கடலலைகள் 271
கடலலைகள் 271 யங்களாகச் சிற்றலைகள் நீர்ப்பரப்பில் எழுகின்றன. ஏறத்தாழ ஒரு சென்ட்டி மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டிருக்கும் இவ்வலைகள் சிற்றலைகள் எனப்படும். மிகக் குறைந்த காலத்திற்கே இருக்கும் இவ்வலைகளுக்கு நுண்குழல் அலைகள் (capillary waves) என்றும் வேறு பெயர் உண்டு. காற்றின் வேகம் அதிகரிக்கும்போது, அலையின் போக்கும் வீரியம் கொள்கிறது. எனவே திறந்த கடல் பரப்பின் மீது காற்று தன் ஆற்றலை நீருக்குள் பாய்ச்சுவதால், கடல் மீது உண்டாகும் அலைகள், காற்றடிக்கும் வேகத்திற்கும் காற்றடிக்கும் காலத்திற்கும் நீர்ப் பரப்பின் அமைப்பிற்கும் காற்றடிக்கத் தொடங்கும் முன் கடல் மீது இருக்கும் அலைகளுக்கும் ஏற்ப மாறுவதால் அவை பல் சிறப்புப் பெயர்களைப் பெறுகின்றன. காற்றின் வேகம் அதிகரிக்கும்போது மிக நீண்ட அலைகள் அல்லது பெருக்கலைகள் உருவாகின்றன. எனவே, சிற்றலைகளே காற்றுக்கும் நீர்ப்பரப்பிற்கும் ஓர் இணைப்பை உருவாக்கிக் கடலின் ஒழுங்கற்ற மேற்பரப்பை ஒழுங்குற அமைத்து நீண்ட காற்றலைகள் தோன்றக் காரணமாகின்றன. தன் உயரத்தில் குறைந்தாலும், நீளத்தில் சிறிதும் குறையாமல் ஏறத்தாழ 1600 கி.மீ தாலைவு சென்றபின் உயரத்தில் பாதியாகக் குறைந்து மெலி வடைகிறது. எனவேதான் தென் பசிபிக் ஏறக்குறைய 11200 கி.மீ. தொலைவில் உருவாகும் நீள் அலைகளைக் கலிபோர்னியக் கடற்கரையில் காண முடிகிறதென அறிவியலார் கூறுகின்றனர். கடலில் மூழ்கும் உடையலைகள் (plunging waves). பேர னலகள் கடலில் பல சிற்றலைகளை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் அலைகள் கடற்கரைப் பகுதியி விருந்து பல்லாயிரக்கணக்கான கி.ம். தொலைவு சென்று உடைகின்றன. காற்றின் வேகம் தணியும் போதும், அலைகளின் நீண்ட பயணத்தின்போதும் அவை உயரத்தில் குறைந்து நீளத்தில் அதிகமா கின்றன. எனவே அவை நிலப்பெருக்கு என்னும் அலைகளாக மாற்றம் பெற்றுக் கடலின் குறுக்கே பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்கின்றன. இப்பெருக்கம் ஒழுங்காகவும், மிகத் தாழ்வாகவும் அமைந்திருக்கும். ஒரு பெருக்கலை, கரையை பலத்த காற்றினால் கடற்பரப்பு தாறுமாறாக பெருக்கலைகள். மிக உயர்ந்த நீண்ட அலைகள், தாம் பெற்றிருக்கும் அளப்பரிய ஆற்றலின் காரண மாக, தாம் தோன்றிய இடத்திலிருந்து மிக நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்கின்றன. நீள் அலை பரந்த கடலில் தன் ஆற்றலைச் செலுத்தி மிக நீண்ட தொலைவு பயணம் செல்லும்போது சிறிது சிறிதாகத் அலைகளில் ஏற்படும் பலவுரு மாற்றங்கள் அலை நெருங்கும்போது அதன் அடிப்பகுதி ஆழமற்ற கடல் தரையை உராய்ந்து செல்கிறது. என ஓர் ஆழமான நீரை விட்டுப் பிரிந்ததும் தொடங்கியதும் அடித்தளத்தைத் தொட்டுணரத் பெரும் மாற்றங்களுக்குள்ளாகிறது. இங்கு அலையின் வேகமும்,நீளமும் குறையத் தொடங்கும்.உயரர்