240 கடல் மாசடைதல்
240 கடல் மாசடைதல் போன்றவையும் எண்ணெய் சிந்திக் கடலில் கலப் ப பதற்குக் காரணமாக உள்ளன. எண்ணெய் இருப்பதால் சில கடற்பாசிகள் நன்கு வளர்கின்றன. அப்பாசிகள் அளவுக்கு மீறிப் பெருகி னால் பிற உயிர்ப் பொருள்கள் வாழ இயலாத நிலை உண்டாகும். எண்ணெய் மிகுதியாகச் சிந்தப் படும் செங்கடலில் சில பாசி இனம் பெருகிப் பவளப் பூச்சிகளை அழித்து விட்டன. பொதுவாகக் கடலில் சிந்தும் எண்ணெய் வட்ட மாகப் பரவி, மெல்லிய படலமாக நீரின் மேல் மிதக் கும். ஆனால் காற்று நன்கு வீசும் பகுதியில் காற்றின் வேகத்தில் (3 அல்லது 4% வேகத்தில்) அக் காற்று செல்லும் திசையில் எண்ணெய் பரவும். புவி யின் வட பாதியில் ஒரு சிறிது வலப்புறமாகச் சாய்ந்து பரவும். கடல் நீரில் மேற்புறத்து நீரோட்ட மிருப்பின், அந்நீரோட்டத்தின் வேகம், செல்லும் திசை, காற்றின் வேகம், அது செல்லும் திசை ஆகியவற்றைப் பொறுத்து அமையும் நேரியப் பாதையில் எண்ணெய் பரவிச் செல்லும். அது ஓதம் (tide) எழும்போது எண்ணெய் நீருடன் நன்கு கலக்கும். கடற்கரை வரை எண்ணெய் கலந்த நீரைப் பொங்கு அலை பரவச் செய்து விடும். நீர் மீது பரவியுள்ள எண்ணெய் ஆவி யாகப் போகும். எடை குறைந்த பெட்ரோல் எண்ணெய் விரைவாக ஆவியாகும். காற்று 2 கடல் மைல் வேகத்தில் (ஒரு கடல் மைல் 6080 அடி அல்லது ஏறத்தாழ 1850 மீட்டர்) வீசும்போது எட்டே நிமிடங்களில் பெட்ரோல் 20% எடையை இழக்கும். ஆனால் பண்படா எண்ணெய் அந்த அளவு எடை இழப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும். ஆவி போக எஞ்சிய பண்படா எண்ணெய் பிசுபிசுப்பு டன் காணப்படும். அது நீருடன் கலந்துவிடும். சிந்திய எண்ணெய் தட்பவெப்பநிலை நிறை மிகையாகி நீருள் மூழ்குவதுண்டு. திற்குப்பின் அந்த எண்ணெய் மேலே வரக்கூடும். காரணமாக சில காலத் கடலில் ஓரிடத்தில் எண்ணெய் பரவியிருக்கும் பரப்பை முன்பெல்லாம் கண்ணால் பார்த்து மதிப் பிட்டு வந்தனர். பின்னர் லேசர், அகச்சிவப்புக் கதிர் ஆகியவை கொண்டு விமானத்தில் பறந்த வாறே ஆயும் முறை வந்தது. எண்ணெய் பரவி யுள்ள இடத்திலிருந்து வரும் அகச்சிவப்புக் கதிருக் கும் நீர் மட்டும் உள்ள இடத்திலிருந்து வரும் அகச் சிவப்புக் கதிருக்குமிடையே உள்ள வேறுபாட்டை வைத்து எண்ணெய் சிந்திய பரப்பு தெளிவாக அறியப் படுகிறது. சிந்திய பொருளின் தன்மை பற்றி ஆய்ந் தறிவதற்கு அணு உட்வேர். நிறமாலைப் படப் பிடிப்புப் போன்ற பல்வேறு முறைகள் கின்றன. பயன்படு ஓரிடத்தில் பரவிய எண்ணெயை மேற்கொண்டு பரவிச் செல்லாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் வேலி திரையும் வேலியும் போடும் முறைகள் கையாளப் படுகின்றன. நீரின் மேற்பரப்பில் மிதவை போன்ற அமைப்பைப் போட்டு அதனடியில் திரை போன்ற அமைப்பைத் தொங்கவிட்டு நீரிலுள்ள ஓட்டம் எண்ணெயைத் தள்ளிக்கொண்டு செல்லாதவாறு தடுப்பதே திரை அமைப்பு முறையாகும். முறையில் மிதவையொன்றின் உதவியால் செங்குத் தான பலகை நீர்மட்டத்துக்கு மேலும் கீழும் நிற்கு மா ாறு வேலி அமைப்புப் போடப்படும். சிறிய பரப் பில் பரவியுள்ள எண்ணெயைக் கட்டுப்படுத்த வேலி முறை உதவும். எண்ணெய்க் கப்பலிலிருந்து எண் ணெய் எடுக்கும்போது கப்பலைச் சுற்றி வேலி அமைப்புப் போட்டால், சிந்தும் எண்ணெய் பரவு வதைத் தடுக்கவும் சிந்திய எண்ணெயை அகற்றவும் இயலும். எண்ணெயை சிந்திய அகற்றுவதற்குப் பல வழிகள் உள்ளன. பல துளைகள் கொண்ட குழாயை நீரினடியில் போட்டு அதன் மூலம் காற் றைச் செலுத்திக் காற்றுக் குமிழ்களை உண்டாக்கி எண்ணெயை உயரக் கொண்டுவந்து திவலைகள் உருவில் எண்ணெயைச் சேகரிக்கலாம். மிகுதியான அலை இல்லாதபோதும் எண்ணெய் கெட்டியாக உள்ளபோதும், வேலித் தடுப்பு அமைத்து, அதன் மீது எண்ணெய் மட்டும் தாண்டிச் செல்லுமாறு வைத்து எண்ணெயைத் தேக்கிக்கொள்வதும் ஒரு முறை. நீர் ஒட்டாத ஆனால் எண்ணெய் மட்டும் ஒட்டக்கூடிய பொருளை மேற்பரப்பில் நகர்த்திக் கொண்டே சென்று, அதன்மீது ஒட்டிக்கொள்ளும் எண்ணெயை வழித்துக்கொள்வது வேறு ஒரு முறை. அகப்பை போன்ற அமைப்பைக் கப்பலோடு இணைத்து நீரின் மேலுள்ள எண்ணெயை வழித்து எடுப்பதும் உண்டு. நுரை ரப்பர், பாலியூரத்தேன் நுரை விரிப்புப் போன்றவற்றை மிதக்கவிட்டு, அதில் சேரும் எண்ணெயைப் பிழிந்தெடுக்கலாம். வைக் கோலை நீர்மேல் வைத்து அது எண்ணெயை உறிஞ்சியபின் வைக்கோலை அகற்றிவிடுவது சிக்கன முறையாகும். ஆனால் டப்பட்ட வைக்கோல் முழுவதையும் எடுக்க முடியாமல் அவற்றுள் நீருள் அமிழ்ந்துவிடும் குறையும் இதில் உண்டு. சில கப்பலிலிருந்து எண்ணெய் சிந்திக் கடல் மாச டைவதை முன்னேற்பாடாகத் தடுப்பது அல்லது சிந்தும் அளவைப் பெரும்பான்மையாகக் குறைப்பது சிறந்த முறையாகும். எண்ணெய்த் தொட்டிகளைக் கழுவ உதவும் நீர், சமநிலை எடை உண்டாக்கப் பயன்படுத்தப்பட்ட நீர் ஆகியவற்றை அப்படியே கடலில் விடாமல், கப்பலிலேயே தனியொரு தொட்டி யில் தேக்கிவைத்து, போதுமான காலம் சென்றபின் எண்ணெய் முழுதும் மேலே மிதக்கும்போது, கீழே யுள்ள நீரை மட்டும் கவனமாக வெளியில் விடுவது ஒரு முன்னேற்பாட்டு முறையாகும். இதற்கு, மேலே தேக்கி வைக்கும் முறை என்று பெயர். இம்முறை