு மேய்ச்சலுக்குச் செல்வதை இன்றும் காணலாம். இக்கால்நடைகள் ரோ. பால்ம்மேட்டா மற்றும் ஆலேரியாவையே பெரிதும் விரும்பிச் சுவைக்கின்றன. மேலும் குதிரைகள் லேமினேரியா சாக்கரைனா எனும் கடல்பாசியின் தளிர்ப் பகுதி யைப் பிரித்தெடுத்து உண்கின்றன. இதனால் கால் நடைகள் மிகுதியாகப் பால் கறக்கின் றன என்று அறிவியலார் கருதுகின்றனர். அலேரியாவை வைத்தும், வைக்கோலுடன் சேர்த்தும் பயன்படுத்து கின்றனர். உலர காரணமாக 'கடல் பாசி எரிபொருள், சூழ்நிலை ஏழை மக்கள் உலர்ந்த கடல்பாசியை எரிபொருளாக இந்நூற்றாண்டு வரை பயன்படுத்தி வந்தனர். முக்கிய மாக ஆலேரியா நோடோஸம், லேமினேரியா டிஜிட் டேட்டா லே. க்னஸ்டோனி ஆகியவை பெரிதும் உதவின. மேலும் இதிலிருந்து கரிப்பொருளை உற் பத்தி செய்து எரிபொருளாகப் பயன்படுத்தினர். நோடோஸத்தில் தயாரித்த பொருளைச் சாயத் தொழிலுக்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும் இதைச் சிறந்த மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தினர். கடல்பாசியும் சர்க்கரைப் பொருளும். கடல்பாசி யும், நிலத்தில் வளரும் தாவரங்கள் சேர்க்கும் கரிம உணவின் (ஓராண்டிற்கு 1011சி டன்) அளவை உற்பத்தி செய்கிறது. இது கடலில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஏதாவது ஒரு வகை யில் பயன்படுகின்றது. செல்லுலோஸ் எனும் சர்க் கரைப்பொருள் கடல் பாசியில் இருப்பது அறியப் பட்ட செய்தியாகும். லே. டிஜிட்டேட்டா, லே. ஹைபர்போரியா ஆ. நோடோஸம். மேக்ரோ கிஸ்டிஸ் பெரிக்பெரா எனும் கடல்பாசிகளில் இருந்து அல்ஜினேட்களும் அதைச் சார்ந்த பொருள்களும் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதன் சோடியம் உப்புத்தொழிற்சாலைகளுக்குப் பல வகையிலும் பயன்படுகிறது. கடல்பாசியிலிருந்து எடுக்கப்படும் அல்ஜினேட்டுகள் பலவகைச் சர்க் கரைப் பொருள்களுடன் சேர்ந்தே காணப்படுகின் றன என்று ஆய்வாளர் கருதுகின்றனர் இன்றைய புள்ளிவிவரக் கணக்குப்படி, கடல் பாசியைப் பயன்படுத்தும் தொழிலகங்கள் உலகெங் கடல் பாம்பு 233 கும் பெருகி வருவதால் கடல்பாசியை அதன் இயற் கைச் சூழலில் பாதுகாக்க வேண்டியுள்ளது. இதற் காக வல்லுநர்கள் கடற்பாசியைப் பயன்படுத்து வதிலும் குறைந்த மூலப்பொருளால் மிகு உற்பத் திப் பெருக்கத்தை அடைவதிலும் நாட்டம் செலுத்தி வருகின்றனர். எடுத்துக்காட்டாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வின்படி 1975இல் உற்பத்தி செய் யப்பட்ட அகார் (Agar) எனப்படும் மாவுப்பொருள் (ஏறத்தாழ 20,000 டன்) இதற்கு முந்தைய ஆண்டு களில் தயாரிக்கப்பட்ட பொருள்களின் அளவைவிட இரண்டு அல்லது மூன்று மட டங்கு மிகுதி என அறிய லாம். ஆனால் கடலில் இருந்து அறுவடை செய்யப் பட்ட சுடல்பாசி அனைத்து ஆண்டுகளிலும் ஒரே அளவேயாகும். கடல் பாம்பு க.வெங்கடேஸ்வரன் இது ஆசியக் சுடல்களிலும், மலேயாத் தீவுக் கூட்டத்திற்கருகிலுள்ள கடல்களிலும், பசிபிக் கடலிலும், பாரசீசு விரிகுடாவிலிருந்து மத்திய அமெ ரிக்கா வரையிலுள்ள கடற்பகுதிகளிலும் காணப்படு கிறது. இது கடலோரப்பகுதியிலிருந்து மிகவும் தாலைவில் உள்ள கடற்பகுதியில் இருந்தாலும் நடுக்கடலில் மிகுதியாகக் காணப்படுவதில்லை. கடல் பாம்புகள் கொடியநச்சுப் பாம்புகளாகும். கடலோரப் பகுதியில் வாழ்பவருக்கும், கடலில் செல்பவருக்கும், மற்ற உயிரிகளுக்கும் இவை கேடு விளைவிக்கின்றன. இவை மீன்களையும் கடல் வாழ் உயிரிகளையும் உண்கின்றன. வட்ட கடல் பாம்பின் வால், துடுப்புப் போலத் தட்டை யாகக் கடலில் வாழ்வதற்கு ஏற்றவாறு அமைந் துள்ளது. செதில்கள் சிறியவை; கண்பாவை வடிவமானது. நீருக்கு வெளியிலிருக்கும்போது, கண்களைத் திறக்கும் தன்மையற்ற காரணத்தால் கண்கள் மூடியிருக்கும். அப்போது தன் சிறிய நாக் கின் நுனியால்தான் உணர்ச்சிகளை அறிகிறது. இவற்றில் ஏறத்தாழ 50 வகைகள் உள்ளன. என்ஹைட்ரினா வளக்கடியன் வகைக் கடல் பாம்பு பழுப்பு நிறமுடையது. முதுகில் கறுப்பு நிறக் குறுக்குக் கோடுகள் காணப்படும். பாம்பின் அடிப் பகுதி வெண்மை நிறமாயிருக்கும். பர்ஸியாவிலிருந்து மலாய்த் தீவு வரையுள்ள கடல்களில் இதைக் காண லாம். இந்தியாவிலுள்ள பாம்புகளில் இதுவே மிகு நச்சுத்தன்மையைக் கொண்டது. இப்பாம்பு கடித்தால் உமிழ்நீர்ச் சுரப்பு மிகுந்து வலிப்பு ஏற் பட்டு, செயலிழப்பும் ஏற்படும்; மேலும் ரத்த அழுத் தம் ஏறும்; உதரவிதானம் தாக்கமுறும்; இயக்கு