294 கடற்படைக் கிடங்குப் பொருள்கள்
294 கடற்படைக் கிடங்குப் பொருள்கள் கடற்படைக் கிடங்குப் பொருள்கள் முன்பு கடற்படைப் பொருள்கள் என்பவை நிலக்கல் (pitch), கரி எண்ணெய் (tar), ரெசின், சணல் (flax), கயிறு cordage), பாய்மரம் (mast), வெட்டுமரம் முதலியவற்றைக் குறித்தன. ஆனால் தற்போது பைன் மரத்தில் இருந்து பெறப்படும் ரோசின், டர்பன் டைன் முதலியவற்றைக் குறிக்கின்றன. கடற்படைக் கிடங்குப்பொருள்கள் இரண்டு வகைகளாக உள்ளன. முதல் வகையில் பசைப்பொருள்கள் அடங்கும். இப் பொருள்கள், உயிருள்ள மரத்தின் ரெசினிலிருந்து பெறப்படுகின்றன. இப்பொருள்களுக்குப் பண்படா டர்பன்டைன் என்று பெயர். ரண்டாம் வகையில் மரப்பொருள்கள் உள்ளன. இவை உயிரற்ற பைன மரத்திலிருந்து பெறப்படுகின்றன. உலகத்தில் கடற்படைக் கிடங்குப் பொருள் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளாகும். ஃபிரான்ஸ் இரண்டாம் இடம் வகிக் கின்றது. பசைப் பொருள்கள் தொழிலின் பண்படா ரெசின் ஒரு குறை நீர்மமாகும். இது டர்பன் டைன் எண்ணெயில், ரெசின் கரைந்துள்ள கரைச லாகும். இந்த ரெசின் மரத்தின் உட்பகுதியின் மேல் ஏற்படும் வெட்டு மூலமாகக் கருமரத்தில் (heart wood) இருந்து சாறாகச் சேமிக்கப்படுகின்றது. ஒவ் வொரு முறையும் புதிதாக வெட்டப்படுவதால் மரத் தின் மேல் பல வெட்டுகள் ஏற்படுகின்றன. வெட் டின் மேல் கந்தக அமிலம் ஊற்றுவதன் மூலம் மிகுதி யான ரெசினைப் பெற முடியும். இந்த ரெசினி லிருந்து காய்ச்சி வடித்தல் முறையில் டர்பன்டைன் எண்ணெய் பெறப்படுகிறது. எஞ்சிய பொருள்கள் கடினமாகி ரோசின் என்னும் பொருளைக் கொடுக் கின்றன. இவ்வகை ரெசினைப் பதப்படுத்த பண்ணை வாலை (farm still) பயன்படுத்தப்பட்டது. இம்முறை யில் பசை, செப்புப் பாத்திரங்களில் சூடுபடுத்தப்படு கிறது. டர்பன்டைன் எண்ணெயும், நீரும் ஆவியாகிச் செம்புச் சுருள்களில் குளிர்ந்து. கிடைக்கின்றன. வை ஒரு பாத்திரத்தில் சேர்க்கப்படும்போது இரண்டு அடுக்குகளாகப் பிரிந்து மேல் டன்பன்டைன் எண்ணெய் கிடைக்கிறது. அடுக்கில் வாலையில் எஞ்சியுள்ள பொருள்களான உருகிய ரெசின், பட்டை, பைன் ஊசிகள், அழுக்கு, மணல் முதலியவை வாலையிலிருந்து வடித்தெடுக்கப்படு கின்றன. இறுதியாக இருக்கும் கறுப்பு நிறப்பொருளே ரோசின் எனப்படும். தூய ரெசினிலிருந்து நீராஸிக் காய்ச்சி வடித்தல் முறையில் டர்பன்டைன் எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் ரோசின் ஒளி கசியக் கூடியது. வெளிறிய நிறமுடையது. இதற்கு அம்பர் ரோசின் என்று பெயர், மரக் கிடங்குப் பொருள்கள் உயிரற்ற பைன் மரக்கட்டையிலிருந்து பெறப்படு கின்றன. பைன் மரங்கள் அழிந்து பின்னர், சிதைந்து அவற்றிலிருந்து பட்டையும், சாற்றுப் பகுதியும் நீங்கிவிடுவதால் கிடைக்கும் அடி மரத்துண்டுகள், மென் மரங்கள் (light wood) போன்றவற்றிலிருந்து மரக்கடற்படைக் கிடங்குப் பொருள்கள் பெறப்படு கின்றன. மரத்துண்டுகளிலிருந்து கடற்படைக் கிடங்குப் பொருள்கள் பல முறைகளில் தயாரிக்கப்பட்ட போதும் பொதுவாக, மரங்கள் மிகச் சிறிய துண்டுகளாக்கப்பட்டு அவை ஓரு செரிப்பானில் (digestor) இடப்பட்டு வெப்பத்திற்கும் அழுத்தத் திற்கும் உட்படுத்தப்படுகின்றன. இவை மேலும் பின்னக் காய்ச்சி வடித்தல் மூலம் தூய்மையாக்கப் படுவதால் மர டர்பன்டைன் எண்ணெயும், பைன் எண்ணெயும் கிடைக்கின்றன. இவற்றில் பைன் எண்ணெய், உயிருள்ள மரங்களில் இருந்து கிடைக்கும் ரெசினிலிருந்து கிடைப்பதில்லை. கனிம எண்ணெய்க் கரைப்பான்களை மரத்துண்டுகளுடன் இருக்கும் எஞ்சிய ரெசினுடன் சேர்த்துக் கிடைக்கும் கரைசலைத் தூய்மைப்படுத்தும்போது கரைப்பான் தனியே பிரிகிறது. எஞ்சிய பொருளுக்கு மர ரெசின் என்று பெயர். சல்ஃபேட் முறை என்னும் முறையில், சல்ஃபேட் மர டர்பன்டைன் என்னும் துணைபொருள் கிடைக் கின்றது. செரிப்பானில் இருந்து வரும் ஆவியைக் குளிர வைப்பதன் மூலம் இப்பொருள் கிடைக்கிறது. இந்த டர்பன்டைன் எண்ணெயில் சல்ஃபேட் சேர்மங்கள் உள்ளன. இவை வேதி முறையில் தூய்மை செய்யப்படுகின்றன. இம்முறையில் ரோசின் இறுதியாகக் கிடைப்பதில்லை. ஆனால் இம்முறையில் பயன்படும் நீர்மம் சிதைந்து வேதி முறையில் வினைக்குட்பட்டுப் பயனுள்ள ரெசினும், கொழுப்பு எண்ணெயும் கலந்த கொழுப்பு மெழுகெண்ணெயைக் (tallow oil) கொடுக்கின்றன. கடற் பொறிகள் கி.மு. மோகன் மீன்பிடி படகுகள், வணிகக் கப்பல்கள், பயணக் கப்பல்கள் முதலியவற்றைச் செலுத்தக்கூடிய எந்திரங் களைக் கடற் பொறிகள் (marine engines) எனலாம். வை உறுதியானவையாகவும், எடைகுறைவானவை யாகவும், சிறியனவாகவும் இருக்க வேண்டும். மேலும் எரிபொருள் சிக்கனம், நீடித்த உழைப்பு, எளிதில் இயங்கும் தன்மை பின்னோக்கிச் செல்லும் வசதி. குறைந்த வேகத்திலும் சீராக இயங்கும் தன்மை ஆகியன இவற்றின் இன்றியமையா இயல்புகளாகும். கடற்பொறிகளை அவற்றில் பயன்படுத்தக்கூடிய எரிபொருள்களுக்குத் தகுந்தவாறு கீழ்க்காணும் பிரிவு