கடற்கரைப் பொறியியல் 289
கரையை அரிப்பிலிருந்து பாதுகாக்கும். இயற் கையைத் தடுத்துச் செயற்கையாகக் கட்டப்பட்ட சென்னைத் துறைமுகம் வடக்குப் பகுதியில் மிகு அரிப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், தென்பக்க முள்ள கூவம் ஆற்றுக்கழிமுகம் மணலால் அடை பட்டு நீரைக் கடலுடன் கலக்க விடாமல் தடுத்துச் சென்னையின் நலவாழ்வையே தடை செய்து விட்டது. - பொ.சந்திரமோகன் நூலோதி. Berkeley Thorw and A.G. Roberts, Sza Defence and Coast Protection Works, Thomas Telford Ltd., London, 1981; P, Brunn, and B.V., Nayalk, Manual on Protection and Control of Coastal Erosion in India, National Institute of Oceanography, Goa, 1980. கடற்கரைப் பொறியியல் இது பொதுப் பொறியியலில் ஒரு பிரிவாகும். கடற் கரையில் கடலின் வேலை பற்றியும், கடற்கரைப்பாது காப்பிற்குக் கட்டப்படும் கட்டகங்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்குக் கடற்பொறியியல் (coastal engineering) உதவுகிறது. அலைகளால் ஏற்படும் அழிவு அவற்றின் ஆற்றலால் கடற்கரையிலுள்ள பொருள் களை வேறோர் இடத்திற்குக் கொண்டு செல்வது ஆகியவை அடிப்படைச் சிக்கல்களாகும். கொம்பணை (groin). கடலோரத் தடுப்புச்சுவர் (bulk heads), கடற் சுவர் (sea wall) போன்ற பாதுகாப்புக் கட்டகங்கள் கடற்கரையைப் பாதுகாக்கின்றன. கடற்கரை அரிப்பு. (beach erosion). கடலலைக் ளால் கடற்கரை தொடர்ந்து சீரற்றுக் காணப்படு கிறது. மண் அரிப்பால், வேறு இடத்தில் மண்குவியல் தோன்றுகிறது. கடற்கரையிலுள்ள பொருள்கள் மண் அரிப்பால் இடம் மாறி வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுக் குவியலாகவோபடிந்தோ காணப்படும். இது கரை உகல் ஓட்டம் (littoral drift) எனப்படும். இது அலை, நீர் ஓட்டம் (currents) ஆகியவற்றால் ஏற்பட்டால் கரை உகல் நகர்த்தல் (littoral transport) எனப்படும். மண் அரிப்பையும் பெருக்கத்தையும் (accretion) தடுத்தால் கடற்கரை நிலையாக இருக்கும். கொம்பணைகளால் கடற்கரையை நிலைப்படுத்திப் பாதுகாக்கலாம். அலைகள். ஆழமான நீர் உள்ள இடத்தில் ஏற்படும் அலைகள் அசையும் தன்மையுடன் (oscillatory type) வட்டமாகச் சுழன்று கொண்டிருக் கும் நீருள்ள இடத்தில் காற்று அடிக்கும்போது அலைகள் உண்டாகின்றன. அந்த அலைகளின் வளர்ச்சி மூன்று காரணிகளைப் பொறுத்து அமையும். அ. க. 7-19 கடற்கரைப் பொறியியல் 289 அவை அந்த இடத்தின் நீளம், காற்றின் வேகம், காற்று அடிக்கும் நேரம் என்பவையாகும். மேலும் குறைந்த ஆழமுள்ள பகுதியின் ஆழம், அலைகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. அலைகளின் விரைவு, அந்த இடத்தின் ஆழத்தைப் பொறுத்து மாறுகிறது. ஆழம் குறைந்தால் விரைவும் குறைகிறது. கடற் கரையை நோக்கிச் செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில், நிலையற்று உயர்ந்து அலை அடிக்கிறது. தனால், நீர் வட்டமான சுழற்சியிலிருந்து (circular orbit) விடுபட்டுக் கொந்தளித்து வெண்மையாகக் காணப்படுகிறது. நிலையற்று உயர்ந்து செல்லும் அந்தக் குறிப்பிட்ட இடத்தையும், அலைகளின் உயரத்தையும் கணக்கிடுவது கடற்கரையைப் பாது காக்கும் கட்டகங்களின் வடிவமைப்புக்கு மிகவும் இன்றியமையாததாகும். ஓதங்கள் நீர் மட்டத்தில் ஏற்படும் ஓதங்களால் (tides) தொடர்ந்து அலைகள் தாக்கமடைகின்றன. அமெரிக்காவில் அட்லாண்டிக் கடற்கரையில் ஒவ் வொரு நாளும் ஏற்படும் இரண்டு ஓதங்களின் உயரம் ஏறத்தாழ ஒரே உயரமாக இருக்கும். வளைகுடாக் கடற்கரையில் ஏற்படும் இரண்டு ஓதங்கள் ஒரே அளவில் குட்டையாக இருப்பினும், சில சமயங்களில் இரண்டிற்கும் உயரத்தில் வேறுபாடு தோன்றும். பசிபிக் கடற்கரையிலும், அட்லாண்டிக் கடற்கரையி லும் ஏற்படும் ஓதங்களின் உயரம் வேறுபடுகிறது. ஓதங்களுடன், காற்று அழுத்தம் மாறுபடுவதால் கடலின் நீர் மட்டம் நாளுக்கு நாள் வேறுபடும். பருவகாலம் மாறுவதாலும் கடல் மட்டம் வேறுபடு கிறது. நீர் ஓட்டம். சில கடற்கரையோரங்களில். காற்று அடிக்கும் திசையில் இக்காற்றால் மேற்பரப்பில் நீர் ஓட்டம்(surface current) ஏற்படுகிறது. இதனால் நீர் மட்டம் குறைந்தோ, அதிகரித்தோ காணப்படும். து காற்றுக்கும், நீருக்கும் இடையே உள்ள தொடு கோட்டுத் தகைவால் (tangential stress) ஏற்படுகிறது. காற்றால் ஏற்படும் மேற்பரப்பு நீர் ஓட்டத்தால், கரைப் பக்கம் நீர் மிகுதியாகவும், காற்றுப் பக்கம் குறைந்தும் காணப்படுகிறது. அசையாது நிலையாக இருக்கும் நீர் மட்டத்தில் (still water level) காற்றால் ஏற்படும் நீர் ஓட்டத்தால் உண்டாகும் மாற்றம் காற்று ஓதம் (wind tide), புயல் ஓதம் (storm tide) என்று கூறப் படும். கடற்கரைப் பகுதியில் சாதாரணமாக ஏற்படும் ஓதங்களின் அளவைவிடக் காற்றால் ஏற்படும் ஓதங் களின் அளவு பெரியதாக இருக்கிறது. சான்றாக, ஃபோர்ட் மேயர் என்னுமிடத்தில், சாதாரணமாக ஏற்படும் ஓதத்தின் உயரம் மூன்று அடியாகும். ஆனால் 1960 இல் டோனா என்னும் சுடும் புயற்காற்றால் ஓதத்தின் உயரம் 11 அடியாக உயர்ந்தது. கடற் கரையைப் பாதுகாக்கும் கட்டகங்கள் நா ள்தோறும் உள்ள நீர்மட்டம், பருவ காலத்தில் வேறுபடும் நீர் மட்டம், பெரும நீர்மட்டம், அலைகளின் ஆற்றல்