கடல் புறா 237
கின்றன. இலையிலிருந்து ஆக்சிஜன் கடத்தப்பட்டுத் தண்டு, வேர் வழியாக மண்ணுக்கு எடுத்துச் செல்ல இத்தகைய தாவரங்கள் உதவுகின்றன. கடல்புற் களில் இருந்து வெளியேற்றப்படும் ஆக்சிஜன், இப் புற்கள் வாழும் பகுதியைச் சார்ந்து வாழும் பிற உயிர்களுக்கும் பிற செயல்களுக்கும் பயன்படுகிறது. அதுபோலவே மூச்சுவிடுவதால் வெளியேற்றப்படும் கார்பன் டைஆக்சைடு தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கைச் செயலுக்கு எடுத்துக் கொள்ளப் படுவதுடன், சுற்றுப்புறச்சூழலில் ஒரு சமநிலையை யும் ஏற்படுத்துகிறது. பொருளாதார கடல்புற்களால் வேறு சில நன்மைகளும் கிடைக்கின்றன. கடலுடன் கலக்கும் கழிவு நீரில் உள்ள தூய்மைக்குக் கேடு விளைவிக்கும் பொருள்களைக் கடல்புற்கள் வடிகட்டிச் சுற்றுப்புறச் சூழலின் தூய்மை காக்கப் பயன்படுகின்றன. இவற் றின் இலைகளிலும் குறைந்த விக்னினும், நிறைந்த செல்லுலோஸும் இருப்பதால் காகிதம் தயாரிப்பதில் இவை பயன்படுத்தப்படுகின்றன. சோஸ்டிராவின் (zostera) இளம் மட்டநிலைத் தண்டுகள் பச்சை யாகவும், சமைத்தும் உண்ணப்படுகின்றன. இவற் றின் கனிகளும் உண்ணப்படுகின்றன. உலர்ந்த கடல் புற்கள், நிலத்தாவரப் பொருள்களுடன் சேர்க்கப் பட்டுச் சிறந்ததொரு மாட்டுத் தீவனமாகப் பயன் படுத்தப்படுகின்றன. மேலும் கடற்புற்கள் சிறந்த உரமாகவும் அமைகின்றன. லெ. கண்ணன் கடல் புறா 237 இவை தம் கூடுகளைப் புல் அல்லது கடல் தாவரங்களால் அமைக்கின்றன. இவற்றின் கூடு களை மணல் மேட்டிலோ, சதுப்பு நிலத்திலோ, சிறு குன்றின் மீதோ, நீரின் மேற்பரப்பிலோ இனத் திற்கேற்றவாறு அமைக்கின்றன. ஒருசில தம் கூட்டை மரத்தின் மேலும் அமைக்கின்றன. சூழ்நிலையில் உள்ள நிறத்தை எதிரொளிப்பது போல, நிறமுடைய ரண்டு அல்லது மூன்று முட்டைகளை ஒரு சமயத் தில் இடுகின்றன. ஆண், பெண் இரு பாலினமும் அடைகாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. உப்புக் கொத்திப் பறவையின் முட்டைகள் என இம் முட்டைகளை விற்பர். கடல் புறா இது துறைமுகம், கடற்கரை, உப்பங்கழி ஆகிய வற்றைச் சார்ந்து (sea gulls) வாழ்கிறது. இவை கூட்டமாகச் செம்பருந்து, பழுப்புத் தலைக் கடல் காகம் முதலியவற்றோடு சேர்ந்து துறைமுகப்பகுதி களில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். மீன்கள் புழுபூச்சிகள், கப்பலினின்றும் எறியப்படும் அழுகல் பண்டங்கள் முதலியவற்றை உண்கின்றன. பிற பறவைகளை அச்சுறுத்தி அவை தேடிய உணவையும் கவர்ந்து விடுகின்றன. இவை கடவருகிலும் கடலைச் சார்ந்தும் வாழ் வதற்கேற்ற தகவமைப்பைப் பெற்றுள்ள லாரிடே (laridae) எனும் குடும்பத்தைச் சேர்ந்த, பறவை களாகும். பெரும்பாலும் சாம்பல் அல்லது வெண்மை நிறமாகவும், தலை, இறக்கை முனைகள் முதலியன கருமையாகவும் காணப்படும். கடல் புறாக்கள் நீண்ட கூர்மையான சி சிறகுகளும், குட்டையான கழுத்தும், காலும், சவ்வினால் இணைந்த கால்விரல்களும், பிளவுபட்ட வாலும் உடையவை. சிலவற்றின் அலகு ஆப்பு வடிவில் இருக்கும். P கடல் புறா குறைந்த வெப்பமுள்ள ஐரோப்பாவிலும், நடு ஆசியாவிலும், மேல் ஆசியாவிலும் வாழும் இப் பறவைகள் கோடையில் கருமை நிறமாக மாறு கின்றன. நீண்ட நேரம் பறக்கக்கூடியவை. இப்பறவை களில் சில வலசை போவதுண்டு. இவை நீரின் சிலசமயங்களில் மிதந்தாலும் இவற்றுக்கு வேகமாக நீந்துவதற்குச் சீரான உடலமைப்பு இல்லா ததால் இவற்றின் நீந்தும் திறன் குறைவாகவே உள்ளது. இவை இனப்பெருக்கம் செய்யும் காலங் களில் பெருங்கூட்டமாகக் கூடுகின்றன. மேல் A ம. அ.மோகன்