248 கடல் முதலை
248 கடல் முதலை சூழ்நிலையில் வாழக் கூடிய பிற விலங்குகளைக் கொன்று தின்பவையாம். இந்தியா, இலங்கை, தாய்லாந்து, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவை காணப்படுகின்றன. கடல் முதலை சிறிய செதில்களையுடைய விலை மதிக்க முடியாத தோலைக் கொண்டுள்ளது. கடல் முதலை கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியக் கடற்கரை ஓரங்களில் மிகுதியாகக் காணப்பட்டன. தற்போது ஒரிசா மாநிலத்திலுள்ள பிட்டர் கன்னிகா மேற்கு வங்காளத்திலுள்ள சுந்தர்வனப்பகுதி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களில் மட்டும் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. ஆனால் அந்தமான் தீவுகளில் 1972 ஆம் ஆண்டு வரை கடல் முதலைகள் கொல்லப்பட்டு அவற்றின் தோல் பதப்படுத்தப்பட்டு வணிகப் பொருளாகப் பயன் படுத்தப்பட்டு வந்தது. அந்தமான் தீவுகளின் வடக்குக் கடற்கரைப்பகுதிகளிலுள்ள காலிகேட்பரங்கரா ஆகிய இடங்களில் இன்றும் கடல் முதலைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து உயிர் வாழ்கின்றன. மான், நிகோபார் தீவுகளில் கடல் முதலைகளின் மொத்த எண்ணிக்கை 330 என 1983 ஆம் ஆண்டு விட்டாக்கர் என்னும் அறிவியலார் கண்டுள்ளார். சிறிய அந்தமான் வனப்பகுதியினராலும் பல ஆயிரக் கணக்கான வங்காளக் குடியிருப்பினராலும் கவர்ந் தழிக்கப்பட்டாலும் இனப்பெருக்கம் செய்யக்கூடிய கடல் முதலைக் கூட்டங்கள் ஜாக்சன் நீரோடை என்னுமிடத்தில் நெருக்கமாக உள்ளன என்று அறியப் பட்டுள்ளது. கடல் முதலைகளின் பெருக்கத்திட்டம். இந்திய அரசின் உதவியால் மேற்குவங்காளம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற பல மாநில அரசுகள் 1975 ஆம் ஆண்டிலிருந்து கடல் முதலைகளின் மறுமலர்ச்சிக்காக முதலைகளின் முட்டைகளைத் தொகுக்கவும், முதலைக் குட்டிகளை வளர்க்கவும். இயற்கையாக உள்ள பாதுகாப்பான பகுதிகளில் அவற்றைப் பேணவும் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் உலக உணவு, வேளாண் கழக வல்லுநர் பஸ்ட்டார்டு என்னும் அறிவியலாரால் உருவாக்கப்பட்ட வழிமுறையைப் பின்பற்றி இன்று ஓரிசா மாநிலத்தில் 1500 நன்னீர் முதலைகளும். 1500 சதுப்பு நில நீர் முதலைகளும், 200 கடல் முதலைகளும் பாதுகாப்பான இயற்கைச் சூழ்நிலையில் பேணப்பட்டு வளர்க்கப்படுகின்றன. மேற்காணும் திட்டத்தை அந்தமான் நிகோபார் தீவுகளில் மிசு எளிதாக நடைமுறைப்படுத்தலாம். ஏனெனில் அங்கே கடல் முதலைகளைப் பேண இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய மரங்களாலான தட்டிகளும் உடனடி யாகக் கிடைக்கக்கூடிய இரால், நண்டு, பூச்சி, மீன் முதலிய உணவு வகைகளும் இவற்றிற்குக் கிடை டக்கக்கூடும். பல விவரங்களைப் பற்றிய கூர்ந்த ஆய்வுக் கண்ணோட்டம் செய்தால் கடல் முதலைக முட்டையிடும் இடங்களையும் எந்தெந்தத் தீவுகளில் மக்கள் நடமாட்டம் இல்லையோ அந்தந்த இடங் களில் முதலைகளுக்கான பாதுகாப்பு இடங்களையும் அமைத்துத் திட்டமிடவும் வாய்ப்பு இருக்கும். கடல் முதலை வளர்ப்பும் பண்ணை வளர்ச்சியும். கடல் முதலை வளர்ப்புக்கும் உற்பத்தி வளர்ச்சிக்கும் அந்தமான் தீவுகளில் உள்ள ஏற்புடைய வாய்ப்பு, முதலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும். அந்தமான் தீவுகளின் தட்பவெப்ப நிலை யும் முதலை வகைகளின் உற்பத்திக்கு ஏற்றவாறு இயற்கையாக அமைந்துள்ளது. மேலும் முதலைகளுக் குத் தேவையான உணவுப்பொருள்களும் அவற்றைப் பேணுவதற்கான கூண்டு முதலிய மரப்பொருள்களும், எளிதாகவும் விலை குறைவாகவும் கிடைக்கின்றன. மேலும் இப்பண்ணை வளர்ப்பால் பழங்குடி மக்களும் விரும்பிக் குடியிருப்பவர்களும் பயனடையலாம். பொதுவாக முதலைகளின் இறைச்சி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புரதச் சத்து மிகுந்த, கிடைப் பதற்கு அரிய பொருளாகும். முதலைகளின் முட்டை களும் குட்டிகளும் இயற்கையாக அவை முட்டையிடும் கூண்டுகளிலிருந்து எடுத்து வரப்பட்டுக் குறையளவில் கடலில் விடப்படுகின்றன. எஞ்சியவை முதலைப் பண்ணை வளர்ச்சிக்காசு வைக்கப்படுகின்றன. அ பெரிய, சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பான கூண்டுகளில் ஆயிரக்கணக்கான முதலைக் குட்டிகளை வளர்க்கலாம். இளம் முதலைகள் குடிசைத்தொழில் போல மற்றவரால் வளர்க்கப்பட்டு இரண்டு ஆண்டு வளர்ச்சிக்குப் பின்னர் பண்ணை வளர்ச்சிக்கென வனத் துறையினருக்கு விற்கப்படலாம். ஒரு முதலை சாதாரண கண்காணிப்பில் ஒரு நாளில் ஏறத்தாழ ஐந்து கிலோ உணவைத் தின்று நலமாக உள்ளது. உண்மையான முதலைப் பண்ணையை நடைமுறை யில் தற்போது நடத்த வாய்ப்பு இல்லை. இதற்கு உணவு கொடுப்பதிலும் பெரிய முதலைகளை வளர்ப்ப திலும் ஏற்படும் இன்னல் அந்தந்த இடத்திற்குரிய கொடிய பண்பு உடைய ஆண்,பெண் முதலைகளைப் பேணுவதில் உள்ள துன்பம் ஆகியவை காரணங் களாகும். சா தாரணமாசு, கடல் நீரில் வசிக்கும் பெண் முதலை ஒரு மீட்டர் உயரமான கூட்டைச் சதுப்பு நிலப் பகுதிகளில் ஏப்ரல்-சூலை மாதங்களில் தயார் செய்கிறது. அது 40-90 முட்டைகளை இட்டபின் 70 நாளில் குட்டிகள் தோன்றுகின்றன. முதலை முட்டை, குட்டிகளைப் பல உயிரிகள் கொன்று தின்ப தாலும் சுடல் நீர் வெள்ளத்தாலும் அவை அழிவடை கின்றன. பொதுவாக முதலை வளர்ப்புத் திட்டத்தில் ஓர் ஆண்டிற்கு ஏறத்தாழ 40 உயிருள்ள முதலைக் குட்டிகள் ஒவ்வொரு கூட்டிலிருந்தும் ஒவ்வொரு குட்டி யாக வளர்ந்து வெளிவரும் எனக் கருதப்படுகிறது.