கடிகைகள், அளவிகள் 305
பட்ட செல் மற்றும் செல்லா வரம்புக் சுடிகையே யாகும். சில சமயம் இவ்விரு முனைப்பகுதிகளும் ஒரே முனையில் அடுத்தடுத்து இருக்கக்கூடும். வளையக் கடிகை. இது வெளிவிட்டத்தை அளப் பதற்குப் பயன்படும். ஆனால் இதன் தயாரிப்புச் செலவு மிகுதியாக உள்ளமையால் சில குறிப்பிட்ட அளவுகளில் தான் பயன்படுகின்றது. கூம்பு வடிவக் கடிகை (taper gauges). படத்தில் இதன் அமைப்புக் காட்டப்பட்டுள்ளது. செருகி களாகப் பயன்படும்போது இவை ஆய்வு செய்யப்பட வேண்டிய துளைகளில் செருகப்படுகின்றன. பிறகு சற்று அழுத்தம் கொடுக்கப்படும். அப்போது அவை துளையினுள் இருக்கையில் அதிர்வு அல்லது மாறுபடு நகர்வை ஏற்படுத்தாமல் இருந்தால் அந்தக் கூம்பு வடிவத்துளை அளவுகள் சரியானவையேயாகும். கூம்பு வடிவ விட்டத்தை அளக்கையில் எவ்வளவு ஆழத்திற்குச் செருகிகள் உள்ளே செல்கின்றன என்பதைப் பொறுத்தும், அதனால் செருகிகளின் மேற்பரப்பில் தோன்றும் கோடுகளைக் கொண்டும் கூம்பு விட்டத்தை அளவிடலாம். வெளிவிட்டக் கடிகை. படத்தில் இதன் அமைப்புக் காட்டப்பட்டுள்ளது. செல் மற்றும் செல்லா வரம்புகள் அடுத்தடுத்து இருக்கும். சில சமயம் இக் கடிகைகள், அளவிகள் 305 சிறு கடிகைகளின் அடைகல் (anvil) போன்ற அமைப்புகள் பட டத்தில் காட்டியபடி அமைந்திருக்கும். ஒரு பகுதியில் நிலைப்படுத்தப்பட்டும் மற்றொரு பகுதியில் சரிசெய்யக் கூடியதுமான வகையில் இருக்கும். இணைகளாக இருக்கும் இவற்றில் ஒன்று செல் முனையாகவும், பிறிதொன்று செல்லா முனையாகவும் இருக்கும். ஆர மற்றும் முனை வளையக் கடிகை. பொருள் களின் முனைகளில் உள்ள வளை பரப்புகள், குவி அல்லது குழி ஆரங்களைச் சரிபார்க்க இக்கடிகை பயன்படுகிறது. இதில் 1-25 மி.மீ. வரை உள்ள ஆரங்களை அறியலாம். இதன் அமைப்பில் 16 வகை யான குவி, குழி ஆரத் தகடுகள் இருக்கும். படம் 5 இல் இதன் பொது அமைப்பு விளக்கப்பட்டுள்ளது. கடிகைப் பாளங்கள்(large blocks). இவை அடுக்குப் பாளங்கள் (slip gauges) என்றும் கூறப்படும். இவை நீள் சதுரமான சிறு சிறு பாளங்களாக நுண்ணிய அளவீடுகளுடன் மிகக் கவனத்துடன் தயாரிக்கப் பட்டிருக்கும். இவற்றை முதல்தரமாகக் கொண்டு. இதர நுண்ணளவிகளின் தரத்தை ஆய்வு செய்யலாம். எஃகு கலவையில் தயாரிக்கப்பட்டு, கடினப்படுத்தப் பட்டு நுண்ணிய பரப்பிற்குக் கடையப்பட்டிருக்கும். வை தூசு, வெப்பநிலை போன்றவற்றால் தாக்கப் 00000000 படம் 6. பலகை மற்றும் கம்பிக் கடிகைகள் அ.க. 7- 20