பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சாப்‌ பொருள்‌ செறிவூட்டு முறைகள்‌ 7

துகளின் திசை வேகம் பின்வரும் கோவையின்படிக் கணக்கிடப்படுகிறது. +dg (Ps - Pc) Pa R ds : புவி ஈர்ப்பு விசை (ஊடகத்தால் திருத்தப்பட்டது) நி. மற்றும் p, : நீர்மம் மற்றும் திண்ம நிலைப் பொருள்களின் அடர்த்தி எண்கள் R : பாய்மத் தடுப்புக் குணகம் ( கனிம அடர்ப்பு நிகழ்வில் இதன் மதிப்பு ஏறக்குறைய 2.5 ஆகும்). வகையீட்டு அமைப்புகள் (classifiers). அடர்த்தி அல்லது அளவை அடிப்படையாகக் கொண்ட வழி முறைகளில் நீர் பாய்ம ஊடகமாகப் பயன்படுகிறது. அலசிக் களையும் முறையில் குழிவான தட்டுகளில் கனிமப் பொருளை நீரிலிட்டுச் சுழற்றினால், அடர்வு மிகுதுகள்கள் அடியில் படிந்து விடுகின்றன. இலேசான துகள்கள் நீரில் தொங்கல் நிலையில் உள்ளன. மண்ணிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படும் இம்முறை தற்போது வழக்கில் இல்லை. ஹம்ஃப்ரே சுருள் எனும் அமைப்பில் ஒரு சுருள் வடிவிலான மென் சரிவோடையைப் பயன்படுத்திக் குறுக்களவில் சிறிதே மாறுபடும் துகள்களை நீரினால் கழுவுவர். சுருள் குழாயில் இலேசான துகள்கள் நீரின் மேற்பரப்பிலும், கனமானவை குழாயின் அடிச் சுவரிலும் உருண்டு செல்கின்றன. மதகுப்பெட்டி (sluice box) எனும் அமைப்பில் ஒரு தொட்டியில் நீர் நிரப்பி, கனிமப் பொருளைக் சுச்சாப் பொருள் செறிவூட்டு முறைகள் 7 கீற்றுப் பாய்வாக அதிலிட்டால், துகள்கள் நீரோட் டத்தில் அடித்துச் செல்லப்படும்போது கனமான துகள்கள் தொட்டியின் தரையில் படிகின்றன. தரையில் கின்றன.தரையில் படிந்த துகள்கள் மீண்டும் நீரோட்டத்தினால் மேல் எழாதவாறு சிறு தடுப்பு மேடைகள் (baffles) தடுக் கின்றன. தொட்டியின் விளிம்பில் வழிந்தோடும் நீரில் இலேசான துகள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. சுரங்கப் பகுதிகளில் இம்முறையைப் பயன்படுத்தி அங்கு ஓடும் சிற்றோடைகளைத் திசை திருப்பி மதகு களை உருவாக்குதல் முன்பு வழக்கமாக இருந்தது. இம்முறையின் இயக்கம் படம் 3 இல் தெளிவாக்கப் பட்டுள்ளது. சுழல்வான்கள் (cyclones) காற்றையோ, நீரையோ பயன்படுத்தித் துகள்களை வகையீடு செய்கின்றன. மேலெ இலேசான துகள்கள் காற்றுச் சூழலில் சிக்கி ழுந்து வெளியேற்றும் அமைப்பில் நுழைகின்றன. கன மான துகள்கள் புவி ஈர்ப்புக்கு உட்பட்டு அல்லது சுவரில் சுழல்வானின் எறியப்பட்டு வீழ்படிவா கின்றன. அடர் ஊடக வழிப் பிரிப்பு (dense medium separation) எனும் முறையில் சிலிக்காபோன்ற மண் வகைப் பொருளுக்கும், உலோக சல்ஃபைடு போன்ற கனிம வகைப் பொருளுக்கும் இடைப்பட்ட அடர்த்தி கொண்ட நீர்மத்தில் கச்சாப் பொருளைக் கலந்து கலக்கினால், சிலிக்கா மிதக்கும்: கனிமம் வீழ்படி வாகும். இம்முறையில் நிகழத்தக்க நீர்மத்தைத் தெரிந்தெடுப்பது கடினமேயாயினும், கலீனா, மாக்ன டைட் போன்ற கனிமங்கள் இம்முறையால் செறி வூட்டப்படுகின்றன. அலைத்துப் பிரித்தல் (jigging). ஊடுபுகவிடும் தன்மை மிகக் குறைவாக அமைந்துள்ள வலையின் 1 3 5 2 படம் 3.1.நீரோட்டத்தின் நுழைவாயில் 1. தடுப்பு ஊட்டம் 4. 5. நுண்துகள் கலந்த நீர் வழிந்தோடும் பாதை