பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கடல்‌ பீச்சு

234 கடல் பீச்சு கடல் பாம்பு தாக்கிச் செய நரம்புச்செல் தாக்கும் நச்சு நரம்புச் செல்களின் முனைகளைத் லிழக்கச் செய்துவிடும். முக்கியமான முனைகளையும் மூச்சுவிடுதலையும் தாக்கி உயிரை மாய்த்துவிடுவதால் மூளையைத் என இதை வகைப்படுத்தியுள்ளனர். இதன் நச்சுப் பற்கள் குட்டையானவை. து மனிதனைத் துரத்தித் துன்புறுத்துவதில்லை. ஹைட்ரேயிஸ் வகைக் கடல் பாம்பு மூன்று அடி நீளமுடையது. இதன் தலை, கழுத்து மெலிந்தும், உடல் பருத்தும் காணப்படும். இதன் நச்சுப்பற்களுக் குப் பின்னால் அமைந்துள்ள பற்களில் பள்ளம் இல்லை. கறுப்பு,ஆலிவ் பச்சை நிறமுள்ள இப்பாம் பின் உடலைச் சுற்றி மஞ்சள் நிறமுள்ள குறுக்குப் பட்டை காணப்படும். இது வங்காள விரிகுடாவிலி கடல் ருந்து மலேயாத் தீவுக்கூட்டம் வரையிலுள்ள நீரில் காணப்படும். இப்பாம்பு ஆமையைக் கடித்தால், ஆமை 28-46 நிமிடத்தில் இறந்துவிடும் என்று கணக்கிட்டுள்ளனர். ள மாலு கப்பலில் சென்று கொண்டிருந்த ஒரு மியைக் இது கடித்ததால் 4 மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என்றும், ஆனால் கடிபட்ட அவ நடைய நாய் மட்டும் இறக்கவில்லை என்றும் அதற் குக் காரணம் நாயின் தோல் தடிப்பாகவும் பாம்பின் பல் சிறியதாகவும் இருப்பதால் பாம்பின் நச்சுநாயைத் தாக்கியிருக்கமுடியாது என்றும் அறியப்பட்டுள்ளது. கடல்பாம்புகள் கரைக்கு வந்து கருவுற்ற அங்குள்ள பாறைகளின் நடுவே முட்டையிடும். சில குட்டிகளையே ஈனுகின்றன. பிறகு அக்குட்டிகளுடன் சில காலம் தங்கிவிடும். செம்பர் என்னும் அறிவிய பேஸியேடஸ் பிளடுயூரல் என்னும் ஒரு வதைக் கடல் பாம்பு ஒரு பாறையைச் சுற்றிக் கொண்டிருந்தது என்றும், அதன் மடிப்பில் ஏறத்தாழ 21 நீளமுள்ள 20 குட்டிகளிருந்தனவென்றும் தெரிவித் துள்ளார். ஹைட்ரஸ் பிளடியூர்ஸ் என்னும் கடல் லார் பாம்பின் நச்சு விரைவாகச் செயல்படுவதோடல்லா மல் நரம்புத்திரள், திசுக்களை மட்டும் தாக்கக்கூடும். சா.காசிநாதன் கடல் பீச்சு - முதுகு நாணுள்ளவை (chordara) எனும் தொகுதியை யும் வால் நாணுடையவை (urochordara) எனும் துணைத்தொகுதியையும் சார்ந்த அஸ்சிடியேசி(ascidin ceae) வகுப்பு உயிரியே கடல்பீச்சு (sea squirts) எனப் படும். பாறைகள் கொண்ட கடற்கரையில் வளர்தளத் துடன் ஒட்டிக்கொண்டு இது பெருங்கூட்டமாக வாழ்க்கை நடத்தும். இது தொல்லைக்கு உட்படும் போது ஏட்ரியத்துளை (atriopore) வழியாக நீரைப் பீச்சிவிடுகின்ற காரணத்தால் இதைக் கடல் பீச்சு என்பர். இதற்குக் கடல் உருளைக் கிழங்கு என்னும் பெயரும் உண்டு. வளர்ச்சியுற்ற கடல்பீச்சு மூன்று அல்லது நான்கு அங்குல நீளத்தில் சுருக்கங்கள் நிறைந்த தோல் பை போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இது 1/100 அங்குலம் 1 அடிவிட்டம் வரை இருக்கும். உடலின் முன்பகுதி சுருங்கியும் அடிப்பகுதி அகன்றும் காணப் படும். அடிப்பகுதி வளர்தளத்துடன் ஒட்டிக் கொண் டிருக்கும். உடலின் முன்பகுதியில் ஒரு பெரிய வாய் உண்டு. இதை உள்ளுறிஞ்சுத் துளை (inhalent aper- ture) அல்லது செவுளறைத் துளை (branchial aper- ture) என்று கூறுவர். சற்றுப் பின்புறம் ஒரு பக்கமாக வெளிச் செல்லும் (exhalent) ஏட்ரியத் துளை அமைந்திருக்கும். கடல் பீச்சின் உடல் டியூனிக் என்னும் உறையால் போர்த்தப்பட்டிருக்கும். இது செல்லுலோஸை ஒத்த டியூனிசின் என்னும் பொருளால் ஆக்கப்பட்டது. இவ்வுறை உடலின் வாய்ப்பகுதி, ஏட்ரியத்துளை