பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 கடலலைகள்‌

268 கடலலைகள் இணையாகத் தள்ளப்பட்ட மற்றொரு நீரோட்டத் தைக் கரை இணை நீரோட்டம் (long shore current) என்பர். அடுத்தடுத்து அலைகள் உண்டாவதால், இந்தக் கரை இணை நீரோட்டம் எப்போதும் கரை யோரத்தில் இருக்கும். இத்தகைய நீரோட்டத்தால் கடலினுள் எறியப்படும் பந்து, கரைக்கு இணையாக மிதந்து செல்கிறது. சேர்ந்து மணற்சுடற்கரையில் பலத்துடன் மோதி உடைந்த அலைகளால் அங்குள்ள மணல் கலக்கி எழுப்பப்படுகிறது. இவ்விதம் நீரில் கலக்கப்பட்ட மணல், கரை இணை நீரோட்டத்துடன் கரைக்கு ணையாக நீரால் மணல் எடுத்துச் செல்லப் படுவதைக் கரை இணை மணற்கடத்தல் (long shore sediment transport) என்பர். ஓரிடத்தில் கடத்தப் படும். மணலின் கொள்ளளவு, அங்குள்ள துகளின் அளவு, உடையும் அலைகளின் உயரம், அலை நேரம் (wave period), ஓர் அலைக்கும், அடுத்த அலைக்கும் இடைப்பட்ட நேரம். அலை கரையுடன் கொண்டுள்ள கோணம் போன்றவற்றைப் பொறுத்து வேறுபடும். வரை ை மணல் தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் நவம்பர் - பிப்ரவரி வரை (வடகிழக்குப் பருவ மழைக்காலம்) அலைகள் வடகிழக்கிற்கும், கிழக்கிற்கும் இடைப்பட்ட திசை களிலிருந்து வந்து உடைந்து கரை மணற் கடத்தலைத் தெற்கு நோக்கியும், மார்ச் முதல் அக்டோபர் (தென்மேற்குப் பருவமழைக் காலம்) தெற்கிற்கும், தென்கிழக்கிற்கும் இடைப் பட்ட திசைகளிலிருந்து வந்து உடைந்து மணற் கடத்தலை வடக்கு நோக்கியும் உண்டாக்கும். சென்னைக் கட லோரத்தில் ஆண்டில், வடக்கு நோக்கி 1.4 × 10" கனமீட்டர் மணலும், தெற்கு நோக்கி 0.4 × 10 கனமீட்டர் மணலும் கடத்திச் செல்லப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பருவமழைக் காலத்தில் பலத்த காற்றால் உரு வாகும் அலைகள் மிக உயரமானவையாகவும் குறைந்த அவைநேரம் கொண்டவையாகவும் இருக்கும். விரை வாகவும் அடுத்தடுத்தும் அலைகள் உடைந்து தாக்கும் போது, கரை கரைக்கப்பட்டு அலையடையும் இடத் திற்குச் சிறிது பின்னே மணல் எடுத்துச் செல்லப்படு வதால் கரைக்கு இணையாகச் சிறு மணல்மேடு (sand bar) கடலுள் படியும். பருவமழைக்காலம் முடிந்து, அலை உயரம் குறைந்து, அலைநேரம் மிகுதி யானவுடன் இந்த மேட்டிலிருந்து மணல். அலை களாலேயே மீண்டும் கரைக்குச் சேர்க்கப்படும். இந்தப் பருவ மழைக்கால அரிப்பு ஒரு நிலையில்லாத கடலரிப்பாகும். இவ்வகையான அரிப்பு, இந்தியக் கடற்கரைகளில் மே - செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் ஏற்படுவதைக் காணலாம். கடலில் புயல் தோன்றிப் பெருங்காற்று வீசும் உயரமான அலைகள் தோன்றிக்கரை போது மிக யைத் தாக்கும். மேலும் காற்றழுத்தத்தால் கரை யோரம் புயல் பிதுக்கம் (storm surge) உருவாகி, கடல் நீர்மட்டம் உயர்ந்து கரை கரையடுத்த நிலம் இவற்றை மூழ்கடிக்கும். ஓரிரு நாள்களே இத்தாக்கு தல் இருந்தாலும், இதனால் ஏற்படும் கடலரிப்பில் கடுமையான உயிர் அழிவும் பொருள் அழிவும் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வகையான கடலரிப்பைக் கட்டுப்படுத்த இடைக்காலத் தடுப்பு கையாள வேண்டும். முறையைக் துறைமுகத்திற்காகவும் வேறு சில காரணத்திற் காகவும் கரையிலிருந்து கடல் உள்நோக்கிக் கட்டப் படும் நீர்த்தடைகள் (break waters) கடல் இணை மணற்கடத்தலை முழுதுமாகத் தடுக்கும். இதனால் நீர்த் தடையின் ஒருபுறம் (மணற் கடத்தலின் மேற் புறம்) மணற்சேர்ப்பும், நீர்த் தடையின் மறுபுறம் (மணற் கடத்தலின் கீழ்ப்புறம்) அரிப்பும் ஏற்படும். எடுத்துக்காட்டாகச் சென்னைத் துறைமுக நீர்த் தடை கட்டப்பட்ட பின் துறைமுகத்தின் தெற்கில் மெரினா கடற்கரை என்னும் பெரிய மணற் கடற் கரை உருவாகி, வடக்கில் கடலரிப்பு ஏற்பட்டுள்ள தைக் காணலாம். பலமாக ரண்டு மணல் மணல் துருவப் பனிக்கட்டிகள் (polar ice) உருகுவதால், கடல் மட்டம் ஆண்டிற்கு ஏறக்குறைய மில்லி மீட்டர் உயர்ந்து சுரை அரிக்கப்படுகிறது. காற்று கரைகளில் வீசினாலும் துகள்கள் அடித்துச் செல்லப்பட்டு ஓரளவு அரிப்பு ஏற்படும். மணல், ஆறுகளால் கடலுக்குக் கொண்டு வரப்பட்டு, பின் அலைகளால் கரைக்குக் கொடுக்கப்படுகிறது. ஆற்றின் குறுக்கே அணைகள் மணல் சுட்டப்படும்போது, நீர்த் தேக்கத்தில் படிந்து, கடலுக்கு வரும் மணலின் அளவும் குறையும். இந்தியாவின் கடலோரப் பகுதிகள் அனைத்தி லும் ஆங்காங்கே கடலரிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக முக்கால் பங்கு கேரளக் கடற்கரையோரம் கடலரிப் பால் மிகுதியாகத் தாக்கமுற்று வருகிறது. தமிழ் நாட்டில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம். கடலூர், மகாபலிபுரம், கோவளம், எண்ணூர் போன்ற இடங் களில் கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடலலைகள் -பொ.சந்திரமோகன் காற்று, கடலலைகளை உண்டாக்குவதில் பெரும் பங்கேற்கிறது. கடல் பரப்பின் மேல் காற்று வீசும் போது கடல் நீரில் ஏற்படும் அசைவுகள் அவைகள் (waves) எனப்படும். கடலில் எண்ணற்ற பலவகை அலைத்தொடர்கள் உண்டாகின்றன. காற்றால் உண்டாகும் காற்றலைகள் (wind waves), இயல்