பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கடல்‌ புற்கள்‌

236 கடல் புற்கள் உலகின் யில் இவை புற்கள் அல்ல என்றாலும் சூழ்நிலை அடிப்படையில் பாகுபடுத்தப்பட்ட ஒரு வித்திலைத் இத்தாவரங்கள் தாவரங்களாகும். அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கடலிலும், கழி முகங்களிலும் காணப்படுகின்றன. யாவும் ஜிட்டனேசி ஹைட்ரோகேரிட்டேசி. இத்தாவரங்கள் பொட்டாமோ என்னும் இரண்டு குடும்பங்களைச் சார்ந்தவை. கடல்புற்களில் ஏறத்தாழ 12 பேரினங் கள் உள்ளன. ஹேலோபில்லா, தலாசியா, என் ஹாலஸ், ஜோஸ்டிரா, பில்லோபேடிக்ஸ், பொஸிட் டோனியா, ஹேலாடியூல், ஆம்ஃபியோலஸ், ஹெட் டிரோஜோஸ்டிரா, தலாஸோ டென்ரான், ருப்பியா. டிப்ளான் தீரா என்பவை பேரினங்களாகும். இந்தியா வில் ஏறத்தாழ 6 பேரினங்களும் 9 சிற்றினங்களும் அறியப்பட்டுள்ளன. இந்தியத் தென்கிழக்குக் கடற்பகுதியான பரங்கிப்பேட்டையிலுள்ள கழிமுகத் தில் ஹேலோபில்லா ஓவாலிஸ், ஹேலோபில்லா பெக்காரியை, ஹேலோடியூல் பைனிபோலியா ஆகிய கடல்புற்கள் காணப்படுகின்றன. வகை நீர்த்தாவரங்களே கடல்புற்களும் ஒரு (hydrophytes) ஆகும். இத்தாவரங்கள் கடல் நீரில் வாழ்வதற்கான அனைத்துத் தகவமைவுகளையும் பெற்றுள்ளன. இவற்றில் உப்புநீரில் வாழும் தன்மை, நீரில் முழுதும் மூழ்கியிருத்தல், அலைகளின் செய லுக்கும் நீரின் அழுத்தத்திற்கும் ஈடு கொடுத்து நிலைத்து நிற்றல், நீரின் மூலம் மகரந்தச்சேர்க்கை, விதை பரவுதல் ஆகிய பண்புகள் முக்கியமானவை என்று ஆர்பர் (1920), டென்ஹார்ட்டோக் (1970) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். நன்னீர் வாழ் தாவரங்களுக்கான பொதுத் தகவமைவுகளும் உள்ளன. கடற்புற்கள் கிடைமட்டத் தண்டு (rhizome), வேர், இலை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளன தண்டுப் பகுதி குறுகியது; தெளிவற்றது; வேர்கள் கிடைமட்டத் தண்டின் கணுப்பகுதிகளில் இருந்து கிளை சல்லி வேர்களாகத் தோன்றுகின்றன. இவை யோடோ, கிளையற்றோ இருக்கும். கிடைமட்டத் தண்டின் கணுக்களில் இருந்து இலைகளும் தோன்று கின்றன. ஆனால் வை தரையை நோக்கி இல்லாமல் மேல் நோக்கி வளர்கின்றன. இலைகளில் செதில் இலை (scale leaf), இலைக்காம்பு (petiole), இலைப் பரப்பு (leaf blade) ஆகிய பகுதிகள் உள்ளன. இலை கள் அகன்ற இலைப்பரப்பையோ (ஹேலோபில்லா) தட்டையான லைப்பரப்பையோ (ஹேலோடியூல், சிரிங்கோடியம்) கொண்டவை. இத்தாவரங்களில் பூக்கள் தோன்றுகின்றனவெனினும் அவை அளவில் குறைந்தும், குறிப்பிட்ட காலங்களில் மட்டும் வெளிப் படையாகவும் தோன்றுகின்றன. மகரந்தச் சேர்க்கை நீரின் உதவியால் நிகழ்கிறது. அதற்கேற்ப ஆண் மலர் களும், பெண் மலர்களும் அமைந்துள்ளன. கடல்புற்களின் வளர்ச்சியில் பல்வேறு காரணி கள் பங்கு கொள்கின்றன. கவோ எனவே வை உட்காரணிகளா வளர்ச்சி வெளிக்காரணிகளாகவோ இருக்கலாம். எப்போதும் கடல்புற்களின் கட்டுக்குள் அடங்கியே காணப்படுகின்றது. மகரந்தச் சேர்க்கை நடப்பதற்கும் அதன் தொடர்ச்சியாகக் கனிகள் தோற்றுவிக்கப்பட்டு, விதைகள் உண்டாகி அவற்றினின்று புதிய தாவரம் தோற்றுவிக்கப்படு வதற்கும் அலைகளின் வேகம், நீரின் அழுத்தம், உப்புத் தன்மை, வெப்பம் மற்றும் ஹைட்ரஜன் அயனி அளவு (pH) ஆகியவையும் ஏற்றவாறு அமைய வேண்டும். இல்லையேல் தொடர் நிகழ்ச்சிகள் முற்றுப் பெறாத னவாக முடிந்து விடும் நிலை ஏற்படும். பெரும்பாலும் இத்தகைய தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் (vegetative reproduction) காணப்படுகிறது. இவற்றின் வளர் தளம் வளமுடன் மண்ணரிப்பின்றி இருந்தால் தான் கடல்புற்கள் தொடர்ந்து தம் இனத்தைப் பெருக்க முடியும். சூழ்நிலை அடிப்படையில் கடல்புற்கள் முக்கிய மாகச் செயலாற்றுகின்றன. எளிய உடலமைப்புக் கொண்ட தாவரங்கள் (ஹேலோடியூல்) ஆழம் குறைந்த பகுதிகளில் முன்னோடியாகத் தோன்றி நிலப்பரப்பைத் தோற்றுவிக்கின்றன. விரிந்த உடல் மைப்புக் கொண்ட தாவரங்கள் (தலாசியா ஜோஸ் டிரா) பின், தொடர்ந்து வளர்ந்து நிலப்பரப்பின் பருமனை அதிகரிக்கின்றன. அத்துடன் அவற்றின் அகன்ற இலைப்பரப்பு தொற்றுத் தாவரங்கள் (epiphytes) வளர்வதற்கு ஏற்றதாகவும் உள்ளது. நாளடைவில் இத்தாவரங்களின் முதிர்ந்த பகுதிகள் அழுகுவதாலும் இவற்றிடையே நீரால் எடுத்துவரப் படும் உயிருள்ள, உயிரற்ற சிறு பொருள்கள் செருகு- சேர்வதாலும் மண்ணின் பருமன் அதிகரிக்கும். கடற் புற்கள் மண்பரப்பை உண்டாக்குகின்றன என்னும் தத்துவத்தின் அடிப்படையில் செயல்முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய ஆய்வுகள் சாண்டியாகோ விரிகுடாப் பகுதியில் தாவர பகுதியைக் (vegetative part) கொண்டு மேற்கொள்ளப் பட்டன. விதைகளின் மூலம் இத்தாவரங்களைத் தோற்றுவிக்கும் வழிமுறையையும் அண்மையில் ஆய்ந்து வருகின்றனர். உடல் கடல்புற்கள் நீரில் வரும் பொருள்களின் சிறு கூறுகளைப் பிடித்து நிறுத்துகின்றன; நிலையான மண்பகுதியை உண்டாக்குகின்றன; நீரைத் தூய் மைப்படுத்துகின்றன; கரிமப் பொருள்களைத் தோற்று விக்கின்றன; பல கடல்வாழ் விலங்குகளுக்கு நேரடி உணவாகவும் அமைகின்றன; சிறிய, பெரிய மீன்கள் கடல்புற்களையும் அவற்றுடன் சார்ந்து சுடல்பாசிகளையும் உணவாக உட்கொள்கின்றன. கடல்வாழ் விலங்குகள் பலவற்றிற்கு இவை முக்கியமான வளரிடத்தையும் மற்ற உறைவிடத்தை யும் அளிக்கின்றன. இவை குறைந்த அளவு மூலக்கூறுகளைக் கொண்ட நீரிலும் மூழ்கி வாழ்