பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 கடல்‌ வாழ்‌ விலங்குகளின்‌ வலசை

262 கடல்வாழ் விலங்குகளின் வலசை 2 அல்லது 3 ஆண்டுகள் வரையிலும் சில குஞ்சுகள் 5 ஆண்டுகள் வரையிலும் இருக்கும். அவை அனைத் துமே பின்னர் மொத்தமாக ஒரே நாளில் கடலை நோக்கிச் செல்லும், ஐரோப்பிய ஆண் சால்மன்களில் சில கடலுக்குத் திரும்பாமல் ஆற்றிலேயே தங்கி விடுதலை உயிரியல் சிறப்பு வாய்ந்த செயல் என்பர். இந்த ஏனெனில் ஆண்கள் மெதுவாக முதிர்ந்து இனப் பெருக்கம் செய்யத் தயாராகும் போது மறுமுறை புதிதாக வந்து சேரும் இயலும். பெண்களுடன் இனப்பெருக்கம் செய்ய அந்த நேரத்தில் வலசை வரும் ஆண்களின் எண் ணிக்கை குறைந்தால், இந்த ஆண்கள் ஈடு செய் கின் றன. வலசை நார்வே நாட்டு வெண் கடலின் மேற்குக் கடற்கரையில் குறியிட்டு விடப்பட்ட செம்கா மீன், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 2500 கி.மீக்கு அப் பால் சோவியத் ஒன்றியக் குடியரசின் விக் ஆற்றில் (அதாவது தான் பிறந்த இடத்துக்கு) வந்து சேர்ந் தது. பக்லாண்ட், யங் ஆகியோர் இப்பண்பைப் பிறப்பிட இயல்பூக்க உணர்வு (homing instinet) எனக் குறித்தனர். கடலில் சால்மனின் வளர்ச்சி ஆற்றில் உள்ளதை விட ஆறுமடங்கு விரைவானது. அப்போது ஆற்றில் வாழ்ந்தபோது இழக்கப்பட்ட தேக்கக் கொழுப்பை (fat storage) ஈடு செய்யும் வேகம் மிகவும் வியப்புக்குரியதாகும். சில சோவியத் ஒன்றியக் குடியரசு ஸ்டர்ஜியன்கள் வட அமெரிக்கா, ஜப்பான், சகாவின் தீவு ஆகிய இடங்களில் ஆறுகளுக்கு வலசை செல்கின்றன. இந்திய சாடு எனப்படும் ஹில்சா இலிஷா (Hilsa ilesha) கடலிலிருந்து நன்னீருக்கு வலசை வந்து, ஆறுகளில் குஞ்சு பொரித்து, பின்னர் கழி முகங்களில் நீண்ட நாள் தங்கிக் கடலுக்குச் சென்று நிறை நிலையடைகிறது. கடலிலும் கரையோரப் பகுதிகளிலுமே தங்கி மிதவையுயிரிகளை உண்டு மீண்டும் ஆற்றுக்கு வலசை செல்லும். கிழக்குக் வலசைத் தடங்கள். ஸ்காட்லாந்தின் கடலில் உள்ள தட்டை மீன் வடக்குக் கடலை நோக்கிச் செல்கையில் ஷெட்லண்டு தீவில் பிடிப் பட்டுக் குறியிடப்பட்ட பின் வடக்கு நோக்கித் தொடர்ந்து செல்லாமல், தெற்கு நோக்கிச் சென்றது. நீர்ச்சுழலின் திசை தெற்காக இருந்ததால் வலசைப் பாதைக்கு நீர்க்சுழலின் திசையும் ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது. மீனியல் வல்லுநர்கள் வலசை செல்லும் மீன் களின் துடுப்புகளில் குறியிடப்பட்ட உலோகத்தகடு களைப் பொருத்தி அவற்றை நீந்த விடுவர். பின்னர் அச்செய்தியைத் தொலைபேசி மூலம் உலகின் பல நாட்டு மீனியல் ஆய்வு நிறுவனங்களுக்கும் தெரிவிப்பர். அச்செய்தியைப் பெற்ற பிற நாட்டு மீனியல் வல்லுநர்கள் தம் நாட்டில் அவை வரும் போது பிடித்து அவற்றில் உள்ள குறிப்பிடப்பட்ட அம்மீன்களின் தகட்டின் மூலம் வலசைவழி, தொலைவு. காலம் ஆசி ஆகியவ வற்றைக் கணக்கிடுவர். புதிதாகப் பொரிக்கப்பட்ட சால்மன் குஞ்சுகளை, அவை பொரிக்கப்பட்ட ஆற்றை விட்டு எடுத்துச் மீன் வளர்ப்பகத்தில் வைத்து சென்று தனியான வளர்த்தனர். அவை வளர்ந்ததும், அவற்றைக் குறியிட்டு வேறு ஓர் ஆற்றில் விட்டனர். இதனால் தாம் பிறந்த இடத்துக்குச் செல்லாமல், தம் வளர்ப் பிடமான ஆற்றுக்கே சென்றன. இதிலிருந்து பிறப்பிடம் பற்றிய நினைவு அவை வாழும் பழக்கத் வருவதாகவும், அவை உள்ளுணர்வுடையவை யல்ல என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் மீன்கள் தாம் வாழும் நீரின் சுவை மணம் இவற்றின் வேதி உணர்வால்தான் வலசை வழியை அறிகின்றன என ஆய்வுகள் காட்டுகின்றன. சூரியனின் நிலைக்கேற்ற வாறும், பகல், இரவு நேர அளவுகளின் மாற்றங்களின் மூலமும் வலசைத் தடங்கள் அமைவதாகக் கண்ட றியப்பட்டுள்ளது. தால் திமிங்கிலங்களின் வலசை வடஅமெரிக்காவிலும். அட்லாண்டிக்கின் இருபுறமும் ஆண்டுக்கு இருமுறை திமிங்கிலங்களும் டால்ஃபின்களும் வலசை மேற் கொள்கின்றன. இலையுதிர் காலத்தில் எலும்புத் திமிங்கிலங்கள் தெற்கு நோக்கிச் சென்று வெப்பமான நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன. புதிதாகப் பிறந்த திமிங்கிலக் குட்டிகளின் தோலின் அடியில் மிக மெல்லிய கொழுப்பு அடுக்கு இருப்பதால் அது குளிர்காலத்தில் துருவக் கடல்களில் இருந்தால் தன் கொழுப்பை இழந்து இறக்க நேரிடும். இதனால் வெப்பக் கடல்களுக்கு வலசை செல்வதாக அறியலாம். சோவியத் நாட்டுத் திமிங்கில வல்லுநர் குளூமோவ் கோடையில் முதிய திமிங்கிலங்கள் மிகுதியாகக் கொழுப்பை உடலில் தேக்கிக் கொண்டு விடுவதால், அவை குளிர்காலத்தில் 5°C க்கும் குறைவான வெப்பத்தில் வாழும்போது 5 மடங்கு வெப்ப இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்கின்றன என்று குறிப்பிட்டுள் ளார். குளிர் காலத்தில் கடலின் ஆழப்பகுதிக்குச் உணவு சென்று விடுவதால் தமக்கு கிடைக்காத திமிங்கிலங்கள் தம் உடலில் சேர்த்து வைத்துள்ள தோலடிக் கொழுப்பையே உணவாகக் கொள்கின்றன. இதனால் ஏற்படும் கொழுப்பு இழப்பை, அவை இலையுதிர் காலத்தில் 25° -27°C வெப்ப அளவுடைய தென்கடலுக்கு வலசை சென்று தம் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ளச்சிறிதளவு கொழுப்பே தேவைப்படுவதால் ஈடுசெய்து கொள்கின்றன. கிடைக் பொதுவாகத் திமிங்கிலங்களுக்கு, கடலில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே மிகுதியான உணவு கும். குளூமோவின் கோட்பாட்டின்படி திமிங்கிலங் களின் இலையுதிர்காலப் பயணம் ஒரு குறிப்பிட்ட பெரும அளவுடைய வலசையாகும். உணவு கிடைப்பது குறைவாக இருப்பதால், அவை அரையாண்டுக்கு ஏதும் உண்ணாமல் இருந்து, அடுத்த அரையாண்டில்