பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 கடற்கரைப்‌ பாதுகாப்பு

288 கடற்கரைப் பாதுகாப்பு கனமான பாறைகளும் குறிப்பிட்ட உயரத்திற்குப் பரப்பப்படும். சுவரின் அடிப்பகுதி சரியாமல் இருக்க கனமான பாறைகளால் பாதுகாப்புக் கொடுக்கப்படு கிறது. படம் கரைவிலகு நீர்த்தடைகள். இவை கற்பாறை அல்லது கற்காரை அமைப்புகளால் குவித்துக் கட்டப் படுகின்றன. இதன் குறுக்கு வெட்டுத்தோற்றம் 2 இல் காட்டப்பட்டுள்ளது. முனைப்பான மிகுதியான கடலரிப்புகளில் இருந்து காப்பதற்கும், ஒரு புதிய மணற் கடற்கரையை உருவாக்குவதற்கும் இவ்வகை நீர்த்தடைகள் கரைக்கு அப்பால் கடலினுள் கட்டப்படும். இவ்வகைக் கட்டுமானங்களால் அங்குள்ள கரைக்குப் பாதுகாப்பு ஏற்படுவதுடன், அருகிலுள்ள கரைக்கு அரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஆதலால் இம்முறையை முற்றும் ஆய்ந்த பிறகே மேற்கொள்ள வேண்டும். கடல்தறி, கிராயின். இவை உருவமைப்பில் கரை விலகு நீர்த்தடைகள் போன்றும் சிறிது அளவு குறைந்தும் காணப்படும். கரையிலிருந்து கடலுள் செங்குத்தாகவோ, சாய்வாகவோ கட்டப் கரையின் படும். அரிப்பு ஏற்படும் வை நீளத்தைப் பொறுத்து ஒன்றோ அடுத்தடுத்து மிகுந்தோ கட்டப் படுகின்றன. இவை மணற்கடத்தலைத் தடுத்து. மணலைப் படியச் செய்து கரையைப் பாதுகாக் கின்றன. ஆனால் இந்தக் கட்டுமானங்களில் ஒரு பக்கம் மணல் தொகுப்பும், மறுபக்கம் அரிப்பும் கரையின் ஏற்படும். கரையை வலிமைப்படுத்தவும். அகலத்தைப் பெருக்கவும் இவ்வகை நீர்த்தடைகள் பயன்படுகின்றன. செயற்கை மணல் ஊட்டம். மணல் மிகுந்த பகுதி யிலிருந்தோ, கடலினுள்ளிருந்தோ மணலை அள்ளி, அரிப்பு ஏற்படும் இடத்தில் கொட்டி வைப்பதைச் செயற்கை மணல் ஊட்டம் என்பர். பக்கப் பாதிப்பு இல்லாமல், அரிப்பு ஏற்படும் கரையை வலிமையாக்க இம்முறை மிகவும் சிறந்தது. ஆனால் தொடர்ந்து மணலை அள்ளி வருவதும், கொட்டுவதும் கடினத்தை யும், செலவு மிகுதியையும் தரும். பொதுவாகத் துறைமுகத்தின் அருகிலுள்ள கரையில் அரிப்பு ஏற்படும்போது இம்முறையைப் பின்பற்றுவர். எதிர்பாராமல் ஏற்படும் புயலின்போது உண்டா கும் அரிப்பிற்குச் சுவர் கட்ட நேரம் கிடைக்காது. அச்சமயங்களில் மணல் மூட்டைகளையும் கற்பாறை களையும் கரையோரத்தில் அடுக்கலாம். இது இந்தி யாவில் தற்காலிகமாகக் கையாளப்படுகிறது. மேலும் டயர்களையோ, மிதக்கும் பழைய கார் தேங்காய் மட்டைகளையோ பல வகையில் பின்னிக் கடலில், அவை உடையும் இடத்திற்குப் பின் மிதக்கும் பாயாக விரிக்கலாம், வை அலை ஆற்றலைக் குறைத்து 1*11/2 to 1:3 படம் 2. நீர்த்தடைகள் 1. பாய் 2. கடல்தரை (sea bed) 3. சிறிய பாறைகள் 4. பெரிய பாறைகள்