கடல் வாழ் உயிர்ப் பொருள் தரக் கட்டுப்பாடு 255
வளம் மிகுந்துள்ள பகுதிகளைக் குறித்து ஆராய்ந்து வருவதோடு இந்த இயற்கை உயிர்வளங்களைப் பன் மடங்கு பெருக்கவும் மிகுமுயற்சி எடுத்து வருகிறது. கடலறிவியலாளர்களைப் பயிற்சி மூலம் உருவாக்கும் திட்டம். கடல் வளர்ச்சித்துறை, தன் தீவிரக் கடல் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுக் காலத்துக்குள் ஏறத்தாழ 1000 அறிவியலாளர்களையும் பொறியியலாளர்களை யும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் தேர்ந்தெடுக் கத் திட்டமிட்டுள்ளது. வெவ்வேறு பல்கலைக் கழகங் களிலும், இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும், ஆய்வு நிறுவனங்களிலும், கடலியல், சுடல்வாழ் உயிரி யல் குறித்த பாடங்களைப் பயிற்றுவிப்பதன் மூலமும், ஆராய்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் இளம் கடலறிவியலாளர்களை இப்போதி ருந்தே உருவாக்க கடல்வளர்ச்சித்துறை மிட்டுச் செயலாற்றி வருகிறது. திட்ட கடலியல் புள்ளி விவரங்களைத் தொகுத்தலும், பயன் படுத்தலும். இந்தியப் பெருங்கடல் பற்றிய பழைய புள்ளிவிவரங்கள் அனைத்தையும், மீன்வளத்துறை போன்ற தொடர்புடைய துறைகளிடமிருந்தும், வெளி நாட்டு நிறுவனங்களிடமிருந்தும் தொகுக்கும் பணி யில் கடல்வளர்ச்சித்துறை முனைப்புடன் ஈடுபட் டுள்ளது. இப்பணிக்கென, கோவாவில் அமைந்துள்ள தேசியக்கடலியல் நிறுவனத்தில் இந்தியத் தேசியக் கடலியியல் புள்ளி விவர மையம் அமைக்கப்பட் டுள்ளது. உள்ளன. கடலிலிருந்து ஆற்றலைப் பெறுதல். கடலில் மிகுதி யான ஆற்றல் வளங்கள் அவை நிலை யானவையும் ஆகும். கடல் வளர்ச்சித்துறை, மூன்று வித ஆற்றல்களைக் கடலிலிருந்து பெற முயன்று வருகிறது. அவை ஓதங்களின் மூலம் கிடைக்கும் ஆற்றல் (tidal encrgy), கடலின் வெப்ப ஆற்றலை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் கடலலைகள் மூலம் ஆற்றல் ஆகியவையாகும். அந்தமான், நிக்கோபார் தீவுகளிலிருந்தும், இலட்சத் தீவுகளிலிருந்தும் சில இடங்களைத் தெரிந்தெடுத்து, கடலின் வெப்ப ஆற்றலிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் பெருமுயற்சியில் கடல் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது. கிடைக்கும் கடல் நீரிலிருந்து நன்னீர். உலகெங்கும் நிலத்தி னடியிலிருந்து கிடைக்கும் நன்னீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால், நன்னீருக் காகக் கடலை எதிர்பார்க்கவேண்டிய நிலை நெருங்கி விட்டது: கடலின் உப்பு நீரிலிருந்து உப்பைப் பிரித் தெடுத்து, நன்னீர் உற்பத்தி செய்யும் பணியில் கடல் வளர்ச்சித்துறை ஆய்வு செய்து வருகிறது. இதற்கென சூரிய வெப்பத்தால் கடல்நீரை ஆவியாக்கும் முறை மின் சவ்வூடு பரவல் முறை முதலியவை தற்சமயம் பயன்படுகின்றன. கடல் வாழ் உயிர்ப் பொருள் தரக் கட்டுப்பாடு 255 கடல் தொடர்பான சட்டவல்லுநர் குழாம் அமைத்தல். இந்தியக் கடல் எல்லைகளை வரையறுப்பதன் மூலமே கடல் வளங்களையும். கடல் ஆய்வுகளையும் பெருக்கவும், மேம்படுத்தவும் இயலும். ஆகவே, அனைத்துலக அளவில் கடல் தொடர்பான சட்ட நுணுக்கங்களைப் பற்றியும், அண்டார்க்டிகா குறித்த விவரங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள வழிசெய்யும் வகையில் கடல் வளர்ச்சித்துறை திறமை மிக்க சட்டக்குழு ஒன்றை அமைத்து வருகிறது. கடலறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி. கடலறிவியல் தொடர்புடைய அனைத்துத் துறை களிலும் ஆராய்ச்சித் திட்டங்களைத் தீட்டவும். அவற்றைத் திறம்படச் செயல்படுத்தவும் மட்டுமல்லா மல் அவை குறித்த ஆராய்ச்சி மாநாடுகள் நடத்தவும், கருத்தரங்குகளைக் கூட்டவும், பொதுமக்களுக்குக் கடலறிவியல் நுணுக்கங்களை வெளிப்படுத்தக்கூடிய கடலறிவியல் கண்காட்சிகளை அமைக்கவும் கடல யல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ஒன்றைத் தோற்றுவித்து, பல்கலைக் கழகங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் கடலறிவியலை வளர்க்கும் பணியில் கடல்வளர்ச்சிக் கழகம் தன்னை முழுதுமாக ஈடு படுத்திக் கொண்டுள்ளது. W டலறிவீ ரா.நடராசன் கடல் வாழ் உயிர்ப் பொருள் தரக் கட்டுப்பாடு கடல் வாழ் உயிரினப் பொருள்கள், எளிதில் அழுகும் தன்மை உடையவை. இவை ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படும்போது, வெளி நாட்டினரின் தேவை களுக்குக்கேற்ப அவற்றிற்குத் தரம் வகுக்கப்பட வேண்டும். அவை பிடிக்கப்பட்டவுடன், அவற்றின் தகைகள், நுண்ணுயிர்ப் பாதிப்புகளற்றனவா என அறியப்படும். அவற்றின் செதில்களிலோ வெளித் தோல் ஓடு போன்றவற்றிலோ ஓரளவு நுண்ணுயிரி களின் எண்ணிக்கை இருக்கலாம். மீனினங்கள் நீரில் வாழும் போது, ஓரளவு தடுப்பு ஆற்றலைப் பெற்று, நுண்ணுயிரிகள் படராவண்ணம் பாதுகாத்துக் கொள் கின்றன. அவற்றின் உள்ளும்,புறமும் பரவி நிற்கும் நொதிகள், அன்றாட வளர்சிதை மாற்றங்களில் பங்கு கொள்வதோடு ஏனைய நுண்ணுயிரிகள் படராமல் தடுக்கும் வேதிப் பொருள்களாகவும் ஓரளவு இயங்கு கின்றன. அவை நீருக்கு வெளியே எடுக்கப்பட்டவுடன், நொதிகளின் செயல்பாடு மங்கி, நுண்ணுயிரிகள் மிகுதியாகப் பெருக வாய்ப்பு உண்டாகிறது. ஓர் உயிரினம் இறந்தவுடன் அதனுடலில் ஏற் படும் பல்வேறு மாற்றங்களால் தன்னழிவு (autolyists) வேலைகளும், படர்ந்து எண்ணிக்கையில் பெருகும் நுண்ணுயிரிகளும், அவற் வெளிப்புறத்திலிருந்து