பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 கடல்‌ விமானம்‌

264 கடல் விமானம் கோனின் எனப்படும். இத்தொகுப்புயிர் அடித்தட்டி கிளைகளாகக் லிருந்து எழுந்து பிறகு பல மெல்லிய கிளைத்திருக்கும். கார்கோனியத்தின் தண்டில் ஒரு மைய அச்சுக் கம்பி உள்ளது. இந்த அச்சைச் சூழ்ந்து மெல்லிய சீனைன்கைம் அடுக்குள்ளது. இதில் சிறு பாலிப்புகள் சிறிய இரைப்பை இரத்தக் குழாய்களுடன் அரும்பி யுள்ளன. மேலும் இதில் மிகுதியான சொலீனியங்கள் மைய அச்சுக் கம்பியைச் சுற்றிக் காணப்படுகின்றன. இந்தச் சீனன்கைமில் தனித்த சுண்ண நுண் முள்கள் உள்ளன. இவை முட்டை, கிண்ணம், செதில், கம்பி, ஊசி போன்ற பல கொண்டவை. வடிவங்களைக் மடல்கள் கொண்டுள்ளன. இம்முள்கள் இவ்வடிவங்களுடன் கிளைகளைக் அல்லது (lobes) தண்டின் மைய அச்சுக் கம்பி ஓர் உள் பகுதியைப் (core) பெற்றுள்ளது. இது அகணி எனப்படும். இந்த அகணி, புறணி எனும் உருளையால் சூழப்பட்டுள்ளது. கார்கோனியங்கள். அனைத்துக் கடல்களிலும் வாழும் தன்மையன. இவை அலை குறைவான எல்லையிலிருந்து நானூறு மீட்டர் ஆழம் வரை வாழ் கின்றன. பல கார்கோனியங்கள் கரையோரப் பகுதி அல்லது ஆயிரம் மீட்டர் ஆழமுடைய ஆழ்கடலில் வாழ்பவை. இவை பெரும்பாலும் மத்திய தரைக் கடலில் விரும்பி வாழ்கின்றன. மேலும் இந்தோ பசிபிக்கடலிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. பிற பொருள்களுடன் அகன்ற அடித்தட்டினால் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றின் மெல்லிய அடிப்பகுதிகள் தண்டுடன் இணைந்துள்ளன. கரையோரப் பகுதியில் வாழ்வன வளையக்கூடிய தண்டைப் பெற்றுள்ளன. ஆழ்கடல் வாழும் கார்கோனியங்கள் சுருங்கும் தன்மையற்ற கணக்கற்ற நுண் கொண்டவை. முளைகளைக் கார்கோனேசியா எனும் வரிசை ஹோலாக் ஸோனியா. ஸ்கிலிரோக்ஸோனியா எனும் இரு துணை வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் துணை வரிசை அச்சு நுண் முள்களைப் பெறாமலும் இரண்டாம் துணை வரிசை அச்சு நுண் முள்களைப் பெற்றும் உள்ளன. கடல் விமானம் கே.எஸ்.விஜயலட்சுமி கடல் நீரின் மேற்பரப்பில் இறங்கி, அங்கிருந்து புறப் பட்டு மேல் எழுந்து செல்லும் விமானத்திற்குக் கடல் விமானம் என்று பெயர். இவ்விமானங்கள் புறப்படும்போது படகு போல் நீரைக் கிழித்துக் கொண்டு செல்லும்; தகுந்த வேகம் அடைந்தவுடன் மெல்ல மேலெழுந்து வானில் பறக்கும். வடிவமைப் பிற்குத் தக்கவாறு பறக்கும் படகு, நீர் விமானம், மிதக்கும் விமானம் என்னும் வேறு பெயர்களும் இதற்கு உண்டு. கடல் விமானத்தின் தோற்றம் நில விமானங் களைப் போலிருக்கும். ஆனால் தரையில் ஓடும் சக்கரங்களுக்குப் பதிலாக, நீரில் மிதப்பதற்கு ஏற்ற வாறு மிதப்புகள் (buoyant floats) பொருத்தப்பட் சில டிருக்கும். கடல் விமானங்களின் அடியில் இரண்டு மிதப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். இன் னும் சிலவற்றில் ஒரு மிதப்பு மட்டுமே பொருத்தப் பட்டிருக்கும். இத்தகைய விமானங்கள் நீரில் நிலை மிதப்பதற்காக உடலின் பக்கவாட்டிலோ இறக்கையின் முனையிலோ மிதப்புகள் பொருத்தப் சில கடல் பட்டிருக்கும். விமானங்களில் மிதப்பு களும் உள்ளிழுத்துக் கொள்ளக்கூடிய சக்கரங்களும் பொருத்தப்பட்டிருக்கும். அதனால் இத்தகைய விமானங்கள் நீரின் மேலும், நிலத்திலும், பனித்தரை, சகதி, புல்தரை ஆகியவற்றின் மேலும் இறங்கும் தன்மையுடையவை. யாக தரையில் ஓடும் சக்கரங்களுக்குப் பதிலாக மிதப்பு கள் பொருத்தப்பட்டுள்ளமையால் கடல் விமானங் களின் எடை கூடுகிறது. விமானத்தின் செலுத்தி (propeller), இறக்கைகள், வால்பகுதி முதலியன நீரில் படாமல் இருக்க, கடல் விமானத்தின் உடல் பகுதி நில விமானத்தைவிடப் பெரிதாக வடிவமைக் கப்பட்டிருக்கும். கடல் விமானம் நீரின் மேற்பரப் பில் இறங்கும்போது ஏற்படும் அதிர்ச்சியைத் தாங் கக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். புறப் படும்போது இவ்விமானம் நீரைக் கிழித்துக் கொண் டும் செல்ல வேண்டியுள்ளது. மேற்கூறிய காரணங் களால் கடல் விமானத்திற்கு ஆற்றல் மிகுதியாகத் தேவைப்படுவதுடன், இதன் பறக்கும் செயல்திறனும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாகக் கடல் விமானம் சிறியதாயிருப்பின் இப்பாதிப்பு மிக அதிகமாகக் காணப்படும். விமானம் பெரியதாக வடிவமைக் கப்பட்டால் இதற்கும் நில விமானங்களுக்கும் செயல் திறனில்பெரும் வேறுபாடு இருக்காது. தாரை செலுத்து விசையால் (jet propulsion) இயங்கும் விமானங்களில் மேற்கூறிய இடர்ப்பாடுகள் மிகுதியாக இல்லை. கடல் நீர் சறுக்கி (hydro skies) என்னும் மற்றொரு கடல் விமானத்தில் சக்கரங்களுக்குப் பதிலாக சறுக் குப் பொருத்தப்பட்டுள்ளது. இத்தகைய சறுக்கு, சாதாரணமாக விமானத்தின் உடலில் உள்ளடங்கியும் வேண்டும்போது வெளியே வருமாறும் அமைக்கப் பட்டிருக்கும். தாரை செலுத்து விசையால் இயங்கும் இவ்விமானங்கள் ஒலி வேகத்தைவிட வேகமாகச் செல்லும் ஆற்றல் படைத்தவை. கடற்கரையில் பயன்படும் சில சிறிய நில விமானங்கள் நீர் சறுக்கி விமானத்தின்தத்துவத்தால் இயங்குகின்றன. இவ்விமா