246 கடல் மீன் முட்டை
246 கடல் மீன் முட்டை காணப் முன் இளவுயிரி. (prolarva) இப்பருவத்தில் மீன் குஞ்சுகள் உணவுப் பையோடு (yolk sac) படும். மிதவை வகை முட்டைகளிலிருந்து வெளிவந்த வரை இந்த குஞ்சுகள் ஏறக்குறைய இரண்டு நாள் வரை உட்கொள் உணவையே உணவுப்பையிலுள்ள கின்றன. பின் இளவுயிரி (post larva). இப்பருவத்தை அடையும் நேரத்தில் உணவுப்பையிலுள்ள உணவுப் பொருள்கள் தீர்ந்து விடுவதால் முதலில் வாய் திறக்கும். பின்பு ஒன்றன் பின் ஒன்றாகத் துடுப்புகள் தோன்றும். இந்தப் பருவத்தில் அவை கட்டாயமாக இரையைத் தேடிப்பிடிக்க வேண்டியிருப்பதால் இவ்வுறுப்புகள் தேவையாகின்றன. முதிர்ச்சியடைந்த குஞ்சுப்பருவம். இப்பருவத்தில் இவைவடிவத்தில் பெற்றோரை ஒத்துக் காணப்படும். இவற்றின் செதில்கள், எலும்புகள், துடுப்புகள் யாவும் நன்றாக வளர்ச்சி அடைந்திருக்கும். இனப்பெருக்க உறுப்புகளே வளர்ச்சியடைந்திருக்கா. பொதுவாக மீனினங்களின் முன்இளவுயிரி பின்இளவுயிரி பருவங் கள் மிதவையுயிரிகள் போன்று (planktonic larvac) நீரின் சலனங்களுக்குட்பட்டே நகர்கின்றன. முதிர்ச்சி அடைந்த குஞ்சுப்பருவத்தில் எண்ணியவாறு நீந்த முடிவதால் தேவையான உணவுப் பொருள்கள், பாது காப்பு மிக்க இட டங்கள் வற்றைத் தேடிச் சென்று விடுகின்றன. எடுத்துக்காட்டாக, விலாங்கு மீன்கள் ஆழ்கடலில் முட்டையிடுகின்றன. இம்முட்டைகளிலிருந்து வெளி வந்த குஞ்சுகள் (leptocephalus) அலைகளின் உதவி பால் ஆற்றின்கழிமுகங்களுக்கு அடித்துச் செல்லப்படு கின்றன. ஆற்றுக்குள் செல்லும்போது இவை உரு மாற்றம் அடைந்து எல்வர் என்னும் பருவத்தை அடை கின்றன. இப்பருவத்தில் இவை உருண்டையாகச் சிறுகயிறு போன்று காணப்படும். இம்மீன் குஞ்சுகள் ஆற்றுநீரின் வழியாக அணைக்கட்டுப் பக்கங்களுக்குச் சென்று, அங்கு தமக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் இவை தேடிக் கொள்கின்றன். முதிர்ச்சியடைந்தபின் இனப்பெருக்கக் காலங்களில் மீண்டும் கடலுக்குச் செல்கின்றன. கடலில் உள்ள மீன்கள் நன்னீரில் வந்ததும் இறந்து விடுகின்றன. ஆனால் இந்த மீனின் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதி நன்னீரிலும், ஒருபகுதி உவர் நீரிலும் முடிவடை கிறது. ஆராய்ச்சியாளர்கள் இம்மீன் குஞ்சுகளை ஆற்றோரங்களிலும் அணைக்கட்டுகளிலுமிருந்தும் திரட்டி நன்னீரில் வளர்த்துப் பயன் கண்டுள்ளனர். நாக்கு மீன்களின் (flat fishes) குஞ்சுகளும் கடலின மேற்பரப்பில் காணப்படும். வளர்ந்து உரு மாற்றம் அடையும் வரை அவற்றின் இரு கண்களும் பக்கவாட்டில் இருக்கும் (படம்-6). அதன்பின்பு ஒரு கண் மறுபக்கத்திற்குச் சிறிது சிறிதாக நகர்ந்து, இரண்டு கண்களும் ஒரேபக்கத்திலிருக்கும். முதிர்ச்சிப் யடைந்த பருவம் வந்ததும் (படம் 7) இக்குஞ்சுகள் அடித்தளத்துக்குச் சென்ற று விடுகின்றன. .90. விலாங்கு மீனின் லெப்டோ செபாலஸ் குஞ்சுப்பருவம் நாக்கு மீனின் குஞ்சு (உருமாற்றம் அடைவதற்கு முன்) நாக்கு மீனின் குஞ்சு (உருமாற்றம் அடைந்த பின்) இம்மீன்களின் ஒரு பக்கம் சேற்றோடு பதிவதால் இப்பக்கத்தில் கண்ணின் தேவை இல்லாமல் இருப் பதே இந்த உருமாற்றத்தின் முக்கிய காரணம் ஆகும். ஆனால் இளங்குஞ்சுகள் நீரின் மேல் பரப்பில் இருப்ப தால் இரு பக்கங்களிலும் கண்கள் இருப்பது இன்றி யமையாதகாகிறது. இவ்வகை மீன்களின் வளர்