பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 கடல்‌ பேனா

238 கடல் பேனா கடல் பேரை குழிக்குடலிகளில் பென்னட்டுலேசி வரிசையைச் சேர்ந்த உயிரினங்களைக் கடல் பேனா (sea pen). கடல் இறகு அல்லது கடல் பான்சி (sea pansies) என்பர். சாதாரணமாக வெப்பக் கடற்பகுதிகளில் காணப்பட்டாலும் போன்ற அட்லாண்டிக் வட குளிர்ந்த பகுதிகளிலும் இவை வாழ்கின்றன. இதன் உடலின் நடுவிலுள்ள நீண்ட தண்டுப்பகுதியில் மேற் பகுதி சிறகுத்தண்டு அல்லது ரேக்கிஸ் (rachis) எனவும் கீழ்ப்பகுதி காம்பு அல்லது பிடங்கள் (peduncle) எனவும் குறிக்கப்படுகின்றன. காம்பின் அடிப்பகுதி அகன்று மண் அல்லது சேற்றில் பதிந்திருக்கும். இக் காம்புப் பகுதிகளில் மொட்டுகள் இல்லை. சிறகுத் பக்கக் கிளைகள் தண்டில் அகன்ற சதைப்பற்றுள்ள உள்ளன. இவை இலைகள் அல்லது பென்னுவே எனப்படுகின்றன. கடல் பேனா வை இரு உருவத்தன்மை (dimorphic உடையவை. இவற்றில் ஆட்டோ சுவாய்டுகள் அல்லது ஆன்தோகோடியா, ஸைபனோசுவாய்டுகள் எனப்படும் இருவகைப் பாலிப்புகள் காணப்படுகின் றன. ஆட்டோசுவாய்டு குடல் தாங்கிகளையும் இனப் பெருக்க உறுப்புகளையும் கொண்டிருக்கும். ஆனால் குடல் ஸைஃபனோசுவாய்டுகளில் குறைக்கப்பட்ட தாங்கிகளும் அகன்ற சைப்பனோகிளிஃப்புகளுமே (siphonoglyph) உள்ளன. தண்டுப்பகுதியிலுள்ள நான்கு வெற்றிடங்களை நீரால் நிரப்பும்போது உறுதிப்பட்டு மண்ணைத் தோண்டி புதைந்து கொள்ள முடியும். பென்னாட்டுலா எனும் இனம், சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தையும், இலைகள் போன்ற பாலிப்பு காணப்படும் ஆழ்கடலில் களையும் கொண்டது. அம்பெலுலா எனும் இனம் அட்லாண்டிக், பசிபிக் இந்தியக் கடல்களில் மட்டுமன்றி, காணப்படுவது அண்டார்க்டிக் கடலிலும் காணப்படுகிறது. இவற் றின் முதல் பாலிப்புகள் இலையைப் போலும், இரண் டாம் பாலிப்புகள் மேற்பகுதியிலும் காணப்படுகின் றன. கடல் பேனாக்களின் பெரும்பாலான னங்கள் ஒளியுமிழக் கூடியவை. கடல் மாசடைதல் ம.அ.மோகன் மனிதனின் நடவடிக்கைகள் காரணமாகப் பலவகைப் பட்ட மாசு சேர்ந்த கடலும் கடல் சார்ந்த இடமும் கேடுறுவதே கடல் மாசடைதல் என்று குறிப்பிடப் படுகிறது. கடலில் எவ்வளவு மாசு சேர்ந்தாலும் கடலின் தூய்மை கெடாது எனவும், அளவில் பெரிய அனைத்து மாசையும் செரித்துவிடும் எனவும், எதை யும் தாங்கும் ஆற்றல் கொண்டது. எனவும் பல காலமாக எண்ணிவந்தனர். ஆனால் இப்போது கடலின் இயற்கைச் சூழலைக் கெடுப்பதால் விளையும் தீமைகளை ஆராய்ந்து கடல் மாசடைவதைக் குறைக்கவும். தடுக்கவும் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வகைக் மாசுகள் கடலிலும் கடல் சார்ந்த இடங்களிலும் சேரும் கழிவுப் பொருள்களை நீர்ம வகைக் கழிவுகள், திண்ம கழிவுகள், காற்றில் கலக்கும் எனப்பிரிக்கலாம். கடல் அலை இரைச்சலையும் ஒரு மாசாகக்குறிப்பிட வேண்டும். கப்பல் கழிவுகள் துறை முதக்கழிவுகள் இரண்டும் மாசு மூலங்களாக உள்ளன. கப்பல் கழிவுகள். நீர்ம வகை எரிபொருள் எண் ணெய்க் கசிவுகள், சரக்கு எண்ணெய்க் கசிவுகள், கப்பற் பொறியிலிருந்து கசிந்திறங்கும் எண்ணெய் இவை கப்பலின் அடிமட்டத்தில் கழிவாகச் சேர் கின்றன. கழுவி விடும் நீரும், பல எந்திரக் கருவிகளிலிருந்து வெளிவரும் தூய்மையற்ற நீரும் கப்பலின் அடிமட்டத்துக்குப் போய்ச் சேருகின்றன. எண்ணெயும் நீரும் கலந்த கலவை மாசாக அமைந்து, கடலில் சேரும்போது கடல் மாசடைகிறது.