274 கடலலைகள்
274 கடலலைகள் புயல் காற்றால் உருவாகும். அலைகளும், நீண்ட அலைகள் அல்லது பெருக்கலைகள் போன்றே தோற்றமளிக்கும். பசிபிக் தீவுகளில் வசிக்கும் மக்கள் சூறாவளி வருவதை ஒரு வகையான நீண்ட அலைப் பெருக்கின் மூலம் கண்டறிவர். அதுபோலவே அயர் லாந்து கரையிலுள்ள மக்களும் நீண்ட அலைப்பெருக்கு களைக் கண்டபோது சாவு அலைகள் வந்து விட்டன என்றும், அவ்வலைகள் கரையை நோக்கி சூறாவளிக் காற்றாக வீசுமென்றும் அறிந்திருந்தனர். புயல் காற் றால் அழிவுகள் மிகுதியாக ஏற்பட்டாலும், அக்காற்று வெப்பத்தைக் கடத்திப் புவியை வாழ்வதற்கு உரிய இடமாக மாற்றுகிறது. ஓத அலைகள். புவியீர்ப்பு விசையால் உருவாகும் அலைகளை (ஓத அலைகளை) புவியின் நாடி எனக் கூறுவர். ஓதங்கள் தோன்றச் சூரியன், சந்திரனின் ஈர்ப்பு விசைகளால் மாற்றம் பெறும் பெருங்கடலின் மேற்பரப்பே காரணமாகும். காற்றால் உருவாகும் புயல் அலைகளும், பிற அலைகளும், இந்த ஒத அலைகளுடன் மிகுந்த வேறுபாடு கொண்டுள்ளன. பௌர்ணமி, அமாவாசை நாள்களில் கடல் நீர்ப் பரப்பு, பெருமளவில் உயர்ந்து காணப்படும், பின்னர் நீர் வற்றி நாள்தோறும் இரண்டு முறை இவ்வாறு அலை அமைப்பு நிகழ்ந்து கடலைத் தாக்குவதையே ஓத அலைகள்என்பர். உள்அலை கரைநோக்கி வருதல் புவியதிர்ச்சி அலைகள் (seismic waves of Tsunamis) அழிக்கும் ஆற்றலை மிகுதியாகப் பெற்ற அலை களுள் முதன்மை பெறுபவை புவியதிர்ச்சிக் கடலலை உள்அலைகள் தோற்றம்-மேலிருந்து நோக்குதல்