பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலலைகள்‌ 273

நிற்கும் அலைகள். மிக ஆழபான கடல் நீரில், சற்றேறக்குறைய செங்குத்தான சுவர்போலக் கடற் கரைச்சரிவு அமைந்திருக்கும்போது லேசான அலைத் தாக்குதல் நிகழ்கிறது. கரையை நோக்கி வரும் பிரதிபலிக்கப்பட்ட அலைகள் பிரதிபலிக்கப்பட்ட இலப்போடிஸ் எனப்படும் அமைப்பை உருவாக்கி விடுகின்றன. எனவே பிரதிபலிக்கப்பட்ட அலைகளின் முகடுகளும் அகடுகளும் ஒரே இடத்தில் சந்திக்கின்றன. அதனால் ஒரு நிலையான அலை அமைப்பு உருவா கிறது. அவை சரிவதால் ஒரு சுவர் போல் நின்று நிற்கும் அவை உண்டாகிறது.தனி அலைகள் கரையை நோக்கி வருவதும். பிரதிபலிக்கப்பட்டுத் திரும்ப நகர்வதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே யிருக்கும். புயல் பேரலைகள் அல்லது புயல் நுரைகள். மிகப் பெரும் புயல் காற்றால் கடல் பரப்பிலுள்ள நீர் தன் யல்பான அலை மட்டத்திற்கும் மேல் மிக உயர. மாக எழுவதால் புயல் பேரலைகள் தோன்றுகின்றன. காற்று மண்டலத்தில் தோன்றும் காற்றழுத்த வேறு பாடுகள் கடல் நீரைத் தாக்குவதால் ஏற்படும் புயல் கடலலைகள் 273 அலைகளும் காற்று அலைவகையையே சார்ந்தவை யாகும். புயலின் விளைவாக எழும் அலைகள் இயல் பான உயரத்தை விட இரு மடங்கு உயரம் கொண்டி ருக்கும். அவை புயலுக்குட்பட்ட சுரைகளின் தாழ்ந்த பகுதிகளைத் தாக்கி அழிக்கும். நீர்மட்டம் மிக வேக மாக உயர்ந்து வருமாதலால், இப்புவி மண்டலத்தில் புயலால் அழியும் உயிர்களின் எண்ணிக்கை மிகுதி யாகிறது. பொதுவாக மணிக்கு 960 -1280 கி.மீ. வேகம் கொண்ட கடுங்காற்று ஒரே திசையிலிருந்து வீசும்போது மிகப் பெரும் பேரலைகள் ஏறத்தாழ 15-18 மீட்டர் உயரமாகத் தோன்றலாம். டூமாண்ட் டே உரவில் எனும் பிரெஞ்சுப் பயணி 30 மீட்டர் உயரப் புயல் அலையைக் கண்டதாகக் குறிப்பீட் டுள்ளார். நன்னம்பிக்கை முனையில் 33.6 மீட்டர் உயரம் மிக்க அலைகள் தோன்றியுள்ளன. உலகில் உள்ள ஒவ்வொரு கடற்கரைப் பகுதியும் கடும் புயலவைகளால் தாக்கப்பட்ட போதும், வங்காள ஸ்காட் விரிக்குடாக் கடலும் ஐஸ்லாந்திற்கும், லாந்திற்கும் இடைப்பட்ட வடகடலுமே எப்போதும் புயல் தாக்கக்கூடிய இடங்களெனக் கடல் ஆய்வாளர் களின் அறிக்கை தெரிவிக்கிறது. அலைவீசும்போது தீர்த்துகள்களின் இயக்கம் ஆழ்கடலில் ஒட்டமாக அ. க. 7-18 B A 8 ஆழமற்ற நீர்ப் பகுதியில் நீள்வட்டமாக 00 O0 40