பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 கடல்‌ வாழ்‌ விலங்குகளின்‌ வலசை

260 கடல் வாழ் விலங்குகளின் வலசை (instinet) எனக் கருதுகின்றனர். நாளமில்லாச் சுரப்பி களில் தோன்றும் ஹார்மோன்களும் பிற வேதிப் பொருள்களும் வலசையைத் தூண்டவோ விரைவு படுத்தவோ துணைபுரிகின்றன என்று ஆய்வு மூலம் கணித்துள்ளனர். சுடலி கடல் வாழ்விலங்குகளுள் இறால் வகை, நண்டு, மீன். திமிங்கவம், சீல், கடல்சிங்கம் ஆகியவை வலசை போகின்றன. கடலிலிருந்து நன்னீர் நதி களுக்கு வலசை செல்வனவும் (anadro mous), லேயே ஒரு பகுதியிலிருந்து தொலைவிலுள்ள வேறு பகுதிக்கு வலசை செல்வனவும் ஆழ்கடலிலிருந்து மேற்பரப்புக்குச் செங்குத்தாக வலசை வருவனவும் மேற்பரப்பிலிருந்து ஆழ்கடலுக்கு வலசை செல் வனவும் உண்டு. காற்றின் செயலாலும், நீர்ச்சுழல் களாலும், மிதவை உயிரிகள் (planktons) கூட பெயர்ந்து விடுவதுண்டு. டம் இறால்கள், நண்டுகள் ஆகியவற்றின் வலசை. கடின ஒட்டுக்கணுக்காலிகள் (crustacea) வகையைச் சேர்ந்த றால், நண்டு ஆகியவற்றின் வலசை குறிப்பிட்ட பருவ காலங்களில் அமைவதாகக் குறிப்பிடுகின்றனர். சில இறால்கள் கடலிலேயே நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவு வரை, குறிப்பிட்ட பருவங்களில் இடம்பெயர்ந்து, அடுத்த பருவத்தில் பழைய இருப் பிடத்திற்குத் திரும்புவதைக் கண்டறிந்துள்ளனர். சீனக்கடலில் வாழும் சீன நண்டு எனப்படும் போர் செல்லானா வசந்தகாலத்தில் வடக்குக் கடல்மூலம் வலசை மேற்கொண்டு ஜெர்மனி நாட்டின் எல்பா வீசர் ஆகிய ஆறுகளை அடைந்து பின்பு அங்கிருந்து ஹாம்பூர்க், பெர்மன் ஆறுகளில் குளிர் காலத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்நண்டின் கால்களில் மயிர் போன்ற நீட்சிகள் இருப்பதால் இது மயிர்க் கால் நண்டு எனப்படுகிறது. இது ஆறுகளில் செல்லும் போது, அணை மதகு, கால்வாய், குளம் ஆகிய அனைத்தையும் தாண்டிச் செல்கிறது. அங்கு இனப் பெருக்கம் செய்தபின் கடலுக்குத் திரும்பும்போது பெரும்பாலும் இறந்துவிடும். ஒரு ஒரு சிவ மட்டும் மீண்டும் வலசை மேற்கொள்ளும். மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த நீலநண்டுகள் தம் முதியநிலையில் கடற்கரையிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொவை வில் உள்ள மலைகளின் மேல் வாழ்கின்றன. ஆனால் முட்டையிடுவதற்காகக் கடற்கரைக்கு வருகின்றன. நிலத்தின் மேல் அவை இயங்கும் அளவுக்கு வளர்ந்ததும் கடலை விட்டு வெளியேறி மலைகளில் ஏறி விடுகின்றன. லேம்ப்ரேக்களின் வலசை. வட்டவாய் (cyclos- tomes) மீன்களில் பெட்ரோமைசான் மரைனஸ், ஃப்ளூவியாடிலிஸ் பெட்ரோமைசான் ஆகியவை கடல் ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாட்டுக் மீன்களின் உடலில் புற ஒட்டுண்ணிகளாக (ecto- parasite) வாழ்கின்றன. அவை மே அல்லது ஜுன் மாதத் தொடக்கத்தில் இன முதிர்ச்சியடைந்து ஆறு களில் வலசை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லும். இவ்வாறு வலசை செல்கையில் அவற்றுள் சில பளபளப்பான செம்மஞ்சள், கறுப்பு ஆகிய நிறங்களைப் பெறும். ஆண், பெண் ஆகிய இரண்டுமே சேர்ந்து நீந்து கின்றன. வலசையால் ஆறுகளை அடைந்ததும் அவற்றில் எதுவும் உண்ணுவதில்லை. தம் தோலிலும் தசைகளிலும் சேர்த்து வைத்துள்ள கொழுப்பையே ஆற்றலுக்குப் பயன்படுத்துகின்றன. குளிர்காலத்தில் பால் முதிர்ச்சி அடைந்த பிறகு, நீரின் அடித்தளத்தில் கற்களால் கூடுகட்டி அக்கூட்டில் முதலில் பெண் தன் ஒட்டுறிஞ்சியால் ஒட்டிக்கொண்டிருக்க ஆண், பெண்ணின் மேல் ஒட்டிக் கொள்ளும். இவ்வாறு ஒட்டுவதற்கு அவற்றின் ஒட்டுறிஞ்சிகள் (Suckers) பயன்படுகின்றன. பிறகு இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சுற்றிய வாறு உடல்களை இறுக்கிக் கொள்வதால் இனச் செல்கள் நீரில் விடப்படும். இதுபோன்ற கல்வி பல முறை நடைபெறுவதால், அவை சோர்ந்து இறந்து விடுவதுமுண்டு. இதனால் உண்டாகும் இளம் உயிரி (larva) அம்மோசீட்டே மஞ்சள் பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். இவ்விளம் உயிரி V வடிவமான சுரங்கப்பாதையை ஆற்றின் அடித்தளத்தில் மணல், சேறு ஆகியவற்றால் அமைத்துக்கொண்டு, அதன் உள்ளே பாதுகாப்பாக வாழ்கிறது. 3-7 ஆண்டுகள் வரை ஆற்றில் வாழ்ந்து படிப்படியாக வளர்ந்து 170 மி.மீ நீளம் ஆகும்போது, மேற்புறம் கறுப்பும், கீழ்ப்புறம் வெள்ளிநிறமும் கொண்ட நிறையுயிரியான பின்னர் கடலில் நீந்திச்சென்று அங்கு பெரிய மீன்களின் உடலில் ஒட்டித் தன் ஒட்டுண்ணி வாழ்க்கையைத் தொடர்கிறது. மீன்களின் வலசை. மீன்களில் கடலிலிருந்து நன்னீருக்கு வலசை செல்வதும், கடலிலேயே ஓரிடத் திலிருந்து தொலைவிலுள்ள வேற்றிடத்துக்கு வலசை செல்வதும், செங்குத்து வலசை மூலம் ஆழ் கடலி லிருந்து ஆழம் குறைந்த மேற்பரப்புக்கும் மேற்பரப்பி லிருந்து ஆழமான பகுதிகளுக்கும் வலசை செல்வதும் சிறப்பாக ஆராய்ந்தறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கூட்டமாகக் கூடி. கடவில் ஒரே இடத்தில் இருத்தல் மிகவும் பயனுடையதாகும். ஐரோப்பாவில் வாழும் டன்னி மீன் எனப்படும் ஆர்சினஸ்தின்னஸ் கோடைக்காலத்தில் அட்லாண்டிக் கடலிலிருந்து புறப்பட்டு ஆப்பிரிக்காவின் வடக்குக் கடற்கரை எகிப்து, பாலஸ்தீனம் வழியாகக் கருங்கடலில் புகுந்து அங்கிருந்து அசோவ் கடலுக்குச் சென்று இனப்பெருக்கம் செய்து பின்னர் மத்தியதரைக் கடலின் வடக்குக் கரை மூலமாக மீண்டும் அட்லாண்டிக் அடைகிறது. இம்மீன் ஓர் ஆண்டின் பெரும்பகுதியை ஆழ்கடலில் கழித்த பிறகு, இனப்பெருக்கக் காலம் கடலை நெருங்கும்போது.