254 கடல் வளர்ச்சித் துறை
254 கடல் வளர்ச்சித் துறை வல்லுநர் எஸ்.இஷி, காசிம் என்பார் தலைமையில் இந்திய அரசின் கடல்வளர்ச்சித் துறையைப் (Depart- ment of ocean development) புதுடில்லியில் நிறுவியது. இது கடலறிவியலின் பல துறைகளான கடல்வாழ் உயிரியல், கடல் வேதியியல், இயற்பியல், புவியியல், பொறியியல், தொழில்நுட்ப இயல் முதலியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டு, கடலறிவியல் வளர்ச்சி எல்லோருக்கும் பயன்படும் வகையில் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. கடல் வளர்ச்சித்துறையின் ஆய்வும், வளர்ச்சியும் அண்டார்க்டிக்கா ஆய்வுப் பயணம். அண்டார்க் டிகா பனிக்கடல், இந்தியப் பெருங்கடலின் தட்ப வெப்பநிலையை மட்டுமன்றி, அதன் கடல்வாழ் உயிரினங்களையும் தாக்குகிறது. ஆகவே, இந்தியா அண்டார்க்டிகா ஆராய்ச்சியில் தனி ஆர்வம் காட்டி, 1982 ஆம் ஆண்டு கடல்வளர்ச்சித்துறையின் மூலம் முதல் அண்டார்க்டிக் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கியது. இதுவரை ஆறு அண்டார்க்டிக் ஆய்வுப்பயணங்களை இந்தியா வெற்றிகரமாக. நடத்தியுள்ளது. மூன்றாம் ஆய்வுப் பயணத்தின் போது, அண்டார்க்டிகாவில் தக்க்ஷின் கங்கோத்ரி எனும் நிலையான ஆய்வகம் ஒன்றை நிறுவி, கடல றிவியலின் வெவ்வேறு பிரிவுகளிலும் முனைப்புடன் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. கனிமப்பொருள் ஆய்வு. ஆழ்கடலில் அடர்த்தி யாகப் படிந்து கிடக்கும் கனிப்பொருள்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவை உலோகத் தாதுக்கள் ஆகும். இந்தியப் பெருங்கடலின் அடித்தளத்தில் மட்டுமே ஏறத்தாழ 15 மில்லியன் சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இந்தக் கட்டிகள் பரந்து கிடக்கின்றன. இவற்றில் மாங்கனீஸ் மட்டுமல்லாமல் இரும்பு, நிக்கல், தாமிரம்,கோபால்ட், ஈயம், மாலிப்டினம், கேட்மியம், வெனேடியம், டைட்டேனியம் போன்ற பற்பல விலை மதிப்புடைய உலோகத்தாதுக்கள் உள்ளன. ஆகவே R.V. கவேஷனி O.OR.V. சாகர்கன்யா என்னும் ஆய்வுக்கப்பல்கள் மூலம் இக்கனிமப்பொருள் ஆய்வைத் தொடங்கிய கடல்வளர்ச்சித் துறை, இன்று முனைப்பாள ஆய்வுகளின் விளைவாக, இந்தியப் பெருங்கடலில் இரண்டு கனிமச்சுரங்கங்களைக் கண்டு, அவற்றிலிருந்து உலோகக் கட்டிகளை வெளிக் கொணரும் சுரங்க வேலைகளை மேற்கொள்ள உலகக் கடல்கனிகள் பிரிவு (International Seabed Authority) மூலம் அனுமதி பெற்றுள்ளது. தன் ஆழ்கடல் தொழில்நுட்ப ஆய்வு. இந்தியக் கடல் களின் அடித்தளங்களையும், ஆழ்கடல் நீர்மட்டங் களையும் ஆராயப் புதிய தானியங்கி நீர்மூழ்கிக் கருவி களையும், ஆய்வுக்கருவிகளையும், கடலடியில் தானே இயங்கும் புகைப்படக் கருவிகளையும் கடல் வளர்ச்சித் துறை இப்போது பயன்படுத்தி வருகிறது. மேலும் இத்தகு புதிய தொழில்நுட்பக் கருவிகளைத் தானே உருவாக்கவும் மிகு முயற்சி எடுத்துள்ளது. வளக் ஆய்வுக் கப்பல்களும், அவற்றின் பராமரிப்பும். மீன் கடலியல் ஆய்வுக்கென ஆர். வி. கவேஷனி, O.R.V சாகர்கன்யா F.O.R.V சாகர்சம்பதா ஆகிய மூன்று ஆய்வுக்கப்பல்களை வாங்கியுள்ள கடல் வளச்சித்துறை இந்திய அறிவியலார்களைக் கொண்டு அவற்றின் மூலம், குறுகிய - நீண்டகாலக் கடல் ஆய்வுப்பயணங்களை மேற்கொண்டு இந்தியக் கடல் களை ஆராய்ந்து வருகிறது. புதிய கடலியல் ஆய்வுக் கான கருவிகள் யாவும் பெற்றுள்ள இக்கப்பல்களுள் புதியதான சாகர்சம்பதா பனிப்பாறைகள் நிறைந்த அண்டார்க்டிக் கடலுக்கும் சென்று மீன்வள ஆய்வை யும் கடலியல் ஆய்வையும் நடத்தி வருகிறது. கடலில் மாசு படிதல் பற்றிய ஆய்வு. ஏறத்தாழ 6500 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ள இந்தியா மீன் முதலிய புரதச்சத்துமிக்க கடல் வாழ் உயிரினங்களையும் கனிமப்பொருள்களையும் அரபிக் கடல், வங்காள விரிகுடாக்கடல்களில் கொண்டுள் ளது. இந்த அரிய இயற்கை வளங்கள் அழிந்து போகா திருக்க அவை இருக்கும் கடல் நீரில் மாக படியா வண்ணம் காக்க வேண்டும். பெருநகரங்களிலிருந்து வெளியாகும் கழிவுநீர் மூலமும். வேளாண் பூச்சிக் கொல்லிகள் நீரில் கரைந்து பின் ஆற்றோடு சேர்ந்து கடவில் கலப்பதன் மூலமும், கடல் நீரில் மாசுபடிவது மிகுந்து கொண்டே வருகிறது. இவை தவிர எண் ணெய்க் கப்பல்கள், துறைமுகங்களிலிருந்து வெளி யாகும் எண்ணெய், கடல்வாழ் உயிரினங்களைப் பெரிதும் பாதிக்கின்றன. இவ்வாறு கடலில் படியும் மாசுகளின் அளவைக் குறித்தும், இவற்றால் கடலின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களால் சுடல்வாழ் உயிரினங்களில் காணப்படும் தாக்கம் குறித்தும் கடல் வளர்ச்சித்துறை முனைப்புடன் ஆய்வு செய்து வருகிறது. செயற்கைக்கோள் தொழில்நுட்ப ஆய்வு. நெடுந் தாலைவு கப்பல் பயணத்துக்கும், ஆழ்கடல் எண் ணெய் எடுக்கும் தொழில், ஆழ்கடல் கனிமச்சுரங்கத் தொழில் போன்றவற்றிற்கும், ஏனைய கடல் தொடர் பான தொழில்கள் பலவற்றிற்கும் குறுகிய நீண்ட கால நிலை வேறுபாடு பற்றிய விவரம் மிக மிகத் தேவைப்படுகிறது. ஆகவே, செயற்கைக் கோள்களின் மூலம் காலநிலை வேறுபாடுகளை நுட்பமாகக் கணக் கிடும் முறையைக் கடல்வளர்ச்சித்துறை கையாண்டு வருகிறது. கடலின் உயிர்வளங்கள் பற்றிய ஆய்வு. புரதச்சத்து மிக்க மீன்கள், இறால்கள், கடல்பாசிகள் முதலியன மக்களுக்கு உணவாகவும். அந்நியச் செலவாணி மூலம் வருவாய் ஈட்டவும் பெரிதும் பயன்படுகின்றன. கடல்வளர்ச்சித்துறை, சாகர்கன்யா சாகர்சம்பதா முதலிய ஆய்வுக்கப்பல்கள் மூலம், ஆழ்கடலில் மீன்