கடின ஓட்டுக் கணுக்காலிகள் 313
VOL7 சொல் கடின ஓடு எனப் பொருள்படும். இவை எண் ணிறந்த இனங்களைக் கொண்ட பெரிய வகுப் பாகும். இவற்றின் மேலுறை அல்லது ஓடு கைட்டின் (chitin), சுண்ணாம்பும் கைட்டினும் சேர்ந்த பொருள் calcareo chitin), முற்றிலும் சுண்ணாம்புப் பொருள் முதலியவற்றில் ஏதேனும் ஒருவகைப் பொருளால் ஆனதாகும். இவை மிகவும் உறுதியான புறச்சட்டக மாக அமைகின்றன. பெரும்பாலும் இவை நீர் வாழ், செவுள்களால் (gills) சுவாசிக்கும் தாவர உண்ணிகளாகும். இவற் றின் உடல் தலையும் மார்புப் பகுதியும் இணைந்த தலை மார்புப்பகுதி (cephalothorax) என்றும், அடுத் துள்ளது வயிற்றுப்பகுதி (abdomen) என்றும் குறிப் பிடப்படும். உடற் கண்டங்களின் இணை உறுப்புகள். உணவு உட்கொள்ளுதல், சுவாசித்தல், இடப் பெயர்ச்சி, இனப்பெருக்கம் முதலிய களுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. இந்த உறுப்புகள் எண்ணிக்கையிலும், அமைப்பிலும் ணுக் காலிகளின் பல இனங்களில் அவற்றின் வாழ்க்கை முறைக்கும், தேவைக்கும் ஏற்ப மாறியுள்ளன. பல செயல் ணை பொதுவாக ஒவ்வோர் இணை உறுப்பும் இரண்டு கால் கண்டங்களால் ஆன கால் அடிக்கணு (proto கடின ஓட்டுக் கணுக்காலிகள் 313 podite), அதன்மீது இணைந்த கால்வெளிக்கணு (exopodite), கால் உட்கணு (endopodite) ஆகியவற் றால் ஆனது. அடிப்பகுதியின் மீது இரு கிளைகள் போன்ற வெளிப்பகுதியும் உட்பகுதியும் அமைந் திருப்பதால் இவ்வகை இளை இரு உறுப்பு (biramous appendage) என்று பெயர் பெறும், இணைப்புறுப்புகள், உணர்கொம்புகள் (antennae), அரைவைத் தாடைகள் (mandibles), துருவுதாடைகள் (maxillae),தாடைக்கால்கள் (maxilli pedes), நடக்கும் கால்கள் (walking legs or pereopods), நீந்தும் கால்கள் (pleopodsor swimmerets) எனப் பலவக்ைகளாக உள்ளன. இவற்றின் தலைமார்புப் பகுதியின் மேற்புறத்தில் ரு மூடி (dorsal shield)' உள்ளது. சிலவற்றில் இந்த மேல் மூடி மார்புக் கண்டங்களின் மேல் தகடு நன்றாக களுடன் இணைந்து ஒரே மூடியாக இருக்கும். இதற்குத் தலைமூடி (carapace) என்று பெயர். தலையின் முன்புறம் வரை இது நீண்டி ருக்கும். இதற்குத் தலைமுன் நீட்சி (rostrum) என்று பெயர். இவற்றில் உண்மை உடற்குழி (true coel- ous) வளர்வதில்லை. உடற்குழி இரத்தப் பெருவெளி களின் விரிவால் தோன்றி இரத்தத்தைப் பெற்று இரத்த உடற்குழி (haemocoel) எனப்படுகிறது. 12 14 17 18 13 16 7 15 10 11 1. தலைமுன் கூர் நீட்சி 2. நுண்ணுணர் கொம்பு 3. உணர்கொம்பு 4. துருவுதாடைக்கால் 5. இடுக்கி யுடையகால் 6. இடுக்கியுடையகால் 7. இடுக்கியிலாக்கால்கள் 8. நீந்து கால்கள் 9. வயிற்றுப் பக்கத்தகடு 10.வால்கொண்டி 11.வால்கால் 12. வயிற்றுக்கண்டங்கள் 13.கீல் இணைப்புகள் 14. இணைப்பு உணர்கொம்பு நுண்முள் மென்தகடு 15. செவுள்மூடி 16, தலைமுடி 17. தலை மார்பு 18.