பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ மாசடைதல்‌ 239

கப்பலின் சரக்கு இறக்கப்பட்டபின் கப்பலின் எடை குறையும்போது. கப்பலைச் சமநிலையில் வைத்திருப்பதற்காகச் சரக்குக்குரிய தொட்டிகளில் அல்லது எரிபொருள் எண்ணெய்த் தொட்டி களில் கடல் நீரை நிரப்ப வேண்டி வேரும். அந்த நீர் மிகவும் தூய்மை கெட்டு எண்ணெய் கலந்து கழிவாகமாறும். மீண்டும் சரக்கு ஏற்ற நேரிடும்போது அந்த அழுக்கு நீரைக் கடலில் விடுவதாலும் கடல் மாசடையக் கூடும். அலுவலக திண்மக் கழிவுகள். கப்பலின் சமையலறை, உண்ணும் அறை முதலியவற்றிலிருந்து வரும் உணவுக் கழிவுகளும் ஈரக் குப்பைகளும் நீரில் கலக்கின்றன. பணியாட்களின் அறைகளிலிருந்தும், அறைகளிலிருந்தும் சேரும் குப்பை, காகிதக் கிழிசல் கள். அட்டைப் பெட்டிகள், கந்தைகள் போன்றவையும் கடல் நீரை மாசுப்படுத் தும். கடல் மாசடைதல் 239 பொருள் முதலியவை கப்பலில் ஏற்றப்படும்போதும் இறக்கப்படும்போதும் மிகுந்த தூசி பரவிக் காற்றில் சேரும். தரையில் படியும் தூசி, மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டுச் சுற்றுப்புற நீரில் கலக்க இடமுண்டு. சிதறும் கரிமப் பொருள்கள் கடல் நீரில் கலந்து நீரிலுள்ள ஆக்சிஜனின் அளலைக் குறைத்து விடு கின்றன.நச்சுத் தன்மையும் பரவக்கூடும். பெருமள வில் நீர்மச் சரக்குகள் ஏற்றப்படும்போதும் இறக்கப் படும்போதும் ஹைட்ரோகார்பன் பொருள்கள் வெளி வந்து சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் ஒளி வேதியியல் நடவடிக்கை காரணமாகப் புகை மண்டலமாகப் பரவக்கூடும். பண்படா துடைப்பதற்கான காற்றில் சேரும் மாசுகள். நிலக்கரி யை எரித்து நீராவி உண்டாக்கி இயக்கப்படும் கப்பல்களின் புகை, மற்றவகைக் சுப்பல்களின் புகை, கொதிகலன்களி லிருந்து வரும் புகை ஆகியவற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, சல்பர் டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்றவை காற்றில் மாசடைகிறது. கலப்பதால் இரைச்சல், இரைச்சல். கப்பல் பொறி அலை கப்பலின் சங்கொலி இரைச்சல் போன்றவையும் காரணமாகின்றன. கப்பலி துறைமுகக் கழிவுகள். கடற்கரையில் எண்ணெய் போன்ற பொருள்கள் பெருந்தொட்டிகளில் வைக்கப் பட்டிருக்கும். கப்பலில் ஏற்றுவதற்காகவோ லிருந்து இறக்கிய பின்னோ அத்தொட்டிகளில் எண்ணெய் தேக்கி வைக்கப்படும். அத்தொட்டிகளி லிருந்து வரும் கசிவு, ஏற்றும்போதும் இறக்கும்போதும் பணி புரிவோர் செய்யும் தவறுகளால் சிந்தும் நீர்மம், அத்தொட்டிகளைக் கழுவி விடும்போது வரும் கசிவு போன்றவை தரையில் றி அடிநிலை நீர் கெட நேரிடும். மழை நீருடன் கலந்தும் மாக ஏற் படும். திண்மக் கழிவுகள். பெருமளவிலான சரக்குகளை ஏற்றும்போதும் இறக்கும்போதும் கழிவுப் பொருள்கள் மிகையாகச் சேரும், சரக்கு ஈரமாகாமலிருக்க அடியில் பரப்பப்படும் வைக்கோல்,பாய் போன்ற பொருள் கள், காகிதப் பொருள்கள், முட்டுக் கொடுக்க உதவும் பொருள்கள் முதலியவற்றையும் கூறலாம். சிந்திய சரக்குகள். எஞ்சிய பொருள்கள் இவற்றில் சில நச்சுத்தன்மையுடையனவாகவும், தீமை தருவனவாக வும் இருக்கலாம். காற்றில் சேர்பவை. பெருமளவில் நிலக்கரி, பாஸ்ஃபேட், தானியம், உப்பு வகை, பெட்ரோலியப் எண்ணெய் சிந்துதல். கடலிலும் கலம் செல்லக் கூடிய கால்வாய் போன்ற நீர்ப் பாதைகளிலும் எண்ணெய், (crude oil) பெட்ரோல், மண்ணெண்ணெய் டீசல் எண்ணெய் சிந்துவதால் நீரின் தூய்மை கெடக்கூடிய வாய்ப்பு பல ஆண்டு களாக இருந்து வருகிறது. எண்ணெய் சிந்திக் கடல்நீர் மாசு படுவதால் மீன்களும் கரையோர விலங்குகளும் பாதிக்கப்படுவதும், மக்கள் உடல்நலம் கெடுவதும் கண்டு 1924 ஆம் ஆண்டில் அமெரிக்கா எண்ணெய் சிந்துவதைத் தடுக்கும் எண்ணத்துடன் ஒரு சட்டம் இயற்றியது. ஆனால் உலகில் எண்ணெய் எடுப்பதும், பல இடங்களுக்கு அதைக் கப்பலில் ஏற்றிச் செல்வதும் பெரிதும் அதிகரித்து வந்திருப்பதால், எண்ணெய் சிந்திக் கடல்நீர் மாசுபடும் வாய்ப்புகள் பெருகி உள்ளன. பத்து லட்சம் பீப்பாய் எண்ணெய்க்குக் குறைந்தது ஒரு பீப்பாய் எண்ணெய் வீணாகிறது. கப்பல்களி லுள்ள மாபெரும் தொட்டிகளில் எண்ணெய் நிரப்பும் போது தவறுதலாக வழிய விடுவதால் எண்ணெய் சிந்துவதைக் காணலாம். கப்பல்கள் மோதியோ, தரைதட்டியோ,தீப்பிடித்தோ விபத்துகள் ஏற்படுவ தால் எண்ணெய் சிந்துவதுமுண்டு. மசகு கப்பலின் பொறி உள்ள அறை, குழாய் இவற்றில் ஏற்படும் கசிவாலும் வரும் எண்ணெய், சிந்திய எண்ணெய் சிந்திய எரிபொருள் எண்ணெய் முதலியவை கழிவு நீருடன் கலந்து கப்பலின் அடித்தளத்தின் வழியே கடலில் சேரும்போது கடல் நீர் மாசுபடுகிறது. அவ்வாறு சேரும் கழிவு அளவில் சிறிதாக இருந்தாலும், கடலில் செல்லும் ஆயிரக் கணக்கான கப்பல்கள் வெளிவிடும் மொத்த அளவைக் கணக்கிட்டால் மாசின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதை அறியலாம். ஆழ்கடலில் பெட்ரோலியம் இருப்பது தெரிய வந்ததால் அங்கு எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப் படுகின்றன. கிணறுகளில் விபத்து ஏற்படும்போது மிகுந்த அளவு எண்ணெய் கடலில் கலக்க நேரும். எண்ணெய் தூய்மை செய்யும் ஆலைகள், பெட் ரோலிய வேதியியற் பொருள் தயாரிப்பு ஆலைகள்