பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ புற்கள்‌ 235

இரத்தக்குழாய் உடலுடன் இணையும் இடங்கள் போன்ற பகுதிகளில் மட்டுமே உடற்சுவருடன் இணைந்திருக்கும். பிற பகுதிகளில் இது உடற் சுவருடன் இணையாமல் தளர்ந்த போர்வையாக அமைந்து காணப்படும். கடல் புற்கள் 235 கும் நீர்மத்தால் வளர்தளத்துடன் தலைப்பிரட்டை (metamorphosis) ஒட்டிக்கொண்டு உருமாற்றம் அடையத் தொடங்குகிறது. உருமாற்றத்தின்போது இத்தலைப்பிரட்டையின் வாழ்க்கைக்குத் வெளி துணையாயிருந்த வால், கடல் பீச்சு கடல்பீச்சின் தொண்டை (pharynx) அல்லது செவுள் அறை (branchial chamber) தனித்தன்மை வாய்ந்த அகன்ற அறை போன்று காணப்படும். இவ் வறை உடலின் பெரும்பகுதியைக் கவர்ந்து கொண்டி ருக்கும். இதன் மெல்லிய சுவர் பல நீண்ட செவுள் பிளவுகளால் (gill slits) அல்லது மூச்சுத் துளைகளால் (stigmata) துளைக்கப்பட்டிருக்கும். இத்தொண்டை, உணவு சேகரிக்கும் உறுப்பாகவும் மூச்சு உறுப்பாக வும் செயல்படும். இதன் இதயம் தசையாலான பை போன்ற அமைப்புடையது. இதயத்தின் செயல்பாடு வியக்கத்தக்க முறையில் அமைந்துள்ளது. இதயம் சுருங்கும்போது இரத்தம் சில சமயங்களில் முன் னோக்கிப் பாயும்; சில சமயங்களில் இரத்தம் பாயும் திசைமாறும். கடல் பீச்சு இருபாலி (hermaphrodite) ஆகும். எனவே அண்டப்பையும் விந்தகமும் அருகருகில் உடலின் இடப்பக்கத்தில் குடல் வளையுள் இடம் பெற்றுள்ளன. இனப்பெருக்க உறுப்புகள் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சியடைவதால் அயல் கருவுறுதல் உடலின் வெளியே நடைபெறும். கருவுற்ற முட்டை யுள் வளர்கரு (embryo) வளரும். இது போதிய வளர்ச்சி பெற்றவுடன் முட்டை பொரிந்து இளம் உயிரி வெளியேறும். இளம் உயிரி உருவமைப்பில் தவளையின் தலைப்பிரட்டையை ஒத்திருப்பதால் இது அஸ்சிடியன் தலைப்பிரட்டை (ascidian tadpole) எனப்படும். இது 3 மி.மீட்டர் நீளமுடையது. இதன் உணவுப்பாதை போதிய வளர்ச்சி பெறாமை உணவு உட்கொள்வதில்லை. காலம் நீரில் நீந்தியபின் உடலின் முன்முனையில் உள்ள ஒட்டும் அரும்புகளிலிருந்து (adhesive papillae) சுரக் யால் சில முதுகுநாண், நரம்புவடம் போன்ற உறுப்புகளும் பிற உணர்வு உறுப்புகளும் மறைந்து விடுவதால் இவ் வுருமாற்றம் பிற்போக்கு உருமாற்றம் (retrogressive metamorphosis) எனப்படும். உருமாற்றத்தின்போது ஒட்டும் அரும்புகளுக்கும் வாய்க்கும் இடையேயுள்ள குறுகலான வயிற்றுப்புறப் பகுதி மிகவும் பெரியதாக வளர்ச்சி பெற முதுகுப்புறப்பகுதி சிதைவுறுகின்றது. எனவே உடல் 180° சுழற்சியடைந்து வாய் ஓட்டிக் கொண்டிருக்கும் பகுதிக்கு நேர் எதிர்த் திசைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் உடலின் நீள் அச்சு, தரை மட்டத்தில் அமைந்திருப்பதற்கு மாறாகச் செங்குத்தாக மாறுகிறது. இவ்வளர்ச்சி மாற்றங்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு நாளே நீடிக்கும். கடல் பீச்சுக்கும் ஆம்பியாக்சஸுக்கும் (amphi - oxces) உள்ள தொண்டையின் அமைப்பு வளர்ச்சி முறைகளில் காணப்படும் உறவைக் கொண்டு விலங்கியல் வல்லுநர்கள் இவை இரண்டிற்கும் ஒரு பொதுவான முன்னோடி இருந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். மு. சாகுல் அமீது நூலோதி.H.H. Newman, Phylum Chordata, The Macmillan Company, New York, 1981. கடல் புற்கள் கடலில் வாழும் பூக்கும் தாவரங்களைக் கடல்புற்கள் என்று பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கம். உண்மை