பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ வாழ்‌ விலங்குகளின்‌ வலசை 261

ஆழ்கடலிலிருந்து செங்குத்து வலசை மூலம் கடலின் மேற்பரப்புக்கு வந்து மீண்டும் வலசை செல்கிறது. (mackerals), கிளுபிடு, கானாங்கெளுத்திகள் சூடை (herring), மென்ஹேடன், பில்சார்டு, நெத்திலி (anchories) ஆகியவை ஆழ்கடலினின்றும் செங்குத்து வலசை மூலம் மேற்பரப்புக்கு வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. சால்மோனிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்ஜென்டினா மீன், ஆழம் குற றைந்த பகுதியை விட்டு ஆழ்கடலை நோக்கி வலகை சென்று இனப்பெருக்கம் செய்கிறது. மல்லோட்டஸ் அல்லது காலபான் மீன் ஆழ்கடலிலிருந்து கரை யோரப் பகுதிக்கு வலசை வந்து இனப்பெருக்கம் செய்கிறது. ஸ்மெல்ட் மீன் கழிமுகங்களுக்கும் நன்னீர் ஆறுகளுக்கும் வலசை செல்கிறது. கரூனியன் என்னும் வெள்ளி நிற மீன் பசிபிக் கடலில் கலிஃபோர்னியா, மெக்சிகோ ஆகிய கடற் கரைகளில் வாழ்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் முதல் ஜுலை வரை அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாள்களில் கடல் அலைகள் மிகுதியாக உள்ளபோது, இவை பெருங்கூட்டமாகக் கரையில் வந்து மணலில் குழிதோண்டி முட்டையிடும். அம்முட்டைகளின் மேல் ஆண்கள் விந்தை இறைக்கும். கருவுற்ற முட்டைகளைக் கொண்ட குழிகளை மணலால் மூடி வைத்துவிட்டுக் கட லுக்குள் ஊர்ந்து செல்லும். பின்னர் அடுத்த 15 நாள்களில் மீண்டும் அலைகள் மிகுதியாக வரும்போது அவ்வலைகள் கருமுட்டை களைக் கடலுக்கு இழுத்துச் செல்லும். சால்மனின் வலசை. அட்லாண்டிக் சால்மன்களான செம்கா, சால்மன், ட்ரவுட் என்பனவும், பசிபிக் சால்மன்களான வெள்ளிச்சால்மன் அல்லது கோஹோ சால்மன். சும் சால்மன், சிவப்புச் சால்மன், திமில் முதுகுச்சால்மன், சினூக் சால்மன் போன்றவை ஆண்டுதோறும் கடலைவிட்டு நதிகளில் வலசை மேற் கொள்கின்றன. ஆகவே இவை கடலிலிருந்து நன்னீருக்கு வலசை செல்வன ஆகும். சால்மன் மீன் கள் நீண்ட வலசையைத் தொடங்கு முன்னர், ஆற்றின் கழிமுகங்களில் தங்கிப் பழகிய பின்னர் திடீரென்று மொத்தமாக மிக நெருக்கமாக அமைந்து நதிகளில் ஏறி நீந்தும் தன்மை கொண்டவை என்று கருதப்படுகிறது. தாவிக்குதித்தே செல்லும் சில பழக்கம் கொண்டவை. திமில் முதுகுச் சால்மன்கள் சோவியத் ஒன்றியக் குடியரசில் பொல்ஷாயா நதியின் நடுவிலிருந்து சூரிய வெப்பம் மிக்க அமைதியான நேரத்தில் திடீரென ஒலியெழுப்பிக் கொண்டே கரையருகில் வந்து லட்சக்கணக்கில் 1.5 கிலாமீட்டர் தொலைவுக்கு ஒரே நேர் கோடுபோல் பரவின என்றும், பின்னர் ஆற்றில் நீந்தும்போது அணைக்கட்டு நீர்வீழ்ச்சி ஆகியவற்றைக் கூடத்தாண்டிச் சென்றுவிடும் என்றும், அவ்வாறு துள்ளித் தாண்டும்போது 3 மீட்டர் மேல் கடல்வாழ் விலங்குகளின் வலசை 261 நோக்கியும், 5 மீட்டர் முன்னோக்கியும் குதிக்கும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். இலையுதிர் காலத்தில் கழிமுகங்களில் தங்கி ஓய்வெடுக்கும் செம் காக்களுள், மிகுந்த முட்டைகளைச் சுமந்துள்ளவை இளவேனிற் காலத்தில் ஆறுகளின் மேல் மூடியுள்ள பனிக்கட்டிகள் உடையும்போது ஆற்றில் சென்று நீந்துகின்றன. பிற சால்மன்கள் இனப்பெருக்கம் செய்யும் உந்துதல் இன்றி இரண்டு மூன்று ஆண்டுகள் கடலிலேயே வாழ்கின்றன. கோடைக் கால்ச் செம்காக்கள் ஆகஸ்ட் மாதத்தின் பின்பகுதியிலிருந்து முன்பனிக்காலத்தொடக்கம் வரை பயணம் மேற் கொண்டு குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்யும். இலையுதிர்காலச் செம்கரக்கள் குளிர்காலத்தில் வலசையைத் தொடங்கி அடுத்த ஆண்டின் குளிர் காலத்தில்தான் இனப்பெருக்கம் செய்யும். குளிர் காலச் செம்காக்கள் ஆண்டு முழுதும் ஆற்று நீரின் அடியில் உள்ள ஆழமான குட்டையில் எதுவும் சாப்பிடாமலேயே செயலற்றுக் கிடக்கும். எல் பெர்க் என்பார், அவை மிகக் குறைவான வெப்ப அளவான 0° C இல் ஓய்வெடுப்பதாகக் கருத்துத் தெரிவித்துள் ளார். மேலும் விந்துகளைக் கொண்ட ஆண்களின் தாடைகள் குறடுகளைப் போல் வளைந்து விடுவதால், அத்தாடைகள் உண்ணுவதற்குப் பயன்படா. ஆனால் தன் பெண் துணையைக் கவர வரும் வேறு ஆணை எதிர்த்துப் போரிடப் பயன்படும். செம்காவின் நிறம் கடலிலிருக்கும்போது வெள்ளி போன்றும், ஆற்றில் வந்ததும் கறுப்பு நிறமாக உடலின் பக்கங்களில் சிவப்புப் புள்ளிகளைக் கொண்டும் இருக்கும். முதுகுப் புறம் உள்ள திமில் மிகப் பெரிதாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு மீனும், தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் எந்த ஊரின், எந்த ஆற்றின் அல்லது ஓடையின் எந்தப் பகுதியில் பிறந்ததோ, அதே இடத் துக்கே தான் வளர்ந்தபிறகு வலசை வருகிறது. இந்த வியப்பூட்டும் செயல் ஓர் உள்ளுணர்வு அல்லது இயல்பூக்கத்தை அம்மீன் பெற்றிருப்பதாலும் அது பரம்பரையாக வருவதாலும் நடப்பதாகக் கருது கின்றனர். பெண் மீன்கள் குழிகளைத் தோண்டி அதில் பல்லாயிரக்கணக்கான முட்டைகளை இட்டு, மண் ணையும் கூழாங்கற்களையும் தள்ளி அம்முட்டை களை மூடி மறைத்துக் கூடு போலாக்கி, அக்கூட்டைப் பாதுகாத்துத் கொண்டே வாழ்நாளைக் கழிக்கின்றன. அவற்றில் பல சோர்வுற்றுக் கூடுகளின் அருகிலேயே இறந்துவிடும். ஆண்கள் தம் பெண் துணைகளை ட்டு விலகிச் சென்றாலும் அவையும் சோர்ந்துபோய் ஆற்றிலேயே இறக்கும். ஆனால் ஐரோப்பியச் சால்மன்கள் கவனமாகக் கடலுக்குத் திரும்பி அங்கு சூடை, மணல்மீன் ஆகிய வற்றை உண்டு தம் உடலின் கொழுப்பு அளவை உயர்த்திக் கொண்டு மீண்டும் வலசை செல்கின்றன. சிவப்புச் சால்மன்களின் குஞ்சுகள் மட்டும் ஆறுகளில்