பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்பொறிகள்‌ 295

களாகப் பிரிக்கலாம். அவை நீராவிப் பொறிகள் (steam engine), வளிமச் சுழலிகள் (gas turbines). உட்கனற் பொறிகள், அணு ஆற்றல் பொறிகள் என்பனவாகும். நீராவிப் பொறிகள். கொதிகலனில் உண்டாகும் நீராவியைக் கொண்டு இப்பொறிகள் இயக்கப்படு கின்றன. முன்பு இவை மட்டுமே நீர் ஊர்திகளில் பயன்பட்டன. தற்போதும் இவை பெரிய கப்பல்களில் பயன்படுகின்றன. இயங்கும் தன்மைக்குத் தகுந்த வாறு நீராவிப்பொறிகளை முன்பின்னசைவுப்பொழி. நீராவிச் சுழலி என இருவகைகளாகப் பிரிக்கலாம். மு ன் பின்னசைவுப் பொறி. இவ்வகைப் பொறி களில் நீராலியை உருளைகளில் செலுத்தி உந்து கோல்களை முன்னும் பின்னும் அசைப்பதன் மூலம் நீராவி ஊர்திகளைச் செலுத்தத் தேவையான ஆற்றல் பெறப்படுகிறது. சாதாரணமாக இரண்டி லிருந்து ஆறு உருளைகள் வரையுள்ள பொறிகள் பயன்படுகின்றன. அனைத்து உருளைகளிலும் சமமான ஆற்றல் பெறப்படுகிறது. முன் பின்னசைவுப் பொறி களில் உராய்வு உயவிடுதல் மிகுந்திருப்பதால் இன்றியமையாததாகிறது. இதனால் உயவு எண்ணெய் lubricant oil) நீராவியுடன் கலந்து விடுகிறது. எனவே. குளிர்விக்கப்பட்ட நீராவியை, நீராக மீண்டும் கொதிகல்லுக்குள் செலுத்தும் முன் வடி கடற்பொறிகள் 295 கட்ட வேண்டும். அதற்கு வடிகட்டிகள் பயன்படு கின்றன. நீரா விச்சுழலிகள். இவ்வகைப் பொறிகளில் சுழலும் கருவியை இயக்கத் தேவையான சுழற்சி நேரிடை யாகவே பெறப்படுகிறது. முன் பின்னசைவுப்பொறி களில், உந்தின் அசைவுகளைச் சுழற்சியாக மாற்ற ஒரு வணரித்தண்டு (crank). அல்லது வளை உருளை {cylinder) தேவை. சுழலிகளில் அத்தகைய தண்டு தேவையில்லை. சுழலிகள் வேகமாகச் சுழலும்போது அவற்றின் வினைத்திறன் மிகுதியாக இருக்கும். ஆனால் நீர் ஊர்திகளைச் செலுத்தும் சுழலும் கருவியின் வேகம் குறைவாக இருக்க வேண்டும். எனவே, சுழலும் கருவியின் வேகம் தேவையான அளவில் இருக்க, பற்சக்கரத் தொடர்கள் பயன்படுகின்றன. சுழலிகள் ஒரே திசையில் மட்டுமே இயங்கக் கூடியவை. எனவே பின்னோக்கிச் செல்ல மற்றொரு சுழலி பொருத்தப்பட வேண்டும். இரண்டாம் சுழலி யின் திறன். முதலாவதைப் போல் ஐந்தில் இரண்டு பங்கு இருக்க வேண்டும். இரண்டாம் சுழலியைப் பொருத்துவதால் இப்பொறி முழுமை பெறுகிறது. வளிமச் சுழலி. இப்பொறிகளின் இயக்கம் அடிப் படையில் நீராலிச் சுழலிகளைப் போன்றதேயாகும்.. குறை அழுத்தச்றது. குறைவேகப் பல்சக்கரம் மிகு அழுத்தச் சுழலி படம் 1 நீராவிச் சுழவி