பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரையண்மை நிகழ்வுகள்‌ 293

கடற்கரையில் நீண்ட தொடர் பள்ளங்கள் (long shore trough) உருவாக்கப்படுகின்றன. இவை உள்ளமைந்த கடற்கரையிலேயே அமைந்திருக்கும். கடல் முகம் (shore face) என்பது குறுகிய சாய் தளத்தை உடைய பகுதியாகும். வலிமை குறைந்த அலைகளால், மணலும் நுண்கற்களும் மேலும் கீழும் புரட்டப்படும் பகுதியாகும். கடற் கரையில் காணப்படும் கனிமங்களில் பெரும்பா லானவை நீரால் அரித்து அடித்து வரப்பட்டவையே யாகும். அவை அனற்பாறைகளிலிருந்து உடைந்து சிதைந்து போன துகள்களாகும். கடற்கரையில் மிகுதியாகக் காணப்படுபவை சிலிகாவினால் குவார்ட்ஸ் கனிமங்களாகும். ஆன சில தட்பவெப்ப நாடுகளின் கட டற்கரைக் கனி மங்கள் சுண்ணாம்புக்கல் நிறைந்தவையாகக் காணப் படும். சில தீவுக் கடற்கரைப் படிவுகள். எரிகற் களின் துகள்களால் ஆனவை. சில கடற்கரைகளில் காணப்படும் பச்சை நிறத்துகள்கள், ஆவிலின் எனப் படும் கனிமங்களிலிருந்து சிதைந்து உதிர்ந்தவை யாகும். ஆலிவின் கனிமம் எரிமலைக் கற்குழம்பி லிருந்து உருப்பெறும் ஓர் இன்றியமையாத பொரு ளாகும். கடற்கரையில் மணல் படிவுகளின் கீழே, சில டங்களில் மாங்னடைட், இல்மனைட் போன்ற கனிமங்கள் படுகைகளாக, அடுக்கடுக்காக அமைந் திருப்பதைக் காணலாம். இவ்வகைக் கனிமங்கள் அவற் றின் அடர்த்தியைப் பொறுத்து முதலில் படிந்து விடு கின்றன. அடுத்து, அடர்த்தி குறைவான கனிமங்க ளும், மண துகள்களும் படிகின்றன. அபிரகம் போன்றவை பொதுவாக, அனைத்துக் கடற்கரை மணலிலும் காணப்படும். கடலின் கடற்கரை வடிவங்கள் கால மாற்றத் தால் உருவானவை. வெப்பக்காலங்களில் கடவின் அலைமாற்றத்தில் பெரும் வேறுபாடு காணப்படும். மேலும் புயல், சூறாவளி போன்ற இயற்கை மாற்றத் தாலும், கடலலையில் ஏற்படும் வேக மாற்றத்தா லும் கட ற்கரை முற்றிலும் அரித்துச் செல்லப்பட லாம். இவ்வகைக் கடற்கரை பின்னர் ஏற்படும் அமைதியான அலை மாற்றத்தால் மீண்டும் உருவாக்கப்படலாம். இது காலமாற்றத்தால், கடற் கரையில் ஏற்படும் இயல்பான நிகழ்ச்சியாகும். கட லவைகளால், அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படும் மண்துகள்களும், மண் படிவுகளும் இறுதியில் படி கின்றன. ஆனால் அலையின் வேகம் மாறும்போது மண்படிவுகள் மட்டும் மீண்டும் அலைகளோடு கடல் நோக்கி ஆழமாகக் கொண்டு செல்லப்படு கின்றன. கடற்கரையின் நில அமைப்பு. இப்பகுதியில் காணப் படும் நில அமைப்பை அறிவதற்கு அப்பகுதியில் சில அடி ஆழத்தில் வரிகளாக, அடுக்குகளாக அமைந்த கடற்கரையண்மை நிகழ்வுகள் 293 மண்படிவுகள் உதவுகின்றன. இவை கரிய, வெண்மை யான துகள்களால் ஆனவை. இவ்வகையான மாறு பட்ட மண்படிவுகளை இடைக் கட ற்கரையில் (fore shore) காணலாம். இவை அலைகளின் வேக நீரோட்ட அலைகளால் உருவாக்கப்பட்டவையாகும். கருமையான அடுக்குகளில் இரும்பும் மக்னீசியமும் கல ந்த கனிமங்கள் பெரிதும் காணப்படுகின்றன. இவை அடர்த்தியானவை; எளிதில் படியக் கூடியவை; கருமையான மண் துகள்களில் உயர் உல்ஃப்ரமைட் கனிமத்துகள்கள் கலந்துள்ளன. சிற்றலைக் குறிகள். கடற்கரை மணல் பகுதி யில் பல்வேறு குறிகள், கோடுகள் காணப்படுகின்றன. அலைகள் கரையைத் தொட்டுத் திரும்பும்போது, மிக மென்மையான நுண் மணலில் பல்வேறு கீற்றுகளை உண்டாக்கும். அலைநீர் கீழ்நோக்கி வடியும்போது கட உற்கரை மணலில் வரிகள், கீற்றுகள் உண்டா கின்றன. அலைநீர் வடியும்போது பெரும் துகள்களை உடைய மண்ணில் சிற்றலைக் குறிகள் (ripple marks) காணப்படா. நீண்ட கடல் பள்ள அலைகளாலும், சிறு அலை களாலும் மற்றொரு வகையான சிற்றலைக் கீற்று உருவாகிறது. சிற்றலைக் குறிகள் அலைகளின் சிறும வேகத்தால் கடற்கரைத் தளத்திற்கு இணையாக உருவாகின்றன. மற்றுமொரு வகையான கீற்று அதற்குச் செங்குத்தான நிலையில் இருக்கும். இது அலைநீர் வடியும்போது உருவாகிறது. இத் தகைய கீற்றுகளும், சிற்றலைக் குறிகளும் நுண் மண்பரப்புடைய கரையில் நெருக்கமாக அமைந்திருக்கும். அலைநீர் திரும்பும் போது வடிவதால் பல பள்ள வரிகளை (ridges ) உண்டாக்குகின்றன. கரைமுகடு (beach cusps) எனப் படும் இப்பள்ள வரிகள் இடைக்கடற்கரைவரை காணப்படும். மிக அதிகமாக கடலலைகள் கரையைத் தொட்டுத் திரும்பும் போது, கரைசல்கள் கரையில் ஒதுக்கப்படுகின்றன. நீர் வடிந்தபின் இக்கரைசலின் மென் படிவுகள் தோன்றுகின்றன. இப்படிவுகள் கடலலையால் அலைக்கழிக்கப்பட்டு, மெல்லிய கோடுகளாகப் படி கின்றன. இம்மென் கோடுகளுக்கு ஸ்வாஷ் குறிகள் (swash marks) என்று பெயர். இக்குறிகள் பெரிய அலை வேகத்தால் அழிக்கப்படும்போது, புதிய ஸ்வாஷ் குறிகள் உருவாக்கப்படுகின்றன. பழைய ஸ்வாஷ் குறிகளைவிட வை மிகு உயரத்தில் அமையும். குறைந்த அலை வேகத்தால் கரையின் மண்பரப்பு சிறிது சிறிதாகக் கடலுள் அடித்துச் செல்லப்படுகிறது. அப்போது மண்துகள்கள் நீருடன் கடலின் அடி மட்டத்தை நோக்கிச் செல்லும்போது மிகமிகச் சிறு பள்ளத்தாக்குகளை உண்டாக்கும். இதுவே ரில் குறி (rill mark) எனப்படும். எஸ். சுதர்சன்