பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 கடுக்காய்‌ (சித்தமருத்துவம்‌)

316 கடுக்காய் (சித்தமருத்துவம்) ரோஜா, கோரலீட்டா, காதலின் மாலை, பவளக் போன்ற வேறு பல கொடி களுமுண்டு. வட்டாரப் பெயர் டங்களில் இதன் தாயகம் இது பொதுவாக வெப்ப நாடுகளில் வீட்டுத் தோட்டங்கள். பூங்கா போன்ற வளர்க்கப்படுகிறது. அழகிற்காக தென் அமெரிக்காவாகும். இந்த இனத்தில் 3,4 சிற்றினங்களுண்டு. இவற்றில் கடுக்கன்பூ எனப்படும் ஆ. லெப்டோபஸ் எங்கும் இயல்பாகக் காணப்படும் வண்ணக்கொடியாகும். இன்று வெப்ப நாடுகளில் தோட்டங்களிலிருந்து விலகி. ஊர்ப் தன்னிச்சை இக்கொடி புறங்களிலும், பாதையோரங்களிலும் யாக வளர்வதைக் காணலாம். பொதுவாக, இக் கொடி முழுதும் பூத்துக் குலுங்கும். ஆதலால் சில வகைகளைத் தோட்டக்காரர்கள் வெட்க மலரிகள் (shy bloomers) என்பர். ஏனெனில் அக்கொடிகளின் நுனியில் மட்டுமே மலர்கள் காணப்படும். வளரியல்பு. கடுக்கன்பூ ஒரு பற்றுக்கொடியாகும். இதன் ஆணிவேர் ஆழமாகத் தடித்து, கெட்டியான கிழங்காக உருமாறிக் காணப்படும். தண்டு நீண்ட கணு இடைகளைக் கொண்டது. நீள் போக்கில் வரியிட்டுக் காணப்படும். இலைகள் தனித்தலை: முழுமையானவை: நீண்டகாம்புடையவை; மாற்றிலை யடுக்கமைப்புடையவை; இலையடிச் செதில் களற்றவை; இலைப்பரப்பு இதய வடிவம் அல்லது முக்கோண வடிவம் கொண்டது. நுனி கூர்மையான வால் போன்றது. விளிம்பு அலைபோலிருக்கும். இவை நரம்பு சிறகு வடிவ வலைப்பின்னலமைப்புடையது. மஞ்சரி. இலைக்கோண மஞ்சரி, மலர்கள் கணுக் களில் கொத்தாக அமைந்திருக்கும். ாஞ்சரியின் நுனியில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கொக்கிகள் காணப்படும். அவை மலர்களின் உருமாற்றமேயாகும். அவற்றின் உதவியால் கொடி தழுவி வளரமுடியும். மலர்கள். வெண்மை அல்லது இளஞ்சிவப்பாகக் காணப்படும். இருபால் மலர்கள் ஒழுங்கான, முழு மையற்ற, ஆரச்சமச்சீர் உடையவை. பூவடிச்செதில் கள் சிறியவை. மலர்கள் அல்லிகளற்றவை (apeta lous). பூவிதழ். (perianth), 5, புல்லிகள் தனித்தவை; அல்லிபோல் வண்ணம் கொண்டவை. ஒழுங்கற்றவை. வெளி அடுக்கிலுள்ள 3 புல்லிகள் பெருத்தும் உள் அடுக்கிலுள்ள 2 புல்லிகள் சிறுத்தும் உள்ளன. இம்பிரிகேட் (imbricate) என்னும் கவியும் அடுக் கிதழ் அமைப்புடையவை. மகரந்தத்தாள்கள். 8, ஒரே வட்டத்தில் அமைந்து அடியில் இணைந்து குழல்போல் காணப்படும். மகரந்தக் காம்புகளுக்கிடையே பற்கள் நீட்சிகள் காணப்படும். போன்ற 1 சூலகம். சூலிலைகள் 3, இணைந்தவை, சூலறை ஒன்று. நீண்டுள்ளன சூலகத்தண்டு 3 கிளைத்து சூலகமுடி பிறைவடிவமுடையது. கனி.உலர்வகைக் கொட்டையாகும். 3 பட்டை கொண்டது. கடுக்கன் பூங்கொடி அழகிற்காக வளர்க்கப்படுகிறது. பந்தல்கள், நுழைவாயில் வளைவு களில் வளர்க்க இது ஏற்ற கொடியாகும். ஆண்டில் இருமுறை பூத்துக்குலுங்கும். பொதுவாகச் சிவப்பு வகைகளைத் தோட்டங்களில் காணலாம். வெண்மை வகைகளை ஆ. லொ. வகை ஆல்பஸ் (A. L. var albus) என்பர். பூக்கள் சிறுத்துக் கொத்தாக இருப் பதாலும் வண்ணத்தோடு காணப்படுவதாலும், இது இகபானா (Ikabana) எனப்படும் ஜப்பானிய முறை மலர் அமைப்பிற்கு மிகவும் ஏற்ற தாவரமாகும். மேலும் இவற்றை மலர்க்கோலங்கள். மலர் வளை யங்கள் தயாரிக்கப் பயன்படுத்துவர். . மலர்களுக்கு மணம் இல்லாமையால் பெண்கள் தலையில் சூடிக்கொள்வதில்லை. கொடியில் மலர்கள் மிகுந்திருப்பதால், தேனீ வளர்ப்பவர்களுக்கு இது ஏற்ற தோட்டச் செடியாகும். கடுக்கன்பூங்கொடி. பூக்கும் நாளில் இவற்றிற்கு நீர் மிகுதியாக விட்டால் பூப்பது தொடர்ந்து நடைபெறும். பிற நாளில் நீர் மிகுதியாக'விடத் தேவையில்லை, இத்தாவரத் தைப் பொதுவாக விதைகளைக் கொண்டு பரப்புவ துண்டு. கிழங்கு தண்டு போத்துகள் மூலமும் இனப் பெருக்கம் செய்யலாம். இக்கொடி அடர்த்தியாகத் தோட்டம் முழுதும் பரவக்கூடியது. அதனால் இதை நீக்க நேரிடும்போது வேரோடு பிடுங்க வேண்டும். வேர்க்கிழங்கிலிருந்து குருத்துகள் வளர்ந்து புதுத் தளிர்கள் உண்டாகும். கடுக்காய் (சித்தமருத்துவம்) தி. ஸ்ரீகணேசன் இந்த மரத்தின் காயில் பலவகையுண்டு. காபூலிக் கடுக்காய், மஞ்சள் கடுக்காய், பிஞ்சு அல்லது கறுப்புக் கடுக்காய், சீனக் கடுக்காய். சீரகக்கடுக்காய் என்னும் வகைகளும் மேலும் இவற்றுள் ஒவ்வொன்றும் தம்மில் ஒத்திருக்கும் வெவ்வேறுவகை மரங்களில் உண்டாவதாகச் சிலர் கருதுவர். ஆனால் மேற்காணும் வகைகள் மரத்தின் காய்களென்பதே உண்மையாகும். ஆயினும். பூ சாரத்தின் தன்மையால் நிறத்திலும், பரிமாணத் திலும் வேறுபடும். சில வகைகளும் உள்ளன. ஒரு பூப்பிஞ்சிலிருந்து நன்றாக முற்றிப் பழுக்கும் வரை அதன் ஒவ்வொரு பருவத்திற்கும் வெவ்வேறு பெயர் உண்டு. பூப்பிஞ்சில் உலர்ந்து போவது சீரகக் கடுக்காய் என்றும். சிறிது பெருத்துலர்வதற்குச்