பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 கடல்‌ வாழ்‌ உயிர்ப்‌ பொருள்‌ தரக்‌ கட்டுப்பாடு

256 கடல் வாழ் உயிர்ப் பொருள் தரக் கட்டுப்பாடு றில் அழுகும் தன்மையை உண்டாக்குகின்றன. தற் கால அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி முறை களால் இறந்த உயிரினத்தின் தரத்தை மேலும் சிதைவடையாவண்ணம் ஓரளவுதான் பாதுகாக்க முடியும். அவற்றின் முந்தைய தன்மையைச் சீரான நிலைக்கு உயர்த்த உள்ளடக்குதல், புட்டிகளில் அடைத்தல், உலர வைத்தல் போன்ற முறைகளில், மேலும் அந்த உயிரினங்கள் அழிவுறாமல் பாதுகாக்க முடியும். அழிவுறும் அல்லது அழிவுற்ற தன்மையில் பதனிடப்பட்டவை தரம் குறைந்தவையாகக் காணப் படும். ஆகவே தர ஆய்வு செய்யும்போது, நல்ல நிலையில் உள்ளவற்றையே தேர்வு செய்யவேண்டும். . இந்தியாவில், இறால் வகைகளை ஏற்றுமதிக் காகத் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் அடிப்படைத் தூய்மையற்ற சூழ்நிலையிலேயே இயங்கி வந்தன. மேலும் மீன், இறால் முதலியன பிடிக்கப்பட்டுச் சேகரிக்கப்படும் நிலைகளிலும், ஏற்ற நலவாழ்வு முறைகள் பின்பற்றப்படவில்லை. இவற்றை முறை யாகச் செம்மைப்படுத்த வேண்டியதை உணர்ந்து ஒவ்வொரு கட்டமாகப் பல நிலைகளில் தரநியமங் களும் புகுத்தப்பட்டன. வெளிப்புறத் தோற்றக் கூறுகள் தொடக்க நிலைகளிலேயே கடைப்பிடிக்கப் பட்டாலும், நியமங்கள் படிப் நுண்ணுயிரிகளின் கொண்டு வரப்பட்டன. 1968 இல் படியாகவே ஓடுரித்து வேகவைத்துத் தயாரிக்கப்பட்ட இறால் களுக்கு நுண்ணுயிரி அளவு நியமம் வரையறுக்கப் கப்பட்டது. தவளைக் கால்களுக்கு, மொத்த நுண் ணுயிரி அளவும், கேடு தரும் நுண்ணுயிரிகளின் அளவும் 1969 இல் வகுத்துக் பொதுவாக கூறப்பட்டன. இறால் நியமங்கள் தன்னிச்சை ஆய்வுக்கு 1970 இல் கொடுக்கப்பட் வகைகளுக்கு, நுண்ணுயிரி டனவேயன்றி, தர நியமமாக அவை நிர்ணயிக்கப் படவில்லை. அவ்வப்போது பகுத்தாராயப்பட்ட நுண்ணுயிரி எண்ணிக்கை உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் அதற்கேற்ப உற்பத்தியில் கண்காணிப்பை அதிகரிக்க வசதி செய்து கொடுக்கப் பட்டது. இதன் காரணமாகத் தயாரிப்பாளர்கள், தக்கதொரு அடிப்படை நலவாழ்வுச் சூழ்நிலையை மேலும் இத்தகைய உருவாக்க முன் வந்தனர். உணர்வை உறுதிப்படுத்த, இறால் போன்றவற் றிற்கு, மொத்த எண்ணிக்கை நுண்ணுயிரி எஸ்ச் செரிச்சியா கோலை, ஸ்டெஃபைலோகாக்கஸ், சால் மோனெல்லா போன்ற பாதிப்புத் தரும் நுண்ணு யிரிகளுக்கும் அடிப்படை நியமங்களை 1973 இல் வகுத்தனர். இதன் பிறகு, வெளிநாட்டினரின் தேவை களுக்குகேற்பக் காலரா விப்ரியோ பாராஹேமலிகடி கஸ் போன்ற நுண்ணுயிரிகள் தொடர்பான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. நீர் வாழ் உயிரினங்கள் எளிதில் தாக்குதலுக்குள் ளாகி அழிவுறும் தன்மை பெற்றவையாதலின் அவை பிடிக்கப்பட்டுச் சேகரிக்கப்படும் நிலைகளிலேயே, தூள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் வற்புறுத்தப் பட்டன. மீனவரின் கைகள், உடற்பகுதிகள், உடை, படகின் தளம், கூடை அல்லது தொட்டிகள், மீன் வந்திறங்கும் தளம் போன்றவற்றில் தூய்மைக் குறைவு இருக்கும்போதுதான் நுண்ணுயிர்ப் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், இவ்வுயிரினங்களைக் கழுவப் பயன்படும் நீரும் தூய்மையுடையதாக இருக்க வேண்டும். இவ்வுயிரினங்கள் பிடிக்கப்பட்டவுட னேயே பனிக்கட்டித் துண்டுகள் அல்லது களால் நன்றாகக் கழுவப்படவேண்டும். இதனால் ஏற்படும் குளிர்ந்த சூழ்நிலையில் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். மேலும் நொதி கள் குறிப்பிட்ட தட்பவெப்ப வரையறைக்குள்தான் இயங்கும் எனக் கண்டறிந்துள்ளனர். உயர் வெப்ப நிலையில் நொதிகளின் வேதி அமைப்பும் பிளவுபடும்; குளிர்ந்த நிலையில் அவற்றின் இயக்கம் குறைந்து விடும். ஆதலால் மிகக் குளிர்ந்த சூழ்நிலையில் உயிரினத்தின் தன்னழிவு வேவைகளும் கட்டுப்படும்; இவ்வாறே நுண்ணுயிரிகளின் வளர்சிதை மாற்றமும் குறைந்து அவற்றின் இயக்கமும், பெருக்கமும் நிறுத்தப்படும். இறால் வகைகள் வகைகள் ன கூடிய பின்னர் இவ்விறால்கள் பிரிக்கப்பட்டு, தனித் குளிர்பதனக் கூடங்களில் இறால்கள் "தரநியமக் கோட்பாடுகளின்படிப் பாதுகாக்கப்படுகின்றன. பிடிக்கப்பட்ட தொழிற்கூடத் திற்குக் கொண்டு வரப்பட்டவுடன் மூலப்பொருள் சேமிப்பறையில், நல்ல குளிர்ந்த சூழ்நிலையில் வைக்கப்படும். இவை சிறிது சிறிதாக வெளியே எடுக்கப்பட்டு, நல்ல குடிநீரால் கழுவப்பட்டு நிறுக்கப் படும். பிறகு ஓட்டோடு வாரியாகப் பிரிக்கப்படும். பெரிய, சிறிய வகைகளாகப் தனிக்கலன்களில் சேகரிக்கப்படும். இறால்களின் வெளி ஓட்டிலும், வெளியே தெரியும் தசைப்பகுதியிலும் படிந்துள்ள நுண்ணுயிரிகள் எளிதில் வளரக்கூடிய வாய்ப்பு உள்ளமையால் முதலில் அவை நீக்கப்பட வேண்டும். நீரில் கழுவிய பிறகு 5-20 பி.பி.எம் குளோரின் கலந்த நீரில் இரண்டு, மூன்று முறை கழுவப்பட வேண்டும். இறால்களைக் கழுவித் தூய்மை செய்யும் பணியில்தான் மிகு கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி நிலையில் நடத்த வேண்டிய கட்டுப்பாட்டில் இது மிக இன்றியமையாதது. . பாகுபடுத்தப்பட்ட இறால்கள் 2 கிலோ எடை அளவில் நிறுக்கப்பட்டு, மெழுகுப்பூச்சுடைய உள் அட்டைப் பெட்டியில் (duplex cartoon) அடுக்கப் படும். பெட்டியின் உட்புறத்தில் பாலிதீன் காகிதம் விரிக்கப்பட்டிருக்கும். இந்தக் காகிதம், அடுக்கப் பட்ட இறால்களுக்குச் சுவராக அமைகிறது.இப் பெட்டிகள் பெரிய தட்டுகளில் வைக்கப்பட்டு, உறைய வைக்கும் எந்திரத்தில் உள்ள தட்டுகளில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படும். இம்முறை பெட்டி யுடன் உறையவைத்தல் எனப்படும்.