கடியும் கொட்டும் 311
கடி காள்கை சில அறிவியலார் திருப்பக் கணிதவியல் தன்மை உள்ளது அன்று என்று குறை கூறுகின்றனர்; அது அறிவியல் பொருள் படைத்தது அன்று எனவும் கூறப்படுகிறது. அதன் சில பயன் பாடுகள் பொருந்தாதவை எனக் கூறுவோரும் உண்டு. முதல் இரண்டு குற்றச்சாட்டுகளும் சான்று களற்றவை. ஆயினும் கடி திருப்பக் கொள்கையைக் குடிப்பழக்கம், சிறைகளிலுள்ள கைதிகளின் நடத்தை, சமுதாயச் சிக்கல் போன்றவற்றை விளக்கப் பயன் படுத்திய முறைகள் ஐயத்திற்கு இடமானவை என்பதால் மூன்றாம் குற்றச் சாட்டிற்கு ஓரளவு சான்று உள்ளது. ஆனால் அம்முறையில் பயன் படுத்தப்பட்ட கணிதத் தத்துவங்களை வியலாது. கடி திருப்பக் கொள்கை இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வுகளில் மிகு பயன் தரக் கூடிய ஒரு கருவி. உயிரியலையும் சமூகவியலையும் ஆராய்வதில் கூட அதன் பங்கு மிக விரைவிலேயே முக்கியமானதாக ஆகும் எனலாம். கடிப்படை குறை கூற கே. என். ராமச்சந்திரன் இது உடலில் ஏற்படும் ஒரு வகைத்தோல் நோயாகும். கடிப்படையை (lichen simplex chronicus) நரம்புத்தோல் அழற்சி (neuro dermatitis circums scripta) என்றும் கூறலாம். இது உடலின் எந்தப் பகுதியிலும் வரக்கூடும். இந்நோய் ஆண்களைவிடப் பெண்களுக்கே பெரும்பாலும் ஏற்படுகிறது. இந்நோய் கழுத்தின் பின்புறமும், கை, கால். மணிக்கட்டு. கணுக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் காணப் படுகிறது. நோய்க்குறிகள். நோய்வாய்ப்பட்ட தோல் பகுதி, நிறம் மாறி அரிக்கும். 'சிலருக்குக் கொப்புளங்கள் தோன்றலாம். தோல் உரியும், தாக்கமுற்ற இடத்தி லிருந்து நீர் கசியும். சில வேளைகளில் முடிச்சுகள் (nodules) உண்டாகும். சில நாள் முதல் பல ஆண்டு கள் வரைகூட இது உடலில் தாற்றி இருக்கும். வகை அரிக்கும் பிடரிப்படை. நடுத்தர வயதுடைய பண்களின் கழுத்துப் பின்புற மையப்பகுதியில் ஏற் படுவது அரிக்கும்படையாகும். அரிப்புக்காரணமாக மிகுதியாகச் சொறிவதால் தோல் உரிந்து வேளைகளில் இரத்தமும் கசியலாம். கவலைகள் மிகும்போது இப்பகுதிகளில் அரிப்பும் மிகும். சில தலைப் பகுதியில் ஏற்படும் அரிக்கும் முடிச்சுப்படை. தலைப் பகுதியில் பல முடிச்சுகளுடன் அரிப்பும் ஏற் பட்டுச் சில வேளைகளில் கொப்புளமாக மாறித் தோல் உரிவதால் இதைக் என்று கூறுவர். இந்த கொப்புளங்களிலிருந்து நீர் கடியும் கொட்டும் 3/1 கடிக் கொப்புளம் முடிச்சுகள் அல்லது வடியலாம். பக்குகள் ஏற்படலாம்; செதில்கள் (crusts) தோன்றலாம். (scales) இந்நோயால் குதப்பகுதி, விந்துப்பை, அல்குல் (vulva) ஆகிய பகுதிகள் பெரும்பாலும் பெரும் அரிப் போடு பாதிக்கப்படலாம். கண்ணில் மேல் இமை, காதுகளின் துளைகள், உள்ளங்கை, உள்ளங்கால், கணுக்கால் மடிப்பு ஆகிய பகுதிகளும் இந்நோயால் தாக்கமடையலாம். அரிக்கும் பெரும்படை அரிக்கும் பெரும்படை (giant lichenification), வயது முதிர்ந்தோரின் தோல் களில் ஏற்படும் நோயாகும். வழக்கமாக இது அடிக் கடிச்சொறிந்து கொண்டிருக்கும் பகுதியான புட்டம். அக்குள், தொடையிடுக்குகள் முடிச்சுகள் போல் தோன்றும். ஆகிய பகுதிகளில் நோய்க்காரணம். காயங்களால் நரம்பு முனைகள் நறுக்கப்பட்டு ஆறாமல் இருப்பதால் நோய் ஏற்படு கிறது என்று கருதப்படுகிறது. சிறு அரிப்பு ஏற்பட்டுப் பரவிக் கொண்டே வந்து ஒரு நிலை அடையும்போது மருத்துவம் அளிக்காவிட்டால் இது தொடர்ந்து உடலில் இருந்து கொண்டே இருக்கும். உணர்ச்சிக்கு அடிமையாதல், உளப் போராட்டம் ஆகியவை நோயைத் தூண்டுகின்றன என்றும் கருதப்படுகிறது. து அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. தடுப்பு மருத்துவம். தொடக்கத்தில் இந்நோயால் தாக்கமுற்றோரின் பாதிக்கப்பட்ட பகுதி அரித்தா லும் சொறியாமல் இருப்பதும், காயங்கள் ஏற்பட் டால் உடன் காயத்தை ஆற்றுவதும் இந்நோயைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் தாக்கமுற்ற பகுதி யில் ஒருமில்லி மீட்டருக்கு 5 அல்லது 6 மில்லி கிராம் மருந்தும் ஏற்றலாம். இவ்வாறு ஏற்றப்பட்ட மருந்து மேல் அப்பகுதியில் இருக்கும். ஒரு மாதத்திற்கு நோயுள்ள பகுதியின் மேல் கார்ட்டிக்கோஸ்டிராய்டு களிம்பு தடவலாம். கடியும் கொட்டும் ஆ.எழில்விழி உலகிலுள்ள ஆயிரக்கணக்கான விலங்கினங்களில் பல கடிக்கும், கொட்டும் தன்மையுடையவை. இவற் றில் பல மனிதனுக்கு நச்சு நிலையை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கலாம். இந்தியாவில் நாய்க் கடி, பாம்புக்கடி, தேள் கொட்டுதல். வண்டு கொட்டுதல், சிலந்திப்பூச்சிக்கடி, பல்லிக்கடி ஆகியவை பெருமளவில் காணப்படுகின்றன. இந்தியாவில் மட்