252 கடல் வளங்கள்
252 கடல் வளங்கள் நன்னீர் வளம். உலகெங்கும், நிலத்தினின்று கிடைக்கும் குடிநீர் உற்பத்தி அளவு குறைந்து வரு கின்ற தற்காலத்தில் உலகின் கவனம் நன்னீரை பல நாடி, கடல் நீருக்குச் சென்றுள்ளது. காரணம், கடல் நீரில் ஏறத்தாழ 96.5% நன்னீராகும். உலகின் நாடுகளிலும், குறிப்பாக, குவைத், ஈரான், சவூதி அரோபியா போன்ற அரபு நாடுகளிலும், மொத்தம் நூற்றுக்கும் மேலான கடல்நீரை நன்னீராக்கும் தொழிற்சாலைகள் (desalination plants) இயங்கி வருகின்றன. இவை நாள் ஒன்றுக்கு. மொத்தத்தில் 500 மில்லியன் காலனுக்கும் மேலான நன்னீரை உற்பத்திச் செய்ய வல்லவையாகும். இவற்றுள் மிகப்பெரிய தொழிற்சாலை ஹாங்காங்க் நாட்டில் உள்ளது. இது நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 50 கோடி காலன் நன்னீரை உற்பத்தி செய்யக்கூடியதாகும். கடட ல்நீரை நன்னீராக்க மிகுதியான முறைகள் உள்ளன. அவற்றில் மிகப் பழமையான முறை, சூரிய வெப்பக் காய்ச்சி வடித்தல் முறை (solardi stillation ஆகும். இம்முறையில், சூரிய வெப்ப ஆற்றல் மூலம் கடல்நீர் ஆவியாக்கப்படுகிறது. பின்னர், அந்த நீராவி குளிர்ச்சியாக்கப்பட்டு, நன்னீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது பல புதிய முறைகள் தோன்றியுள்ளன. இவை மின்சாரமுறை, வேதிமுறை போன்றவையாகும். கடல் நீரிலிருந்து இவ்வாறு நன்னீரைப் பிரித் தெடுக்கும் தொழில் பெருமளவில் நடைபெறுமானால் இதைச் சுற்றியுள்ள கடல் நீரின் உப்புச்சத்து பெரு மளவில் அதிகரித்து, அதன் மூலம் கடலின் சுற்றுச் சூழ்நிலையும், வேதித் தன்மையும் மாறுபட்டு. கடல்வாழ் உயிரினங்கள் பெரிதும் தாக்கமடையும் வாய்ப்புண்டு. இத்தகு தீயவிளைவுகளைத் தவிர்ப் பதற்காக. நன்னீர் பிரித்து எடுக்கப்பட்ட பின்னர் மிகுதியான அளவு உப்படர்த்தியுள்ள கடல் நீரைக் (brine கடலில் கலக்கும் கழிவு நீரோடு சேர்த்து, ஒரு கலவையாக மாற்றி, ஆழ்கடலின் மிக ஆழத்துக்கு அமிழ்ந்து போகச் செய்யக் கடலியல் வல்லுநர்கள் திட்டமிடுகின்றனர். கடல் நீரிலிருந்து நன்னீரைப் பிரித்தெடுக்கும் முறை மூலம் மட்டு மன்றி, வேறு சில வழிகள் மூலமும் கடலிலிருந்து நன்னீரைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று. அண்டார்டிக்கா போன்ற துருவப் பகுதிகளில் மிதந்து கொண்டிருக்கும் மிகப்பெரும் பனிப்பாறைகளைக் கடல்வழியே இழுத்து வந்து, பின்னர் அப்பனிப்பாறைகளை நன்னீர் எடுக்கும் முறையாகும். கடலியல் வல்லுநர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். உருகச்செய்து இம்முயற்சியில், இருநூற்றைம்பது மில்லியன் கனமீட்டர் நன் னீரைக் கொண்டுள்ள ஒரு மிகப்பெரும் பனிப் பாறையை (1000 X 1000 × 250 மீட்டர்) அண் டார்டிகாவிலிருந்து தென் அமெரிக்காவுக்கு இழுத்துக் 35 கொண்டுவர 300 நாள் ஆயிற்று. அப்பாறை இழுக்கப்பட்டு வந்தபோது, கடலிலேயே மொத்தத் தில் 85% கரைந்துவிட்ட போதும், ரூ.270 லட்சம் மதிப்புள்ள மில்லியன் கனமீட்டர் நன்னீர் கரைக்கு வந்து சேர்ந்துள்ளது. பனிப்பாறையை இழுத்து வருவதற்கு ஆன செலவு ரூ.130 லட்சம் மட்டுமே. மொத்தத்தில், இம்முயற்சி இலாப மானதாசுவே அமைந்துள்ளது. இது போன்ற மிகப்பெரிய பனிப்பாறைகள் துருவப்பகுதிக் கடல்களில் மிகுந்த அளவில் காணப்படுகின்றன. மொத்தப் பனிப்பாறைகளும் உருகினால் உலகில் உள்ள பெருங்கடல்களின் நீர்மட்டம் ஏறத்தாழ 260 மீட்டர் உயர்ந்துவிடும் என்பதன் மூலம் துருவப் பகுதிகளில் கடலில் உறைந்து மிதக்கும் பனிப்பாறை களின் அளவைத் தெரிந்து கொள்ளலாம். ஆயினும், இவ்வாறு,பனிப்பாறைகளை இழுத்து வரும்போது, அவை வரும் இடமெங்கும் கடலின் சுற்றுச்சூழ் நிலையும், கடல் நீரின் தட்பவெப்பநிலையும் பெரும் மாற்றம் அடைவதால், கடல்வாழ் உயிரினங்கள் பெரிதும் தாக்கமுறும். ஆகவே, இம்முறையில் நன்னீர் பெறும் முயற்சி குறித்துக் கடலியல் வல்லுநர் கள் முனைப்பான மறு ஆய்வும் செய்து வருகின்றனர். கடலின் சுற்றுச் சூழ்நிலைக்கோ, கடல்வாழ் உயிரினங்களுக்கோ எவ்விதத் தீங்கும் விளைவிக்கா மல், கடல் மூலம் நன்னீரைப் பெற வேறு ஒரு வழியும் உள்ளது. அது, வளி மண்டலத்திலிருந்து நன்னீர் எடுக்கும் முறையாகும். இதற்கென, வெப்ப நிலை மிகுந்துள்ள தீவுகளில் பெரும் அளவில் குளிரூட்டும் கோபுரங்கள் (Cooling towers) நிறுவப் பட்டு, ஆழ்கடலினடியிலிருந்து, மிகக்குளிர்ந்த நிலையி லிருக்கும் கடல் நீரை ஏற்றி, அதன் மூலம் வளி மண்டலத்தைக் குளிரூட்டி, வளி மண்டலத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கி, பின்னர் மழை பெய்யச் செய்யலாம் என்று கடலியல் வல்லுநர்கள் கண்டறிந் துள்ளனர். இதன் மூலம், சுடலின் சுற்றுச் சூழ் நிலைக்கோ, வேதியியல் தன்மைக்கோ கடல்வாழ் உயிரினங்களுக்கோ எவ்விதத் தீங்கும் ஏற்படாது. மில்லியன் எண்ணெய் வளம். எண்ணெயும் எரிவளிமமும் உலகின் இன்றியமையாத் தேவைகளாகும். உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 35,5 டன்னாக இருக்கும் போது பெருங்கடலிலிருந்து கிடைக்கும் எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் டன்னாகும். அதாவது மொத்த எண்ணெய் உற்பத்தியில் 18% கடலிலிருந்து கிடைக்கிறது. இந்தியாவில், பம்பாய்க் கருகே கடலிலிருந்து பெட்ரோலியம் எடுக்கப்படு கிறது. ஆற்றல் வளம். கடலின் உயிர்வளங்களையும், கனிவளங்களையும், நன்னீர் மற்றும் எண்ணெய் வளங் களையும் துய்க்கும் நிலையில் கடல் தன்னிடத்தே தக்க வைத்துள்ள எண்ணற்ற ஆற்றல் வளங்