12 கசிட்டரைட்
12 கசிட்டரைட் யம் அஞ்சத்தக்க மயக்கம் கொடுக்கக்கூடிய மருந் கோடின் என்பவை தாகும். ஒப்பியம், மார்ஃபீன், உடல் மற்றும் மனவளர்ச்சிக் குன்றுவதற்கும், இறப்ப தற்கும் காரணமாகின்றன. - பா.அண்ணாதுரை கசிட்டரைட் நாற்கோணத் தொகுதியில் (tetragonal system) இரு நாற்கோண இரு கூம்பு வடிவமாக உள்ள டின் ஆக்சைடு வேதியியல் உட்கூறைக் கொண்ட கனிமம் கசிட்டரைட் (cassiterite) எனப்படும். இது காரீயத்தின் முக்கியமான ஆக்சைடு படிகத் தாதுவாகும். இதன் வேதி உட்கூறு டிகாரீயன் ஆக்சைடு (SnO,) ஆக இருந் தாலும் இதன் உட்கூறில் டான்டலும், நியோபியம், இரும்பு ஆக்சைடு, உல்பர ஆக்சைடு, மக்னீஸ் ஆக்சைடும் சுமார் 20% கலந்து காணப்படும். மேல் கூறப்பட்ட தனிம ஆக்சைடு அதிகரிக்க அதிகரிக்க இதன் அடர்த்தியும் மிகுந்து கொண்டே இருக்கும். இயற்பியல் பண்பு. பட்டகங்கள் குட்டையாக அல்லது கூம்பு வடிவக் குறைவான அளவில் பட்டகப் பக்கச் செவ்விணை வடிவமாகவும் (100), பட்டகக் கனிமப் பிளவாகவும், கூம்புப் பக்கத்தில் (111) பிரிவு கொண்டும் காணப்படும். படிகங்கள் பழுப்புச் சிவப்பு நிறமாகவும் கருமை நிறமாகவும் காணப்படும். கடினத் தன்மை 6-7 வரையும், அடர்த்தி 6.98-7.02 வரையும், சில இடங்களில் அடியிணை வடிவப் பக்கத் தில் (001) தெளிவற்ற கனிமப்பிளவு கொண்டும் காணப்படும். வைர மிளிர்வு கொண்டு, அமிலத்தால் மெதுவாகக் கரையும் தன்மையுடையது. எண் உடையது. நிறமற்றதாகவும், ஒளிப் பண்பு. இது ஓர் அச்சு, நேர் (+) ஒளி சுழற்றும் கனிமம் ஆகும். அதிக அளவு ஒளிவிலகல் கனிமச்சீவலைக் காணும்போது அரிதாகச் சிவப்பு, மஞ்சள் நிற மாகவும், பலதிசை அதிர்நிறமாற்றப்பண்பு கொண்ட தாகவும் மஞ்சள் முதல் பழுப்பு, சிவப்பு வண்ணமாக வும் காணப்படுகிறது. இதன் ஒளியியல் அச்சுக் கோணம் 0 - 38' வரை இருக்கும். எதிர்பலிப்பு நுண்ணோக்கியின் கீழ் இதை மெருகு ஊட்டிக் காணும்போது வெளிர் சாம்பல் நிறம் மேலும் திண்மையாகவும், மாறாப் பண்பு கொண்ட கனிமமாகவும் இதன் எதிர்பலிப்பு அளவு சிவப் புக்கு 8.5%ஆகவும், ஆரஞ்சு வண்ணத்திற்கு 10 ஆகவும், பச்சைக்கு 11 ஆகவும் இருக்கும். செயற்கை முறையில் உருவர்க்கும்போது, அறு கோண, செஞ்சாய்சதுர வடிவங்களாக இது உருவா கிறது. ஆனால் இதன் நிலைப்புத் த நன்மையைக் கண்டறிய முடிவதில்லை. கசிட்டரைட் கனிமப் படிகத் தோற்றம் இனம் சுட்டும் பண்பு. ரூட்டைலுடன் இதை ஒப்பிடும்போது வெளிர் நிறமும், குறைவான ஒளி விலகல் எண் இடைவெளியும், தெளிவான ஒளிப் பிரிகை நிறங்களும் கொண்டு வேறுபடுத்தலாம். சில பரவல். அமில அனற்பாறைகளில் நரம்பிழை களாகவும், பெக்மடைட்டுகள், கந்தகப் படிவுகளில் நரம்பிழைகளாகவும், உயர் வெப்ப நீர்மப் படிவு களில் நரம்பிழைகளாகவும், டூர்மலின், உல்ஃபரமைட் புஷ்பராகம், ஃபுளூரைட், லெபிடோலைட் முதலிய கனிமங்களில் உடனிணைந்த கனிமமாகவும். நேரங்களில் ஸ்டேனைட் டில்லைட் முதலிய கனிமங் களின் வேதிச்சிதைவாகவும் உண்டாகலாம். ஆற்றுப் படிவுகளில் இயல்பான அரிமானப் படிவுகளாகவும் காணப்படுவது உண்டு. டிகாரீயன் உலோகம்கொண்ட அமில அனற்பாறை சிதையும்போது இரண்டாம் தரக் கனிம ஊட்டியாகவும் கிடைக்கிறது. மலேசி யாவில் காணப்படும் முக்கிய கசிட்டரைட் படிவுகள் வண்டல் கூம்புப் படிவுத் தோற்றம் கொண்டவை யாகக் காணப்படும். சு.சந்திரசேகர் நூலோதி. W.E. Ford, Dana's Text Book of Minerals, Willey Eastern limited, New Delhi, 1985; A.N. Winchell and H: Winchell, Elements of Opti- cal Mineralogy, Willey Eastern private Ltd, New Delhi, 1968. .