பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடாரங்காய்‌ 299

வளர்க்கப்பட்டு வந்துள்ளது. மேலும் கடாரங்காய் என்னும் தமிழ்ப்பெயர் வருவதற்குக் கரரணமே இது கடாரம் எனப்படும் பர்மாவிலிருந்து வந்ததாக இருக்கக்கூடும் என்பது அண்மைக்காலக் கண்டுபிடிப்பு. அரிஸ்டாட்டிலின் மாணவரான தியாஃப்ரெஸ்டஸ் இச்செடியைப் பற்றிய, பிழை இல்லாத, முழுவிவரங் களையும் தம் தாவரவியல் நூலில் விவரித்துள்ளார். இது ஐரோப்பாவிற்கு அலெக்சாண்டர் படையெடுப் பின் மூலமாக இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப் பட்டிருக்கலாம் என வரலாற்றறிஞர்கள் கருது கின்றனர். சிட்ரஸ் என்னும் இனப்பெயர் முதன் முதலில் பிளினியால் அறிமுகப்படுத்தப்பட்டு, அதே பெயர் வின்னயஸ்ஸால் நிலைநிறுத்தப்பட்டது. தியாஃப் ரெஸ்டஸ் இதைப் பாரசீக அல்லது மீடியா ஆப்பிள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிற்றின அடை மொழியான சி. மெடீகா என்பது மீடியா என்னும் நகரத்தைக் குறிக்கும். அங்கிருந்துதான் இச்செடி ரோமானியர் மூலம் கிரேக்கர்களுக்கு முதன் முதலில் அறிமுகமாயிற்று. வளரியல்பு. கடாரங்காய் பல் ஆண்டுகள் உயிரோடிருக்கக்கூடியதும்,பசுமைத்தன்மை கொண்ட தும் ஆகும். இது 3 மீ உயரமுள்ள செடி அல்லது சிறுமரமாகும். அடிமரம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவு குட்டையான, தடித்த கோணலான. முள்களோடு கூடிய கிளைகள் பல, தரை மட்டத்தை அடுத்து உள்ளன. செடியின் பட்டை வெளுத்த பழுப்புநிறமாகவும், முள் குட்டையாகத் தடித்துக் கூர்மையாகவும் இருக்கும். புடையவை. இலைகள். தனித்தவை மாற்றிலையடுக்கு அமைப் காம்பும் சேர்ந்து இலைப்பரப்பும் காணப்படும். காம்பு இறக்கைகள் அற்றது. இலை முட்டை அல்லது நீள்வட்ட வடிவம் கொண்டது. 8- 15 செ.மீ நீளமும். விளிம்பில் பற்கள் அல்லது வளைவுகள் போன்ற அமைப்பும் கொண்டது. இலை யின் மேற்பரப்பு பச்சையாகவும், கீழ்ப்பரப்பு வெளிர் பச்சையாகவும் காணப்படும். மஞ்சரி. இலைக்கோண அல்லது நுனி ரெசீம் மஞ்சரியாகும்; இதில் 3-10 சிறிய மலர்கள் நெருக்க மாக அமைந்திருக்கும். பொதுவாக ஒருபால் ஆண் பூக்கள் மிகுதியாகவும், இருபால் பூக்கள் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படும். புல்லிவட்டம். மிகவும் சிறியது: போன்றது; புல்லிகள் இணைந்தவை. கிண்ணம் அல்லிவட்டம். இதழ்கள் 5, தனித்தவை, புறம் வெண்மையாகவும், உட் வெளிப்புறம் வெளிர் ஊதா நிறமாகவும் இருக்கும். நுனி உள்நோக்கி வளைந்திருக்கும். கடாரங்காய் 299 மகரந்தத்தாள்கள். 40-45 தனித்தோ, இணைந்தோ காணப்படும். அவை வேறுபட்ட உயரம் கொண் டவை. சூலகம். பெரியது. 9-12 அறைகள் கொண்டது. சூலகத்தண்டு தடித்திருக்கும். லகமுடி தலை போன்று பருத்திருக்கும். கனி கனி. 10-12 செ. மீ. நீளமிருக்கும். நீண்ட கோளவடிவும் மழுஙகிய நுனியும் கொண்டது. தோல் கெட்டியாகக் கரடு முரடாகக் காணப்படும். சதைப்பற்றுள்ள சிறப்பு வகைச் சதைக்கனி (berry) ஆகும். இதை ஹெஸ்பிரிடியம் என்பர். பழத்தோல் வெளித்தோல், நடுத்தோல், உள்தோல் என மூன்று பகுதிகளைக் கொண்டது. வெளித்தோல் ஃப்ளா விடோ (flavido) எனப்படும். இதில் பச்சையச் செல்களும், எண்ணெய்ச் சுரப்பிகளும் சுலந்து காணப்படும். காய் பழுக்கும்போது இந்தப் பகுதி மஞ்சளாக மாறும். நடுத்தோல் கனமாகவும் பஞ்சு போலவும் காணப்படும். இதை அல்பிடோ (albedo) என்பர். இப்பகுதி மிகுதியான சர்க்கரை, பெக்டின், செல்லுலோஸ், வைட்டமின் C ஆகியவற்றைப் பெற்றிருக்கும். இதற்கு உள்ளே காணப்படும் உள் தோல், இது மெல்லியதாகச் சவ்வு போலிருக்கும். சுளையாக இலைகளே அமைகின்றன. சூல் களை சிறியதாக இருக்கும். களை ஒவ்வொன்றின் உள்ளும் சாறு நிரம்பிய தூவிகளைக் காணலாம்' இக்கனியின் சுளைத்தூவிகளில் சாற்றின் அளவு குறைவு. இச்சாறு புளிப்புடன் சற்று விறுவிறுப்பாக இருக்கும். விதைகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். ஒரு விதையில் பல கருக்களைக் (polyembryony) காணலாம். பயன்கள். கடாரங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு நீரில் புளிக்க வைத்துப் பிறகு சர்க் கரையில் தோய்த்து வைப்பர். வெளிநாடுகளில் இந்த இனிப்பு வகையைப் பெரிதும் விரும்புவர். மேலும் சர்க்கரையில் தோய்த்த கடாரங்காய்த் தோல்களைக் கேக் போன்ற தின்பண்டங்களுக்கு மணமூட்டப்பயன்படுத்துவதுண்டு. பழத்தோலிலுள்ள எண்ணெய் எடுப்பதைத் துணைத் தொழிலாகக் காள்பவர்களு நம் உண்டு. இந்தியாவில் காயை நறுக்கி மிளகாய்ப்பொடி, உப்புச் சேர்த்து ஊறுகாய் போடுவது வழக்கம். கடாரங்காய் மருந்தாகவும் பயன்படுகிறது. இச்செடியின் வேர் மலச்சிக்கல், சிறுநீர் தொடர்பான நோய்கள், வாந்தி முதலிய களைப்பை நீக்கக்கூடிய வற்றிற்கு மருந்தாகிறது. சத்து நீர்மமாகச் செயல்படுகிறது. இனிப்புச் சுளை களைக் கொண்ட வகைகள் பானங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இக்காயின் மணத்திற்குக் காரண மானவை எண்ணெய் லிமோனின். டைபென்டீன் போன்றவை ஆகும். தி. ஸ்ரீகணேசன்