பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்வாழ்‌ நுண்ணுயிர்த்‌ தாவரங்கள்‌ 257

தடுப்புகள் உள்ள பெரிய தட்டுகளில் பாலீத்தீன் காகிதத்தை விரித்து, அதன்மேல் இறால்களை அடுக்கி, உறையவைக்கும் எந்திரத்திற்குள் வைக்கும் முறையும் உண்டு. பனிப்பாறையாக உறைந்தவுடன், அவற்றை அகற்றி உள் அட்டைப் பெட்டிக்குள் வைப்பர். து கட்டி உறைதல் (slab freezing) எனப்படும். இறால்கள் அடுக்கப்படும்போது அன் றாடம் உறைய வைக்கப்படும் கட்டிகளைப் பற்றிய குறிப்புகளை, ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வைக்க வேண்டும். ஓ. என். குருமணி கடல்வாழ் நுண்ணுயிர்த் தாவரங்கள் கடல்வாழ் பாக்டீரியாக்களும், பூஞ்சைகளும் ஆற்றுக் கழிமுகப் பகுதிகளிலும். கடலிலும் காணப்படு கின்றன. பெரும்பான்மையான பாக்டீரியாக்களும், பூஞ்சைகளும் பிற ஊட்ட உயிரிகள் ((heterotrophs) ஆகும். சுற்றுப்புறச் சூழ்நிலையில் கரிமப் பொருள் களைச் சிதைத்துக் கனிமப் பொருள்களை விடு ளிப்பதே இவற்றின் முக்கிய பணியாகும். ஏறத்தாழ 300 சிற்றினத்தைச் சேர்ந்த கடற் பூஞ்சைகள் உள்ளன. இவை அலையிடைப் பகுதியில் இருந்து கரையோரப் பகுதிகள் வரை காணப்படுகின்றன. அவற்றில் பொதுவாகக் காணப்படுபவை விக்னி கோலஸ், ஆஸ்கோமைசீட்ஸ் பூஞ்சைகளாகும். சில பருவங்களில் பைக்கோமைசீட்டஸ் பூஞ்சைகள் கடல் பாசிகளின் மீது மிகுதியாகக் காணப்படுகின்றன. சில மைக்கோமைசீட்டஸ் பூஞ்சைகள் மிதவைப்பாசிகளில் ஒட்டுண்ணியாக அமைந்து அந்நுண்ணுயிர் மிதவை களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பூஞ்சைகளின் பெருக்கம் நீரின் உப்புத் தன்மையைப் பொறுத்து மாறுபடுகிறது. 5% அல்லது அதற்குக் குறைவான உவர்த்தன்மையுள்ள . பகுதியில் மிகுதி யான பூஞ்சைகள் காணப்படுகின்றன. கடற்பூஞ்சை கள் 200 மீட்டர் ஆழம் வரை பரவியுள்ளன மேலும் 3,425 மீட்டர் ஆழத்தில் உள்ள படிவுகளில் இருந்தும், 4,610 மீட்டர் ஆழ நீரிலிருந்தும் பூஞ்சை கள் பெறப்பட்டு வளர்க்கப்படுகின்றன. கடற்சூழலில் பூஞ்சைகளின் பங்கு. உப்புத்தன்மை குறையும்போது நீர்ப்பூஞ்சைகளின் (water moulds) எண்ணிக்கை மிகுதியாகக் காணப்படும். குளிர், மித வெப்ப நீர்நிலைகளைவிட வெப்ப மண்டல நீரில் மிகுதியான பூஞ்சைகள் காணப்படுகின்றன. நீரின் சராசரி வெப்பம் மிகும்போது லிக்னிகோலஸ் பூஞ்சை யின் உப்புத்தன்மை தாங்கும் ஆற்றல் குறைகிறது. கடல் அல்லது கழிமுகப்பகுதிகளில் மட்டும் நிலை மாறாக் கடற்பூஞ்சைகள் (obligate marine fungi) அ. க. 7-17 கடல்வாழ் நுண்ணுயிர்த் தாவரங்கள் 257 நன்கு வளர்ந்து தம் இனப்பெருக்கத்திற்குத் துகள் சில சமயங் களை (spores) உற்பத்தி செய்கின்றன. களில் நிலத்திலும், நன்னீரிலும் வளரும் பூஞ்சைகள் கடலில் வாழக்கூடும். இவை நிலைமாறும் கடற் பூஞ்சைகள் (facultative marine fungi) எனப்படும். கடற் பூஞ்சைகளின் சிதைக்கும் தன்மை, கடற் பூஞ்சைகள் நிலையான கனிமக் கூட்டுப் பொருள் களின் மாற்றத்திலும், உணவுத் தொடரிலும் பெரும் பங்கு கொள்கின்றன. ஆஸ்பர்ஜில்லஸ், ஆஸ்பர் ஜில்லஸ் நிடுலன்ஸ், ஆ. டெரியஸ், சிரியாப்சிஸ் ஹெலினா, பெனிசிலியம் பியூனிகுளோசம் போன்ற சில பூஞ்சைகள் செல்லுலோஸ் எனும் பொருளை அழிக்கும் தன்மை உடையவை. உவர்ச் சதுப்பு நிலங்களிலும், கடற்கரைக்கு அப் பாற்பட்ட நீர்ப்பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த ஹைட்ரோ கார்பன்களை அழிக்கும் பூஞ்சைகளில் பிச்சியா ஸ்பார்டினா, பி. சாய்டோய். குளுகுரோமைசிஸ் டரோசோ பைலாரம் ரோடோடொருவா சிற்றினம், கிரிப்டோகாக்கஸ் ஆல்பிடஸ் போன்ற ஈஸ்ட்டுகள் குறிப்பிடத்தக்கவையாகும். டாபார்யோமைசிஸ். சக்காராமைசிஸ், கேன் கன் டிடா, குளோக்கீரா, டிரைக்கோஸ்போரான் புல்லு லேரியா போன்றவை டீசல் எண்ணெயைச் சிதைக்கும் பூஞ்சைகளாகும். எனவே இப்பூஞ்சைகள் எண்ணெ யால் மாசடைவதைக் குறைப்பதற்குப் பெரிதும் உதவி யாக உள்ளன. கார்பனை மூலப் பொருளாகக் கொண்டுள்ள தூய்மைப்படுத்தப்படாத எளிய எண்ணெய்களைக் கேன்டிடஸ் ஆல்பஸ், ரோடோ டொருலா குளுட்டினஸ், டிரைக்கோஸ்போரான் போன்ற பூஞ்சைகள் பயன்படுத்தும் தன்மை கொண் டுள்ளன. பெனிசிலியம் பியூனிகுளோசம், வெர்ட்டி சில்லியம், சிற்றினம் டிரைக்கோடெர்மா கொனிஞ்சி ஆஸ்பர்ஜில்லஸ், டெர்ரியஸ் போன்ற பூஞ்சைகள் கடல் நீரிலுள்ள பாஸ்ஃபரஸைக் கரைக்கும் தன்மை கொண்டவை. மேலும் அல்ஜினேட்டை, டென்ரோ பியல்லா சலைனர என்னும் நுண்ணுயிர் சிதைக் கிறது. பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் இல்லாத போதும் கடற்பூஞ்சைகள் மரச்செல்களில் ஊடுருவி வளர்ந்து அழியும் தன்மை மிக்க செல் சிதைத்தல் செயலையும் செய்யும் காரணத்தால் இவை சுடலில் உள்ள கட்டுமரம், சிறிய படகு போன்ற மரக்கலங் களை அழித்து விடுகின்றன. பல கடல்பாசிகளும் பூஞ்சைகளும். இறந்து சிதை வடையும் கடல்பாசிகளின் உடலத்துடன் சேர்ந்து பைக்கோமைசீட் பூஞ்சைகள் செயல் திறன் மிக்க நோய்க் கிருமிகளாக வளர்கின்றன. எக்ட்டோ கார்ப்பஸ் ஸ்டைரியா செராமியம் போன்றவை பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகும் கடல்பாசி களாகும், வட அட்லாண்டிக் பகுதிகளில் கடல் பாசி